உலகிலேயே மிக அதிக ரேஞ்ஜ் தர கூடிய கார்... எவ்ளோனு தெரிஞ்சா இந்த காரை நெனச்சு தினம் தினம் ஏங்குவீங்க!!

உலகிலேயே அதிக ரேஞ்ஜை தரக்கூடிய மின்சார கார் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

உலகிலேயே மிக அதிக ரேஞ்ஜ் தர கூடிய கார்... எவ்ளோனு தெரிஞ்சா இந்த காரை நெனச்சு தினம் தினம் ஏங்குவீங்க!!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த நிறுவனம் அப்டெரா. இதுவே சோலாரால் இயங்கும் புதுமுக மின்சார வாகனம் ஒன்றை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் ஆயிரம் மைல்கள் வரை பயணிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளன.

உலகிலேயே மிக அதிக ரேஞ்ஜ் தர கூடிய கார்... எவ்ளோனு தெரிஞ்சா இந்த காரை நெனச்சு தினம் தினம் ஏங்குவீங்க!!

இந்த தகவல் ஒட்டுமொத்த வாகன பிரியர்களையும் மலைக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஏனெனில் ஆயிரம் மைல்கள் என்பது 1,604 கிமீ தூரம் ஆகும். தற்போது விற்பனையில் இருக்கும் எந்தவொரு மின்சார காருமே இத்தகைய மிக அதிக ரேஞ்ஜை வழங்குவதில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

உலகிலேயே மிக அதிக ரேஞ்ஜ் தர கூடிய கார்... எவ்ளோனு தெரிஞ்சா இந்த காரை நெனச்சு தினம் தினம் ஏங்குவீங்க!!

எனவேதான் இதன் ரேஞ்ஜைக் கண்டு அனைவரும் ஆச்சரியமடைய தொடங்கியுள்ளனர். குறிப்பாக, ஒட்டுமொத்த உலகையுமே இந்த தகவல் பிரம்மிப்பில் ஆழ்த்தியிருக்கின்றது. நிதி பற்றாக்குறை போன்ற ஒரு சில காரணங்களால் கடந்த 2011ம் ஆண்டு அனைத்து செயல்பாட்டுகளுக்கும் தற்காலிக முற்று புள்ளியை அப்டெரா வைத்திருந்தது.

உலகிலேயே மிக அதிக ரேஞ்ஜ் தர கூடிய கார்... எவ்ளோனு தெரிஞ்சா இந்த காரை நெனச்சு தினம் தினம் ஏங்குவீங்க!!

இதையடுத்து, தற்போது அந்த நிறுவனம் மீண்டும் வாகன உற்பத்தியில் களமிறங்கியிருக்கின்றது. ஆரம்பமே அசத்தும் வகையில் இந்த பிரம்மிக்க வைக்கும் தயாரிப்பை அது தற்போது வெளியீடு செய்திருக்கின்றது.

உலகிலேயே மிக அதிக ரேஞ்ஜ் தர கூடிய கார்... எவ்ளோனு தெரிஞ்சா இந்த காரை நெனச்சு தினம் தினம் ஏங்குவீங்க!!

இது ஓர் மூன்று சக்கர வாகனம் ஆகும். இதில் இருவர் மட்டுமே அமர்ந்து செல்கின்ற வகையில் இருக்கை அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், ஆயிரம் மைல்கள் ரேஞ்ஜை வழங்குகின்ற வகையில் 100kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கினை அது பெறவிருக்கின்றது. இத்துடன், நாள் ஒன்றிற்கு 72 கிமீ தூரம் வரை பயணிக்கின்ற வகையில் சோலார் பேனல் வழங்கப்பட்டுள்ளது.

உலகிலேயே மிக அதிக ரேஞ்ஜ் தர கூடிய கார்... எவ்ளோனு தெரிஞ்சா இந்த காரை நெனச்சு தினம் தினம் ஏங்குவீங்க!!

இந்த சோலார் பேனல் காரின் பின் பகுதியில் இருக்கும்படி தயாரிப்பு நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த சிறப்பு வசதியினால் வாகனத்தை சார்ஜ் செய்ய சார்ஜிங் மையங்களை நாடும் சூழ்நிலை தவிர்க்கப்பட்டுள்ளது. இதுபோன்ற எக்கசக்கமான ஆச்சரியமளிக்கும் வசதிகள் புதுமுக மூன்று சக்கர வாகனத்தில் இடம்பெற இருக்கின்றன. அதேசமயம், இதன் உயர்நிலை மாடலிலேயே அதிகப்படியான தொழில்நுட்ப வசதிகளை அப்டெரா வழங்க இருக்கின்றது.

உலகிலேயே மிக அதிக ரேஞ்ஜ் தர கூடிய கார்... எவ்ளோனு தெரிஞ்சா இந்த காரை நெனச்சு தினம் தினம் ஏங்குவீங்க!!

கார் போன்று உருவத்தை இந்த வாகனம் கொண்டிருந்தாலும் நாங்கள் முன்னரே கூறியதைப் போல் இதில் மூன்று சக்கரங்கள் மட்டுமே இடம்பெற இருக்கின்றன. இதன் முன்பக்க வீல்களுக்கே இயங்கும் தன்மைக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் டாப் ஸ்பீடு பற்றிய தகவல் வெளியாகவில்லை. அதேசமயம், வெறும் 5.5 செகண்டுகளில் இது நூறு கிலோமீட்டர் எனும் வேகத்தை எட்டும் என்பது மட்டும் தெரியவந்துள்ளது.

உலகிலேயே மிக அதிக ரேஞ்ஜ் தர கூடிய கார்... எவ்ளோனு தெரிஞ்சா இந்த காரை நெனச்சு தினம் தினம் ஏங்குவீங்க!!

புதிய மூன்று சக்கர அப்டெரா எலெக்ட்ரிக் வாகனம் வெவ்வேறு பேட்டரி பேக்கில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. அந்தவகையில், அமெரிக்க டாலர்கள் மதிப்பில் $25,900 முதல் $46,000 அதிகமான விலையில் அது விற்பனைக்கு வரவுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இதன் ஆரம்ப விலை 19.05 லட்ச ரூபாயாகும். இது தோராயமானப்பாகும். பேட்டரி பேக் மற்றும் வேரியண்ட் தேர்வைப் பொருத்தே இதன் விலை நிர்ணயிக்கப்பட இருக்கின்றது.

உலகிலேயே மிக அதிக ரேஞ்ஜ் தர கூடிய கார்... எவ்ளோனு தெரிஞ்சா இந்த காரை நெனச்சு தினம் தினம் ஏங்குவீங்க!!

தற்போது வரை வெளியாகியிருக்கும் தகவலின்படி, பாராடிஜ்ம் (Paradigm) மற்றும் பிரடிஜ்ம் பிளஸ் (Pradigm+) ஆகிய இரு விதமான வேரியண்டுகளிலேயே இக்கார் கிடைக்க இருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தவிர வேறெந்த தகவலும் புதிய மின்சார வாகனம் பற்றி வெளியாகவில்லை. அதேசமயம், 25.0 kWh முதல் 100.0 kWh வரையிலான பேட்டரி பேக்கிலும் இந்த மின்சார வாகனம் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.

Most Read Articles

English summary
Aptera reveals Three-Wheeler Solar Electric car: This car Promises 1,600 km of Range on a Single Charge. Read In Tamil.
Story first published: Monday, December 14, 2020, 19:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X