தொழிலதிபர்னா இப்படி இருக்கனும்... ஏழை விவசாயியை ஆச்சரிய பரிசால் மகிழ வைக்கும் ஆனந்த் மஹிந்திரா?

பிரபல இந்திய தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா ஏழை விவசாயி ஒருவருக்கு ஆச்சரிய பரிசை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

தொழிலதிபர்னா இப்படி இருக்கனும்... ஏழை விவசாயியை ஆச்சரிய பரிசால் மகிழ வைக்கும் ஆனந்த் மஹிந்திரா?

அண்மையில் இணையம் மற்றும் செய்திகள் என அனைத்தையும் ஒற்றை முதியவர் ஆளுகை செய்தார். தனி ஒரு ஆளாக தனது கிராமத்திற்கு தேவையான நீரை 3 கிமீ தொலைவில் இருந்து கொண்டு வந்த செயலின் காரணமாக அந்த முதியவர், அக்கிராமத்தின் ஹீரோவாக மாறினார். கிராமத்திற்கு மட்டுமின்றி இணையத்திலும் அவர் செலிபிரிட்டியாக மாறியிருக்கின்றார்.

தொழிலதிபர்னா இப்படி இருக்கனும்... ஏழை விவசாயியை ஆச்சரிய பரிசால் மகிழ வைக்கும் ஆனந்த் மஹிந்திரா?

எனவே ஒட்டுமொத்த ஊடகங்களும் அவரை பாராட்டி வருகின்றன. இந்த நிலையில், பிரபல தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா, இந்த வயசான விவசாயியிக்கு உதவிக் கரம் நீட்ட தயாராகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம், இவர் விவசாயியிக்கு உதவும் விதமாக டிராக்டர் ஒன்றை பரிசாக வழங்கி இருப்பதாக டுவிட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார்.

தொழிலதிபர்னா இப்படி இருக்கனும்... ஏழை விவசாயியை ஆச்சரிய பரிசால் மகிழ வைக்கும் ஆனந்த் மஹிந்திரா?

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "டிராக்டரை பரிசாக வழங்குவதை எனது பாக்கியமாக கருதுகின்றேன்" என கூறியுள்ளார். மேலும் அந்த பதிவில், #விவசாயி உருவாக்கியிருக்கும் கால்வாய் எஜிப்த் பிரமிடு அல்லது தாஜ் ஆகிய நினைவு சின்னங்களைப் போன்று அதிக மதிப்பு வாய்ந்தது. இதற்கு மரியாதைச் செலுத்தும் விதமாக நாங்கள் டிராக்டரை அவருக்கு பரிசாக வழங்க இருக்கின்றோம்" என்று தெரிவித்துள்ளார்.

தொழிலதிபர்னா இப்படி இருக்கனும்... ஏழை விவசாயியை ஆச்சரிய பரிசால் மகிழ வைக்கும் ஆனந்த் மஹிந்திரா?

பீஹார் மாநிலம், காயா மாவட்டத்தைச் சேர்ந்தவர் லாயுங்கி புய்யான். கொத்திவாலா எனும் கிராமத்தில் வசித்து வரும் இவர் கால்நடைகளை வளர்ப்பை பிராதன தொழிலாக செய்து வருகின்றார். இவற்றிற்கு தண்ணீர் கொடுக்க அருகிலுள்ள காட்டுப்பகுதியையே அவர் பயன்படுத்தி வருகின்றார்.

தொழிலதிபர்னா இப்படி இருக்கனும்... ஏழை விவசாயியை ஆச்சரிய பரிசால் மகிழ வைக்கும் ஆனந்த் மஹிந்திரா?

அது வெகு நீண்ட தூரத்தில் இருக்கின்ற காரணத்தினாலும், அங்கிருக்கும் பெரும்பாலான தண்ணீர் ஆற்றில் கலந்துக் வீணாகுகின்ற காரணத்தினாலும், அந்த நீரை தனது கிராமத்திற்கு கொண்டு வர அந்த முதியவர் திட்டமிட்டார். இதுகுறித்து தனது கிராமத்தினரிடம் பேசியபோது எவரும் உதவ முன்வரவில்லை.

தொழிலதிபர்னா இப்படி இருக்கனும்... ஏழை விவசாயியை ஆச்சரிய பரிசால் மகிழ வைக்கும் ஆனந்த் மஹிந்திரா?

எனவே தனி ஒரு ஆளாக இறங்கி எந்தவொரு எந்திரத்தின் உதவியும் இல்லாமல் கல்வாயை வெட்டத் தொடங்கினார். இதன்படி சுமார் 30 வருடங்களாக அந்த முதியவர் செய்த முயற்சியினால் தற்போது மலையில் இருந்து வெளியேறி வீணாகி வந்த தண்ணீர் தற்போது முதியவரின் கிரமாத்திற்கு வரத் தொடங்கியுள்ளது.

தொழிலதிபர்னா இப்படி இருக்கனும்... ஏழை விவசாயியை ஆச்சரிய பரிசால் மகிழ வைக்கும் ஆனந்த் மஹிந்திரா?

லாயுங்கி புய்யான் வசிக்கும் கிராமமானது விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை மட்டுமே நம்பியிருக்கும் கிராமம் ஆகும். ஆனால், இங்கு நீர் வசதி போதியளவு இல்லாத காரணத்தால் பெரும்பாலானோர் வேலைத் தேடி வெளி மாநிலம் மற்றும் நகரங்களை நோக்கி நகரத் தொடங்கிவிட்டனர்.

தொழிலதிபர்னா இப்படி இருக்கனும்... ஏழை விவசாயியை ஆச்சரிய பரிசால் மகிழ வைக்கும் ஆனந்த் மஹிந்திரா?

இம்மாதிரியான சூழ்நிலையிலேயே விடா முயற்சியால் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை தனியாளாக நின்று தண்ணீரை தன் கிராமத்திற்கு முதியவர் கொண்டு வந்திருக்கின்றார். முதியவரின் சுயநலமில்லாத இந்த செயலின் காரணமாகவே நாடே அவரை பாராட்டி வருகின்றது.

தொழிலதிபர்னா இப்படி இருக்கனும்... ஏழை விவசாயியை ஆச்சரிய பரிசால் மகிழ வைக்கும் ஆனந்த் மஹிந்திரா?

இந்த நிலையிலேயே மஹிந்திரா மற்றும் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா முதியவர் புய்யனுக்கு டிராக்டரை வழங்க இருப்பதாக தெரிவித்திருக்கின்றார். முதியவரின் முயற்சியால் தற்போது அவர் வசித்து வரும் கிராமத்தின் விவசாயம் மற்றும் கால் நடைகளுக்கு தடையில்லா நீர் கிடைக்கும் சூழல் உருவாகியிருக்கின்றது.

தொழிலதிபர்னா இப்படி இருக்கனும்... ஏழை விவசாயியை ஆச்சரிய பரிசால் மகிழ வைக்கும் ஆனந்த் மஹிந்திரா?

முன்னதாக, பேட்டியெடுத்த ஓர் நிரூபரிடம், முதியவர் புய்யன், "தான் ஒரு டிராக்டரைத் தவிர வேறு எதையும் விரும்பவில்லை. ஒரு டிராக்டர் கிடைத்தால், பெரிதும் உதவியாக இருக்கும்" என கூறியிருந்தார். இந்த தகவலை நிரூபர் தனது தனிப்பட்ட டுவிட்டர் பக்கத்தி ஆனந்த் மஹிந்திராவை டேக் செய்து பதிவிட்டிருந்தார்.

தொழிலதிபர்னா இப்படி இருக்கனும்... ஏழை விவசாயியை ஆச்சரிய பரிசால் மகிழ வைக்கும் ஆனந்த் மஹிந்திரா?

இதற்கு உடனடி பதிலளிக்கும் விதமாக ஆனந்த் மஹிந்திரா விவசாயிக்கு டிராக்டரை வழங்க தயாராக உள்ளோம். அவரை தொடர்பு கொள்வது என கேட்டிருந்தார்?, இதனடிப்படையிலேயே விவசாயிக்கு டிராக்டர் கிடைக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படும் மஹிந்திரா, இதுபோன்று பல நல்ல விஷயங்களைத் தொடர்ந்து செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Anand Mahindra To Gift Tractor To A Farmer Who Dug 3 KiloMetre Long Canal In Bihar. Read in Tamil.
Story first published: Sunday, September 20, 2020, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X