வெடிக்குண்டு வைத்தாலும் இந்த காரை தகர்க்க முடியாது போலருக்கே... பாதுகாப்பு அம்சங்களுடன் 2020 ஆடி ஏ8

ஆடி நிறுவனம் புதிய ஏ8 எல் லக்சரி மாடலின் பாதுகாப்பான வெர்சனை ரஷ்யாவில் வெளியிட்டுள்ளது. இந்த வகையில் ஆடி ஏ8 எல் மாடல் பெற்றிருக்கும் பாதுகாப்பு அம்சங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

வெடிக்குண்டு வைத்தாலும் இந்த காரை தகர்க்க முடியாது போலருக்கே... பாதுகாப்பு அம்சங்களுடன் 2020 ஆடி ஏ8 எல்...

ஏ8 எல் செக்யூரிட்டி என பெயரிடப்பட்டுள்ள இந்த கார், விஆர்10 நிலையிலான பாலிஸ்டிக்ஸ் பாதுகாப்பையும், உரிமையாளர்கள் காரினை பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பு சிஸ்டங்களின் தொகுப்பையும் பெற்றுள்ளது.

வெடிக்குண்டு வைத்தாலும் இந்த காரை தகர்க்க முடியாது போலருக்கே... பாதுகாப்பு அம்சங்களுடன் 2020 ஆடி ஏ8 எல்...

மற்றப்படி தோற்றத்தின் அடிப்படையில் இந்த ஏ8 எல் செக்யூரிட்டி மாடல் வழக்கமான ஏ8 காரை தான் ஒத்து காணப்படுகிறது. ஆனால் கூடுதலாக க்ரில் மற்றும் பின்புற விண்ட்ஸ்க்ரீனில் நீல நிறத்தில் ஸ்ட்ரோப் லைட்களும், ஜன்னல்களில் பாதுகாப்பிற்கு அவற்றை சுற்றி தடிமனான கருப்பு நிற அவுட்லைனிங்கும் கொடுக்கப்பட்டுள்ளன.

வெடிக்குண்டு வைத்தாலும் இந்த காரை தகர்க்க முடியாது போலருக்கே... பாதுகாப்பு அம்சங்களுடன் 2020 ஆடி ஏ8 எல்...

காரின் பாடி ஷெல்லிற்கு பின்புறத்தில் அதிக வலிமை கொண்ட ஸ்டீல் மற்றும் ஸ்பெஷல் அலுமினியம் அலாய்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் கண்ணாடிகளும் எறிபொருள்களில் இருந்து பாதுகாக்கும் விதத்தில் மல்டி-லேயர்டுகளை பெற்றுள்ளது. உட்புற கேபின் வழக்கமான ஏ8 மாடலில் விட கூடுதலான லக்சரி தோற்றத்தை ஏற்றுள்ளது.

வெடிக்குண்டு வைத்தாலும் இந்த காரை தகர்க்க முடியாது போலருக்கே... பாதுகாப்பு அம்சங்களுடன் 2020 ஆடி ஏ8 எல்...

இதில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களாக காருக்கு வெளியே இருப்பவர்களிடம் கலந்துரையாட ஸ்பீக்கர்களுடன் இண்டர்காம் சிஸ்டம், காருக்கு அடியில் துளைகளுடன் ஃபயர் சப்ரெஸ்ஸன் சிஸ்டம் மற்றும் கதவுகள் அடைப்பட்டு கொண்டால் வெளியேறுவதற்கு அவசர கால வெளியேறும் சிஸ்டம் உள்ளிட்டவை உள்ளன.

வெடிக்குண்டு வைத்தாலும் இந்த காரை தகர்க்க முடியாது போலருக்கே... பாதுகாப்பு அம்சங்களுடன் 2020 ஆடி ஏ8 எல்...

இவற்றுடன் கொடுக்கப்பட்டுள்ள அவசர கால தூய்மையான காற்று சிஸ்டம் பயணிகளுக்கு அந்தந்த சூழ்நிலையில் தேவைப்படும் தூய்மையான காற்றை சரியான அளவில் கொடுக்கும். இதுமட்டுமின்றி காரின் இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தின் மூலமாக தனிப்பட்ட டோர் அன்லாக் சிஸ்டத்தையும் ஏ8 எல் செக்யூரிட்டி மாடல் கொண்டுள்ளது.

வெடிக்குண்டு வைத்தாலும் இந்த காரை தகர்க்க முடியாது போலருக்கே... பாதுகாப்பு அம்சங்களுடன் 2020 ஆடி ஏ8 எல்...

இந்த பாதுகாப்பு தொகுப்பில் சுய முத்திரையிடப்பட்ட எரிபொருள் டேங்க், தட்டையான டயர்கள் உள்ளிட்டவையும் அடங்குகின்றன. இந்த டயர்கள் பஞ்சராகி போனாலும் காரை 80 கிமீ தூரத்திற்கு அதிகப்பட்சமாக 80kmph என்ற வேகத்தில் இயக்கி செல்ல முடியும். இவை மட்டுமில்லாமல் காரின் பூட்டில் முக்கியமான பாதுகாப்பு மற்றும் தகவல்தொடர்பு ஹார்ட்வேர்கள் அடங்கிய தகவல்தொடர்புகள் பெட்டியையும் இந்த செக்யூரிட்டி மாடல் பெற்றுள்ளது.

வெடிக்குண்டு வைத்தாலும் இந்த காரை தகர்க்க முடியாது போலருக்கே... பாதுகாப்பு அம்சங்களுடன் 2020 ஆடி ஏ8 எல்...

பேக்அப் எலக்ட்ரிகல் சிஸ்டத்தையும் ஆடி நிறுவனத்தின் இந்த கார் கொண்டுள்ளது. இத்தகைய கூடுதல் பாதுகாப்பு சிஸ்டங்கள் காரின் எடையை வெகுவாக பாதித்துள்ளன. அதாவது வழக்கமான ஏ8 மாடல் 2 டன் அளவில் எடையினை கொண்டுள்ள நிலையில் இந்த செக்யூரிட்டி மாடல் சுமார் 3.9 வரையிலான எடையில் உள்ளது.

வெடிக்குண்டு வைத்தாலும் இந்த காரை தகர்க்க முடியாது போலருக்கே... பாதுகாப்பு அம்சங்களுடன் 2020 ஆடி ஏ8 எல்...

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு ஏ8 எல் செக்யூரிட்டி மாடல் 4.0 லிட்டர் டர்போ-சார்ஜ்டு வி8 என்ஜினை கொண்டுள்ளது. இந்த என்ஜின் அமைப்பு தான் ஆடி எஸ்8 மாடலிலும் உள்ளது. அதிகப்பட்சமாக 571 பிஎச்பி பவரையும், 800 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 20, 2020, 22:30 [IST]
English summary
2020 Audi A8 L Security revealed
மேலும்... #ஆடி #audi
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+