நவீன அம்சங்களுடன் அசோக் லேலண்ட் பாஸ் டிரக் விற்பனைக்கு அறிமுகம்!

அசோக் லேலண்ட் நிறுவனம் பாஸ் என்ற புதிய நடுத்தர வகை டிரக் மாடலை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த டிரக்கின் முக்கிய அம்சங்கள், விலை விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

நவீன அம்சங்களுடன் அசோக் லேலண்ட் பாஸ் டிரக் விற்பனைக்கு அறிமுகம்!

நாட்டின் முன்னணி கனரக வாகனத் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் அசோக் லேலண்ட் சந்தைப் போட்டியை சமாளிக்கும் விதத்தில் புதிய வாகனங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், நடுத்தர வகை டிரக் சந்தையில் பாஸ் என்ற புதிய வாகனத்தை விற்பனைக்கு களமிறக்கி உள்ளது.

நவீன அம்சங்களுடன் அசோக் லேலண்ட் பாஸ் டிரக் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய அசோக் லேலண்ட் பாஸ் டிரக் மாடலானது LE மற்றும் LX என இரண்டு வேரியண்ட் தேர்வுகளில் கிடைக்கும். இதன் ஆரம்ப ரக வேரியண்ட்டிற்கு ரூ.18 லட்சம் எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலையாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

நவீன அம்சங்களுடன் அசோக் லேலண்ட் பாஸ் டிரக் விற்பனைக்கு அறிமுகம்!

பார்சல் சர்வீஸ், கூரியர் நிறுவனங்களுக்கான போக்குவரத்து, விவசாய விளை பொருட்கள் போக்குவரத்து, கோழிப்பண்ணை, இ-காமர்ஸ், உணவுப் பொருட்கள் போக்குவரத்து, வாகன உதிரிபாகங்கள் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கு இந்த புதிய டிரக் மாடல் ஏற்றதாக இருக்கும்.

நவீன அம்சங்களுடன் அசோக் லேலண்ட் பாஸ் டிரக் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த புதிய டிரக் மாடலானது 14 அடி முதல் 24 அடி வரையிலான வீளம் கொண்ட கேரியர் கொண்ட மாடல்களில் கிடைக்கும். மேலும், பயன்பாட்டுக்கு தக்கவாறு வெவ்வேறு வகையான பாடி கட்டமைப்பு கொண்ட மாடல்களிலும் கிடைக்கும் என அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது.

நவீன அம்சங்களுடன் அசோக் லேலண்ட் பாஸ் டிரக் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய அசோக் லேலண்ட் பாஸ் எல்இ மற்றும் எல்எக்ஸ் மாடல்களானது i-Gen6 பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பம் கொண்ட எஞ்சின் மூலமாக 7 சதவீதம் அதிக எரிபொருள் சிக்கனம், கூடுதல் ஆயுட்காலத்தை டயர்கள் பெறுவதற்கான வாய்ப்பு, குறைவான பராமரிப்பு மூலமாக அதிக சர்வீஸ் இடைவெளி ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

நவீன அம்சங்களுடன் அசோக் லேலண்ட் பாஸ் டிரக் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த டிரக்கின் கேபின் அதிக வசதிகள் கொண்டதாக முழுமையாக கட்டமைக்கப்பட்டு வருகிறது. இதனால், பிற டிரக் மாடல்கள் போன்று வெளியில் சென்று கூடுதல் வசதிகளை சேர்க்க அவசியம் இருக்காது.

நவீன அம்சங்களுடன் அசோக் லேலண்ட் பாஸ் டிரக் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய அசோக் லேலண்ட் பாஸ் டிரக் மாடல்கள் அதிக தூரம் செல்வதற்கான எரிபொருள் கலன், எரிபொருள் சிக்கனம் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அம்சங்களிலும் சிறந்தவையாக இந்த மாடல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 6 ஆண்டுகளுக்கு 4 லட்சம் கிலோமீட்டர்களுக்கான வாரண்டி, 24 மணிநேர அவசர உதவித் திட்டம் ஆகியவையும் வழங்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Ashok Leyland has launched Boss LE and LX truck model In India.
Story first published: Friday, October 23, 2020, 10:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X