டாடாவின் புதிய செடான் காரின் பெயர் விபரம் கசிந்தது!

டாடா நிறுவனத்தின் புதிய செடான் காரின் பெயர் விபரம் கசிந்துள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடாவின் புதிய செடான் காரின் பெயர் விபரம் கசிந்தது!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்தடுத்து வெவ்வேறு ரகங்களில் புத்தம் புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், அடுத்து மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டிலும் களமிறங்குவதற்கு திட்டமிட்டுள்ளது.

டாடாவின் புதிய செடான் காரின் பெயர் விபரம் கசிந்தது!

இதன்படி, ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ் உள்ளிட்ட கார்களுக்கு நேரடி போட்டியான ரகத்தில் புதிய கார் மாடலை உருவாக்கி வருகிறது. இதுகுறித்து அண்மையில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

டாடாவின் புதிய செடான் காரின் பெயர் விபரம் கசிந்தது!

இந்த நிலையில், இந்த புதிய செடான் காரின் பெயர் விபரம் ஆட்டோமொபைல் தளம் மூலமாக கசிந்துள்ளது. இதன்படி, டாடாவின் புதிய செடான் காருக்கு பெரிக்ரின் என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

டாடாவின் புதிய செடான் காரின் பெயர் விபரம் கசிந்தது!

மேலும், இந்த கார் உருவாக்க திட்டப் பணிகள் X452 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுவதாகவும் அந்த தகவல் கூறுகிறது.

டாடாவின் புதிய செடான் காரின் பெயர் விபரம் கசிந்தது!

டாடாவின் புதிய செடான் கார் அண்மையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட அல்ட்ராஸ் காரின் அடிப்படையிலான செடான் மாடலாக இருக்கும். அதாவது, அல்ட்ராஸ் கார் உருவாக்கப்பட்ட அல்ஃபா ஆர்க் கட்டமைப்புக் கொள்கையில்தான் இந்த புதிய மிட்சைஸ் செடான் காரும் உருவாக்கப்படுகிறது.

டாடாவின் புதிய செடான் காரின் பெயர் விபரம் கசிந்தது!

அதேபோன்று, அல்ட்ராஸ் கார் மற்றும் டாடாவின் இ-விஷன் செடான் கான்செப்ட் காரின் டிசைன் அம்சங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு இருக்கும்.

டாடாவின் புதிய செடான் காரின் பெயர் விபரம் கசிந்தது!

இருப்பினும், டாடா டிகோர் கார் போன்று பின்புற வடிவமைப்பு நாட்ச்பேக் போன்று, சில தனித்துவமான டிசைன் அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

டாடாவின் புதிய செடான் காரின் பெயர் விபரம் கசிந்தது!

டாடா நெக்ஸான் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் இந்த புதிய மிட்சைஸ் செடான் காரிலும் பயன்படுத்தப்படும் வாய்ப்புள்ளது.

டாடாவின் புதிய செடான் காரின் பெயர் விபரம் கசிந்தது!

டாடாவின் புதிய மிட்சைஸ் செடான் காரின் புரோட்டோடைப் மாடல்கள் இந்த ஆண்டு இறுதியில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் வாய்ப்புகள் உள்ளன. அடுத்த ஆண்டு பிற்பாதியில் அல்லது 2021ம் ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய செடான் கார் மாடல் சந்தைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்புள்ளது.

Source: Indianautosblog

Most Read Articles
English summary
According to report, All new Tata premium sedan is internally called Tata Peregrin and also used ‘Tata X452’ code name for suppliers.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X