ஆடி க்யூ2 எஸ்யூவியின் வேரியண்ட் மற்றும் எஞ்சின் விபரங்கள் கசிந்தன!

ஆடி கார் நிறுவனத்தின் ஆரம்ப ரக சொகுசு எஸ்யூவி மாடலாக வர இருக்கும் புதிய க்யூ2 கார் பற்றிய புதிய விபரங்கள் வெளியாகி இருக்கின்றன. அதனை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆடி க்யூ2 எஸ்யூவியின் வேரியண்ட் மற்றும் எஞ்சின் விபரங்கள் கசிந்தன!

இந்தியாவின் சொகுசு ரக எஸ்யூவி மார்க்கெட்டில் ஆடி கார் மாடல்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், சந்தைப் போட்டியை மனதில் வைத்து ஆரம்ப ரக சொகுசு எஸ்யூவி மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த ஆயத்தமாகி வருகிறது ஆடி கார் நிறுவனம்.

ஆடி க்யூ2 எஸ்யூவியின் வேரியண்ட் மற்றும் எஞ்சின் விபரங்கள் கசிந்தன!

ஆம். அந்த நிறுவனத்தின் க்யூ2 எஸ்யூவி விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், முன்பதிவு துவங்கப்பட்டது. இந்த புதிய காருக்கு ரூ.2 லட்சத்தை செலுத்தி ஆன்லைன் அல்லது டீலர் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

ஆடி க்யூ2 எஸ்யூவியின் வேரியண்ட் மற்றும் எஞ்சின் விபரங்கள் கசிந்தன!

இந்த புதிய மாடலின் வேரியண்ட்டுகள் மற்றும் தொழில்நுட்ப விபரங்கள் டீம் பிஎச்பி தளம் மூலமாக வெளியுலகுக்கு கசிந்துள்ளது.

ஆடி க்யூ2 எஸ்யூவியின் வேரியண்ட் மற்றும் எஞ்சின் விபரங்கள் கசிந்தன!

புதிய ஆடி க்யூ2 எஸ்யூவி 5 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. ஸ்டான்டர்டு, பிரிமீயம், பிரிமீயம் ப்ளஸ் 1, பிரிமீயம் ப்ளஸ் 2 மற்றும் டெக்னாலஜி ஆகிய வேரியண்ட்டுகளில் வர இருக்கிறது.

இந்த காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், கருப்பு வண்ண பம்பர்கள், செவ்வக வடிவிலான டெயில் லைட்டுகள், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 17 அங்குல அலாய் சக்கரங்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

ஆடி க்யூ2 எஸ்யூவியின் வேரியண்ட் மற்றும் எஞ்சின் விபரங்கள் கசிந்தன!

புதிய ஆடி க்யூ2 எஸ்யூவியில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் இடம்பெற்றிருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 187 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு எஸ் ட்ரோனிக் டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் தேர்வில் எதிர்பார்க்கப்படுகிறது. ஆடியின் க்வாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் வழங்கப்படும். மணிக்கு 228 கிமீ வேகம் வரை செல்லும் திறனை பெற்றிருக்கும்.

ஆடி க்யூ2 எஸ்யூவியின் வேரியண்ட் மற்றும் எஞ்சின் விபரங்கள் கசிந்தன!

இந்த கார் ரூ.35 லட்சத்தையொட்டிய விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும். மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ காருடன் நேரடியாக மோதும் வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 7, 2020, 6:30 [IST]
English summary
India spec Audi Q2 SUV variants, Specs and Features details leaked ahead of launch.
மேலும்... #ஆடி #audi
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+