டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் ஆட்டோ எக்ஸ்போ லைவ் அப்டேட்ஸ்!
ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் புதிய கார்கள் மற்றும் பைக்குகள் மற்றும் இதர நிகழ்வுகளை வாசகர்களுக்கு நாளை முதல் உடனுக்குடன் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் வழங்க இருக்கிறோம்.

இந்தியாவின் மிகப்பெரிய வாகனக் கண்காட்சி கிரேட்டர் நொய்டாவில் நாளை துவங்கி 12ந் தேதி வரை நடக்க இருக்கிறது. முதல் இரண்டு நாட்கள் பத்திரிக்கையாளர்களுக்கான நிகழ்ச்சிகள் நடக்க இருக்கின்றன. வரும் 7ந் தேதி முதல் பொது பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட இருக்கிறது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் வர இருக்கும் புதிய கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் பற்றிய முன்னோட்டமாக இந்த ஆட்டோ எக்ஸ்போ அமையும் என்பதால் பெரும் ஆவல் இருந்து வருகிறது.

மொத்தம் 50க்கும் மேற்பட்ட புதிய கார் மற்றும் கான்செப்ட் மாடல்கள் இந்த ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று, இருசக்கர வாகன வகையிலும் ஏராளமான புதிய மாடல்கள் வர இருக்கின்றன.

மேலும், பிஎஸ்-6 மாடல்கள் மற்றும் ஏராளமான எலெக்ட்ரிக் கார் மாடல்களும் இந்த ஆட்டோ எக்ஸ்போவில் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அடுத்த 10 ஆண்டுகளில் இந்திய ஆட்டோமொபைல் துறை எவ்வாறு மாறப்போகிறது என்பதன் ஆரம்ப புள்ளியாகவும் இந்த ஆட்டோ எக்ஸ்போ அமையும்.

இந்த நிலையில், ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படும் புதிய கார், பைக்குகள், காட்சிப்படுத்தப்பட இருக்கும் கான்செப்ட் மாடல்கள் மற்றும் இதர தொழில்நுட்பங்கள் குறித்த செய்திகள், வீடியோக்களை டிரைவ்ஸ்பார்க் தளத்தில் வாசகர்கள் உடனுக்குடன் பெறலாம்.

நாளை காலை முதல் ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வுகள் குறித்த செய்திகள், வீடியோக்களை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்திலும், எமது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக், டிவிட்டர், ஹெலோ மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதள பக்கங்களிலும் வாசகர்கள் உடனுக்குடன் பெற முடியும்.

ஆட்டோ எக்ஸ்போ செய்திகள், படங்கள், வீடியோக்களை வழங்குவதற்காக எமது டிரைவ்ஸ்பார்க் டீம் டெல்லியில் முகாமிட்டுள்ளது. ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வுகளை உடனுக்குடன் பெறுவதற்கு டிரைவ்ஸ்பார்க் தமிழ், ஒன் இந்தியா தமிழ் தளங்களிலும், எமது சமூக வலைதள பக்கங்களிலும் இணைந்திருங்கள்.


Click it and Unblock the Notifications








