எதிர்பார்த்ததை விடவும் வேகமாக பிரபலமடையும் 2020 மஹிந்திரா தார்!! முன்பதிவுகள் 20 ஆயிரத்தை தாண்டியது

கடந்த அக்டோபர் 2ஆம் தேதி அறிமுகமானதில் இருந்து முன்பதிவுகளில் 2020 மஹிந்திரா தார் சக்கை போடு போட்டு வருகிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியில் பார்ப்போம்.

எதிர்பார்த்ததை விடவும் வேகமாக பிரபலமடையும் 2020 மஹிந்திரா தார்!! முன்பதிவுகள் 20 ஆயிரத்தை தாண்டியது

அறிமுகமாகி ஒரு மாதத்தை சில நாட்களுக்கு முன்பு தான் நிறைவு செய்த இந்த 2020 வாகனம் 20,000-க்கும் அதிகமான முன்பதிவுகளை பெற்றுள்ளது. இதன்மூலம் வெற்றிகரமான அறிமுகங்களுள் ஒன்றாக உருவெடுத்துள்ள 2020 தார் மஹிந்திரா நிறுவனத்தின் சிறந்த தயாரிப்பாகவும் பார்க்கப்படுகிறது.

எதிர்பார்த்ததை விடவும் வேகமாக பிரபலமடையும் 2020 மஹிந்திரா தார்!! முன்பதிவுகள் 20 ஆயிரத்தை தாண்டியது

வாகனத்திற்கு தேவை அதிகரித்து வருவதால் புதிய தலைமுறை தாருக்கான காத்திருப்பு காலத்தை 7 மாதம் வரையில் அதிகரித்துள்ளது. அதேநேரம் குறைந்தப்பட்சம் 5 மாதங்களிலேயே சில வாடிக்கையாளருக்கு வாகனம் டெலிவிரி செய்யப்படவுள்ளது. இவ்வாறான குறுகிய கால டெலிவிரிகள் தாரின் வேரியண்ட்டை பொறுத்து இருக்கும்.

எதிர்பார்த்ததை விடவும் வேகமாக பிரபலமடையும் 2020 மஹிந்திரா தார்!! முன்பதிவுகள் 20 ஆயிரத்தை தாண்டியது

இதற்காக ஒரு வலுவான வாடிக்கையாளர் இணைப்பு செயல்முறையை ஏற்படுத்தியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் கூறுகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு காத்திருப்பு காலம் குறித்த அப்டேட்களை தொடர்ந்து வழங்கும். இந்த செயல்முறை மஹிந்திராவை அதன் நாசிக் தொழிற்சாலையிலும், சப்ளையர் முனையிலிருந்தும் உற்பத்தி திறனை அதிகரிக்கவும், தேவை அதிகரிப்பை சந்திக்கவும், வாடிக்கையாளர்களுக்கான காத்திருப்பு காலத்தை குறைக்கவும் உதவுகிறது.

எதிர்பார்த்ததை விடவும் வேகமாக பிரபலமடையும் 2020 மஹிந்திரா தார்!! முன்பதிவுகள் 20 ஆயிரத்தை தாண்டியது

"புதிய தார் பெற்ற இந்த எதிர்பாராத வரவேற்பை கண்டு நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்த வரவேற்பு எங்கள் எதிர்பார்ப்புகளையும் உற்பத்தி திறன்களையும் தாண்டிவிட்டது என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும்" என்று மஹிந்திரா க்ரூப்பின் தானியங்கி பிரிவு தலைமை நிர்வாக அதிகாரி வீஜய் நக்ரா கூறினார்.

எதிர்பார்த்ததை விடவும் வேகமாக பிரபலமடையும் 2020 மஹிந்திரா தார்!! முன்பதிவுகள் 20 ஆயிரத்தை தாண்டியது

ஆரம்பத்தில், ஆலையில் இருந்து 2,000 யூனிட் தார் வெளியேற்ற திட்டமிடப்பட்டது, ஆனால் இந்த எண்ணிக்கை ஜனவரி மாதத்திற்குள் 3,000 ஆக உயர்த்தப்படும் எனவும் நக்ரா கூறினார். வாடிக்கையாளர் இணைப்பு செயல்முறை குறித்து பேசிய அவர், "இது காத்திருக்கும் காலத்தை ஒரு நியாயமான காலக்கெடுவிற்கு கொண்டு வர எங்களுக்கு உதவும்" என்றார்.

எதிர்பார்த்ததை விடவும் வேகமாக பிரபலமடையும் 2020 மஹிந்திரா தார்!! முன்பதிவுகள் 20 ஆயிரத்தை தாண்டியது

புதிய தார் வாகன சந்தையில் இவ்வாறு பிரபலமடைவதற்கு முக்கிய காரணம், இது ஒரு முழுமையான திறன் கொண்ட 4x4 வாகனமாகும். 2.0 லிட்டர் எம்ஸ்டாலியன் பெட்ரோல் என்ஜின் அல்லது 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் என்ஜின் என்ற இரண்டில் ஒன்றில் 2020 தாரை வாங்கலாம்.

எதிர்பார்த்ததை விடவும் வேகமாக பிரபலமடையும் 2020 மஹிந்திரா தார்!! முன்பதிவுகள் 20 ஆயிரத்தை தாண்டியது

அக்டோபர் 2-ல் முன்பதிவுகள் துவங்கப்பட்டதை தொடர்ந்து கடந்த நவம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து 2020 தாரின் டெலிவிரி பணிகளும் துவங்கப்பட்டுவிட்டன. முன்பதிவு செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் முதன்முறையாக கார் வாங்குபவர்கள் என்று ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம் கூறியிருந்தது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra’s All New Thar: Bookings cross 20,000 for Mahindra’s All New Thar, Waiting period crosses 6 months
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X