இதையெல்லாம் பொருத்தினால் 2020 மஹிந்திரா தார் வேற லெவலில் இருக்கும்... ஆக்ஸஸரீ லிஸ்ட் லீக்...

புத்தம் புதிய மஹிந்திரா தார் வருகிற அக்டோபர் 2ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. இந்த நிலையில் இந்த மஹிந்திரா தயாரிப்பிற்கான ஆக்ஸஸரீகள் குறித்த விபரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றை இந்த செய்தியில் இனி பார்ப்போம்.

இதையெல்லாம் பொருத்தினால் 2020 மஹிந்திரா தார் வேற லெவலில் இருக்கும்... ஆக்ஸஸரீ லிஸ்ட் லீக்...

டீம்பிஎச்பி செய்திதளத்தால் கிடைக்க பெற்றுள்ள இதுகுறித்த ஆவண படங்களில் 2020 தாரின் வெளிப்புறம் மற்றும் உட்புறம் என இரு புறங்களுக்கும் பயன்படுத்தக்கூடிய ஆக்ஸஸரீகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதையெல்லாம் பொருத்தினால் 2020 மஹிந்திரா தார் வேற லெவலில் இருக்கும்... ஆக்ஸஸரீ லிஸ்ட் லீக்...

இதில் பல்வேறு ட்ரிம் பாகங்களுக்கு சேர்க்கக்கூடிய க்ரோம்களும், பாடி டீகால்ஸ், அலாய் சக்கரங்கள், வீல் கவர், டிஆர்எல்கள் மற்றும் முன்பக்க ஃபாக் விளக்குகள் உள்ளிட்டவையும் அடங்குகின்றன. மேலும் இதில் பெரும்பாலனவை தாரின் டாப் ட்ரிம்மிற்கு தான் வழங்கப்பட்டுள்ளன.

இதையெல்லாம் பொருத்தினால் 2020 மஹிந்திரா தார் வேற லெவலில் இருக்கும்... ஆக்ஸஸரீ லிஸ்ட் லீக்...

உட்புறத்தில் வாடிக்கையாளர்கள் வெவ்வேறு விதமான இருக்கை கவர்கள், ஸ்டேரிங் கவர், தரை பாய், லேமினேஷன் பாய்கள் மற்றும் மேக்னெடிக் சன்ஷேட் உள்ளிட்டவற்றை கூடுதல் ஆக்ஸஸரீகளாக பொருத்தலாம் என இந்த படங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையெல்லாம் பொருத்தினால் 2020 மஹிந்திரா தார் வேற லெவலில் இருக்கும்... ஆக்ஸஸரீ லிஸ்ட் லீக்...

இவற்றுடன் ஆடியோ சிஸ்டத்தை அப்கிரேட் செய்யும் விதமாக அதில் வழங்கப்படும் ஸ்பீக்கருக்கு பியோனீர் ஹெட் யூனிட், மேற்கூரையில் பொருத்தப்பட்ட ப்ராக்கெட்ஸையும் தயாரிப்பு நிறுவனம் 2020 தாருக்கு கூடுதல் தேர்வுகளாக வழங்கவுள்ளது.

இதையெல்லாம் பொருத்தினால் 2020 மஹிந்திரா தார் வேற லெவலில் இருக்கும்... ஆக்ஸஸரீ லிஸ்ட் லீக்...

இவை மட்டுமின்றி ஆஃப்-ரோட்டிற்கு தேவையான ஆக்ஸஸரீகளும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் விதத்தில் வழங்கப்படவுள்ளன. இத்தகைய ஆக்ஸஸரீகளில் ஸ்கஃப் தட்டுகள், மட் பாதுகாப்பான்கள், அழுக்கான நிறத்தில் பாய்கள் உள்ளிட்டவை அடங்குகின்றன.

இதையெல்லாம் பொருத்தினால் 2020 மஹிந்திரா தார் வேற லெவலில் இருக்கும்... ஆக்ஸஸரீ லிஸ்ட் லீக்...

இவற்றுடன் கூடுதலாக, டயர் ரிப்பேர் கிட், டிஜிட்டல் டயர் கேஜ் மற்றும் காற்று அழுத்தி போன்றவையையும் காட்டு வழி பயணங்களுக்காக மஹிந்திரா நிறுவனம் வழங்கவுள்ளது. இவை எல்லாத்தையும் விட ஹைலைட்டாக தயாரிப்பு நிறுவனத்தால் கோ ப்ரோ கேமிராவை கூடுதல் ஆக்ஸஸரீயாக இந்த ஆஃப்-ரோடு வாகனம் பெறவுள்ளது.

இதையெல்லாம் பொருத்தினால் 2020 மஹிந்திரா தார் வேற லெவலில் இருக்கும்... ஆக்ஸஸரீ லிஸ்ட் லீக்...

இதை ஆக்ஸஸரீயை பெற விரும்புபவர்களுக்கு சில கோ ப்ரோ ஆக்‌ஷன் மேமிரா மாடல்கள் காட்டப்படும். இவற்றுடன் மஹிந்திரா நிறுவனம் ஆடை மற்றும் முகாம் உபகரணங்களையும் புதிய தாருக்கு கூடுதல் உபகரணங்களாக வழங்கவுள்ளது. இந்த ஆக்ஸஸரீகள் குறித்த விபரங்கள் அனைத்துமே அதிகாரப்பூர்வமானது கிடையாது.

இதையெல்லாம் பொருத்தினால் 2020 மஹிந்திரா தார் வேற லெவலில் இருக்கும்... ஆக்ஸஸரீ லிஸ்ட் லீக்...

அதிகாரப்பூர்வமாக 2020 மஹிந்திரா தாருக்கான ஆக்ஸஸரீகள் இன்னும் சில நாட்களில் வரவுள்ள அதன் அறிமுக தேதியில் வெளியிடப்படலாம். இத்தகைய ஆக்ஸஸரீகள் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனத்தை தாங்களே கஸ்டமைஸ்ட் செய்ய பெரிதும் உதவியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, October 1, 2020, 9:30 [IST]
English summary
Mahindra Thar 2020 To Get Adventure Series Of Accessories
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+