நஷ்டங்களை சந்திந்த போதிலும் அரசாங்கத்திற்கு ரூ.41 லட்சத்தை வாரி வழங்கியுள்ள அசோக் லேலண்ட்...

நாடு முழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக அசோக் லேலண்ட் நிறுவனத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பிரதமர் நிவாரண நிதியில் ரூ.41 லட்சத்தை செலுத்தியுள்ளனர். இதுகுறித்த தகவல்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

நஷ்டங்களை சந்திந்த போதிலும் அரசாங்கத்திற்கு ரூ.41 லட்சத்தை வாரி வழங்கியுள்ள அசோக் லேலண்ட்...

கொரோனா வைரஸ் இந்தியா உள்பட பல நாடுகளில் உயிரிழப்புகளையும், அந்தந்த நாடுகளின் பொருளாதாரத்தையும் பெரிய அளவில் பாதித்து இருந்தாலும் இதனால் சில நன்மைகளும் ஏற்பட்டு உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

நஷ்டங்களை சந்திந்த போதிலும் அரசாங்கத்திற்கு ரூ.41 லட்சத்தை வாரி வழங்கியுள்ள அசோக் லேலண்ட்...

பல கோடி ரூபாய் செலவில் மீட்பு பணிகள் பல சமூக ஆர்வலர்களின் உழைப்பு என எவ்வித முயற்சியிலும் தூய்மைப்படாத கங்கை நதி இந்த ஒரு மாத ஊரடங்கினால் பரிசுத்தமானது போல இந்த கஷ்டமான காலத்தில் சில உண்மையாக உதவி செய்பவர்களின் முகங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

நஷ்டங்களை சந்திந்த போதிலும் அரசாங்கத்திற்கு ரூ.41 லட்சத்தை வாரி வழங்கியுள்ள அசோக் லேலண்ட்...

இதனால் உண்மையான எதிரி யார் யார் என்பதையும் நம்மால் அறிய முடிகிறது. சரி நாம் விஷயத்திற்கு வருவோம். இந்தியாவில் பெரும்பான்மையான தொழில் நிறுவனங்களும் அவற்றின் சங்கங்களும் கொரோனா பிடியில் இருந்து மக்களை மீட்க அரசாங்கத்திற்கு பண உதவிகளை வழங்கி வருவதை போல் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட்டும் தனது பங்கிற்கு ரூ.41 லட்சத்தை பிரதமர் நிவாரண நிதியின் மூலமாக வழங்கியுள்ளது.

நஷ்டங்களை சந்திந்த போதிலும் அரசாங்கத்திற்கு ரூ.41 லட்சத்தை வாரி வழங்கியுள்ள அசோக் லேலண்ட்...

இந்த தொகை இந்நிறுவனத்தின் தொழிலாளர்களாலும், அவர்களது குடும்பத்தினராலும் சேகரிக்கப்பட்ட பணம் ஆகும். இதுமட்டுமின்றி இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க அசோக் லேலண்ட் நிறுவனம் பல விதங்களில் அரசாங்கத்துடன் துணை நின்று வருகிறது.

நஷ்டங்களை சந்திந்த போதிலும் அரசாங்கத்திற்கு ரூ.41 லட்சத்தை வாரி வழங்கியுள்ள அசோக் லேலண்ட்...

இந்த வகையில் இந்நிறுவனத்தின் 10 வாகனங்கள் ஓட்டுனர்களுடன் தமிழ்நாடு சுகாதார துறையின் அவசர பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி மாஸ்குகள், மீண்டும் மீண்டும் பயன்படுத்தா வகையிலான கையுறைகள், லிக்யூடு ஹேண்ட்வாஷ், சுத்திகரிப்பான்கள் மற்றும் பாடி சூட்கள் உள்ளிட்டவற்றையும் அரசு சுகாதார பணியாளர்களுக்காக வழங்கியுள்ளது.

நஷ்டங்களை சந்திந்த போதிலும் அரசாங்கத்திற்கு ரூ.41 லட்சத்தை வாரி வழங்கியுள்ள அசோக் லேலண்ட்...

மேலும் எந்தவொரு நோய்தொற்றும் இல்லாமல் அரசாங்க சுகாரதார மற்றும் தூய்மை பணியாளர்கள் பணியாற்ற பாதுகாப்பான இரசாயன பாதுகாப்பு மேலாடைகள் மற்றும் இரசாயன பாதுகாப்பு கண்ணாடிகளையும் அசோக் லேலண்ட் நிறுவனம் கொடுத்து வருகிறது.

நஷ்டங்களை சந்திந்த போதிலும் அரசாங்கத்திற்கு ரூ.41 லட்சத்தை வாரி வழங்கியுள்ள அசோக் லேலண்ட்...

மருத்துவமனைகளில் மின்சார துண்டிப்பு பிரச்சனைகள் எதுவும் நிகழாமல இருக்க சில மருத்துவனைகளில் தொடர் மின்சார விநியோகத்தை இந்நிறுவனம் உறுதி செய்து வருகிறது. இதன்படி சென்னை குரோம்பேட்டை மற்றும் திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமைனைகள் உள்பட மதுரை மருத்துவ கல்லூரியும் இந்நிறுவனத்தின் மின்சாரத்தை பெற்று வருகின்றன.

நஷ்டங்களை சந்திந்த போதிலும் அரசாங்கத்திற்கு ரூ.41 லட்சத்தை வாரி வழங்கியுள்ள அசோக் லேலண்ட்...

இவற்றுடன் அசோக் லேலண்ட் தொழிற்சாலைகளின் சமையல் அறையில் சமைக்கப்படும் உணவுகள் தினமும் காவலர்கள், மருத்துவர்கள் மற்றும் சுகாதார உதவியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தொழிலாளர்களும் டீலர்ஷிப் நிர்வாகிகளும் தங்களது பங்கிற்கு தங்களது சுற்று வட்டாரங்களில் லாக்டவுன் தளர்விற்காக காத்திருப்பில் உள்ள வெளியூர் லாரி ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் ரேஷன் பொருட்களை வழங்கி வருகின்றனர்.

நஷ்டங்களை சந்திந்த போதிலும் அரசாங்கத்திற்கு ரூ.41 லட்சத்தை வாரி வழங்கியுள்ள அசோக் லேலண்ட்...

இதில் இவர்களது பங்கு மட்டுமில்லாமல் இத்தகைய பொருட்களை தேவையான பகுதிகளுக்கு எடுத்து செல்லும் லாரி ஓட்டுனர்களின் பங்கும் இன்றியமையாதது. அசோக் லேலண்ட் நிறுவனம் கடந்த சில வருடங்களாக பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்து வருவது அனைவருக்கும் தெரிந்தது தான். இருப்பினும் இவ்வாறான உதவிகளை இந்நிறுவனம் செய்து வருவது உண்மையில் பாராட்டத்தக்கதே.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Ashok Leyland employees contribute Rupees 41 Lakhs to PM CARES Fund
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X