புதிய தார் காருக்காக ஆனந்த் மஹிந்திராவிற்கு ஐஸ் வைத்த இளைஞர்... என்ன செய்தார் தெரியுமா?

புதிய தார் காருக்காக இளைஞர் ஒருவர் இணையம் வாயிலாக ஆனந்த் மஹிந்திராவுக்கு ஐஸ் வைத்த சம்பவம் வைரலாகி வருகின்றது. அதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய தார் காருக்காக ஆனந்த் மஹிந்திராவிற்கு ஐஸ் வைத்த இளைஞர்... என்ன செய்தார் தெரியுமா?

நீண்ட கால எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மஹிந்திரா நிறுவனம், அதன் புகழ்வாய்ந்த தார் ஆஃப்-ரோடர் எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. ஆகஸ்டு 15ம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட இக்கார் வருகின்ற அக்டோபர் மாதத்தில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கும் என கூறப்படுகின்றது. இந்த நிலையில், இக்காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியுள்ளது.

புதிய தார் காருக்காக ஆனந்த் மஹிந்திராவிற்கு ஐஸ் வைத்த இளைஞர்... என்ன செய்தார் தெரியுமா?

ஆம், நடிகர்கள் முதல் முக்கிய தொழிலதிபர்கள் வரை இக்காரின் விற்பனை அறிமுகத்திற்காக காத்திருப்பதாக தங்களின் ஆவலைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், மிக சமீபத்தில் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் கலக்கிக் கொண்டிருக்கும் பிரித்விராஜ், மஹிந்திரா தார் காரை டுவிட்டர் பக்கத்தில் புகழ்ந்து தள்ளியிருந்தார். இவ்வாறே பலர் இக்கார் மீது இனம்புரியாத ஆவலைச் செலுத்தி வருகின்றனர்.

புதிய தார் காருக்காக ஆனந்த் மஹிந்திராவிற்கு ஐஸ் வைத்த இளைஞர்... என்ன செய்தார் தெரியுமா?

அந்தவகையில், சாமானியர்கள் சிலரும் தங்களது விருப்பத்தை டுவிட்டர் பக்கத்தின் வாயிலாக மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவுக்கு தெரிவித்து வருகின்றார். அவ்வாறு, மிஸ்டர் பைலட் எனும் டுவிட்டர் பயனர் ஒருவர் செய்த டுவிட் ஒன்று ஆனந்த் மஹிந்திராவை வெகுவாக கவர்ந்துள்ளது.

புதிய தார் காருக்காக ஆனந்த் மஹிந்திராவிற்கு ஐஸ் வைத்த இளைஞர்... என்ன செய்தார் தெரியுமா?

பொதுவாக, ஆனந்த் மஹிந்திரா சமூக வலைதளங்களில் மிகவும் துடிப்புடன் செயல்படும் ஓர் நபர் ஆவார். எனவே, அவரை டேக் செய்து போடப்படும் பதிவிற்கு அவரிடம் இருந்து உடனடி பதிலை நம்மால் எதிர்பார்க்க முடியும். அந்தவகையிலேயே தார் கார்குறித்த மிஸ்டர் பைலட் எனும் நபரின் கலாய்ப்பு கலந்த டுவிட்டிற்கு ஆனந்த் மஹிந்திரா வரவேற்பு மற்றும் உடனடி பதிலை அளித்துள்ளார்.

புதிய தார் காருக்காக ஆனந்த் மஹிந்திராவிற்கு ஐஸ் வைத்த இளைஞர்... என்ன செய்தார் தெரியுமா?

இந்தி திரைப்படங்களில் மிகவும் பிரபலமான படமான ஷோலே-வில் வரும் முக்கிய காட்சியைக் கொண்டே அந்த நபர் ஆனந்த் மஹிந்திராவிற்கு ஐஸ் வைத்துள்ளார். இப்படத்தில் வரும் தாகூர் எனும் கதாபாத்திரத்தின் கைகளை, வில்லன் துண்டிப்பார். கை துண்டிப்பதற்கு முன்னர் 'உன் கைகளைக் கொடுத்துவிடு தாக்கூர்' என மிகவும் ஆவேசமாக அந்த நபர் கூறுவார்.

புதிய தார் காருக்காக ஆனந்த் மஹிந்திராவிற்கு ஐஸ் வைத்த இளைஞர்... என்ன செய்தார் தெரியுமா?

இந்த நிகழ்வை மையப்படுத்தியே அந்த நபர், ஆனந்த் மஹிந்திராவின் புகைப்படத்துடன் சித்தரித்து வெளியிட்டுள்ளார். அதாவது, தாகூர் முகத்திற்கு பதிலாக ஆனந்த் மஹிந்திராவின் முகத்தை போட்டு, அவருக்கு பின்னால் இரு கார்களை நிறுத்தி வைட்டு, உங்களின் இரு கைகளையும் கொடுத்துவிடுங்கள் என கூறியிருக்கின்றார். அந்த புகைப்படத்தை நீங்கள் கீழே காணலாம்.

புதிய தார் காருக்காக ஆனந்த் மஹிந்திராவிற்கு ஐஸ் வைத்த இளைஞர்... என்ன செய்தார் தெரியுமா?

மிஸ்டர் பைலட் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தையே தனது சேமிப்பு புகைப்படங்களில் இணைக்க இருப்பதாக ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார். மஹிந்திரா தார் எஸ்யூவி கார் ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய தார் காருக்காக ஆனந்த் மஹிந்திராவிற்கு ஐஸ் வைத்த இளைஞர்... என்ன செய்தார் தெரியுமா?

ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை மஹிந்திரா நிறுவனம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. மஹிந்திரா தார் இரு விதமான எஞ்ஜின் தேர்வில் கிடைக்க இருக்கின்றது. 2.0 லிட்டர் எம்ஸ்டாலியன் டிஜிடிஐ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் ஆகிய எஞ்ஜின் தேர்வில் கிடைக்க உள்ளது.

புதிய தார் காருக்காக ஆனந்த் மஹிந்திராவிற்கு ஐஸ் வைத்த இளைஞர்... என்ன செய்தார் தெரியுமா?

இத்துடன், 6 ஸ்பீடு டார்க் கன்வர்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆகிய தேர்வுகளும் அதில் வழங்கப்பட இருக்கின்றன. புதிய தார் எஸ்யூவி அறிமுகத்தின்போது அதை ஓட்டி பார்க்கும் வாய்ப்பு ஆட்டோமொபைல் துறை பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது.

புதிய தார் காருக்காக ஆனந்த் மஹிந்திராவிற்கு ஐஸ் வைத்த இளைஞர்... என்ன செய்தார் தெரியுமா?

அவ்வாறு மஹிந்திரா தார் காரை ஓட்டிப்பார்த்த அனைவரும், புதிய தார் எஸ்யூவி அனைத்து தரப்பிலும் சிறப்பானதாக இருப்பதாக நற்சான்று வழங்கினார்கள். அவ்வாறு சோதித்து பார்த்த பலரே அக்காரை சொந்தமாக்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Anand Mahindra tweets new Thar meme viral details. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X