விரைவில் விற்பனைக்கு வரும் ஆடியின் மிக குறைவான விலை புதிய க்யூ2 எஸ்யூவி!

ஆடி கார் நிறுவனத்தின் மிக குறைவான விலை சொகுசு எஸ்யூவி மாடல் மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

விரைவில் விற்பனைக்கு வரும் ஆடியின் மிக குறைவான விலை புதிய க்யூ2 எஸ்யூவி!

கொரோனா பிடியில் இருந்து ஆட்டோமொபைல் துறை மெல்ல மீண்டு வருகிறது. கடந்த மாத விற்பனை கார் நிறுவனங்களுக்கு அதிக நம்பிக்கையை தரும் விதத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வரும் வகையில், சொகுசு கார் நிறுவனங்கள் தொடர்ந்து புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.

விரைவில் விற்பனைக்கு வரும் ஆடியின் மிக குறைவான விலை புதிய க்யூ2 எஸ்யூவி!

அந்த வகையில், ஆடி கார் நிறுவனம் இந்தியாவில் மீண்டும் நம்பர்-1 இடத்தை பிடிக்கும் விதத்தில், புதிய மாடல்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. ஆடி க்யூ8, ஏ8எல், ஆர்எஸ்7 மற்றும் ஆர்எஸ் க்யூ8 ஆகிய மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

விரைவில் விற்பனைக்கு வரும் ஆடியின் மிக குறைவான விலை புதிய க்யூ2 எஸ்யூவி!

இந்த வரிசையில், அடுத்ததாக தனது விலை குறைவான க்யூ2 சொகுசு எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகப்படுத்த ஆடி கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், ஆடி க்யூ2 எஸ்யூவி மீதான ஆவலையும், எதிர்பார்ப்பையும் அதிகரிக்கும் விதத்தில், புதிய டீசரையும் வெளியிட்டு இருக்கிறது.

எனவே, மிக மிக விரைவில் க்யூ2 எஸ்யூவி இந்தியாவில் களமிறக்கப்படுவது உறுதியாகி இருக்கிறது. அதாவது, இந்த மாதமே வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

விரைவில் விற்பனைக்கு வரும் ஆடியின் மிக குறைவான விலை புதிய க்யூ2 எஸ்யூவி!

முதல்கட்டமாக 2,500 யூனிட்டுகள் க்யூ2 எஸ்யூவிகளை இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்ய ஆடி கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, வரவேற்பை பொறுத்து இந்தியாவிலேயே அசெம்பிள் செய்வதற்கான வாய்ப்பும் இருக்கிறது.

விரைவில் விற்பனைக்கு வரும் ஆடியின் மிக குறைவான விலை புதிய க்யூ2 எஸ்யூவி!

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் எம்க்யூபி என்ற கட்டமைப்புக் கொள்கையில்தான் ஆடி க்யூ2 எஸ்யூவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. வழக்கம்போல் ஆடி கார்களுக்கு உரித்தான பிரம்மாண்டமான முகப்பு க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள் ஆகியவை முகப்பை வசீகரமாக காட்டுகின்றன.

விரைவில் விற்பனைக்கு வரும் ஆடியின் மிக குறைவான விலை புதிய க்யூ2 எஸ்யூவி!

கவர்ச்சிகரமான அலாய் வீல்கள், கச்சிதமான பக்கவாட்டுத் தோற்றம், சதுர வடிவிலான டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள் ஆகியவை இதற்கு தனித்துவமான தோற்றத்தை தருகின்றன.

விரைவில் விற்பனைக்கு வரும் ஆடியின் மிக குறைவான விலை புதிய க்யூ2 எஸ்யூவி!

புதிய ஆடி க்யூ2 எஸ்யூவியில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படும். ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் அதே எஞ்சின்தான் இந்த காரிலும் இடம்பெற்றுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 190 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

விரைவில் விற்பனைக்கு வரும் ஆடியின் மிக குறைவான விலை புதிய க்யூ2 எஸ்யூவி!

இந்த காரில் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 6.5 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 228 கிமீ வேகம் வரை தொடும் வல்லமை கொண்டது.

Most Read Articles

மேலும்... #ஆடி #audi
English summary
Audi is released teaser video of Q2 SUV ahead of its launch in India.
Story first published: Tuesday, September 8, 2020, 10:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X