ஒரு முறை சார்ஜ் செய்தால் 271 கிலோ மீட்டர்கள் பயணிக்கலாம்! ரெனால்ட் க்விட் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

ஆட்டோ எக்ஸ்போவில் ரெனால்ட் க்விட் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 271 கிலோ மீட்டர்கள் பயணிக்கலாம்! ரெனால்ட் க்விட் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

இன்று (பிப்ரவரி 5) தொடங்கிய ஆட்டோ எக்ஸ்போ 2020 திருவிழாவில், ரெனால்ட் க்விட் எலெக்ட்ரிக் கார் வெளியிடப்பட்டது. ரெனால்ட் இந்தியா நிறுவனம் க்விட் ஹேட்ச்பேக் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சிக்கு கொண்டு வந்துள்ளது. பல்வேறு சர்வதேச மார்க்கெட்களில் விற்பனையாகி வரும் கே-இஸட்இ (K-ZE) மாடல் அடிப்படையில், ரெனால்ட் க்விட் எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 271 கிலோ மீட்டர்கள் பயணிக்கலாம்! ரெனால்ட் க்விட் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

இரண்டாவது தலைமுறை க்விட் ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அதனுடன் ஒப்பிடுகையில், ஆட்டோ எக்ஸ்போவில் இன்று காட்சிப்படுத்தப்பட்ட ரெனால்ட் கே-இஸட்இ பல்வேறு கூடுதல் வசதிகளுடன் வந்துள்ளது. புதிய ரெனால்ட் கே-இஸட்இ (க்விட் எலெக்ட்ரிக்) காரில், 26.8 kWh லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 271 கிலோ மீட்டர்கள் பயணிக்கலாம்! ரெனால்ட் க்விட் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

இந்த எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் காரின் பவர்டிரெயின் 44 பிஎச்பி பவரையும், 125 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. க்விட் எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 271 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்க முடியும். எனவே இது நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற காராக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 271 கிலோ மீட்டர்கள் பயணிக்கலாம்! ரெனால்ட் க்விட் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

ஸ்டாண்டர்டு மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் என இரண்டு ஆப்ஷன்களையும், ரெனால்ட் கே-இஸட்இ ஹேட்ச்பேக் பெற்றுள்ளது. ஸ்டாண்டர்டு ஏசி சார்ஜரை பயன்படுத்தினால், பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆக சுமார் 4 மணி நேரம் ஆகும். அதுவே டிசி ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தினால், 30ல் 80 சதவீத சார்ஜ் வெறும் 30 நிமிடங்களில் ஏறி விடும்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 271 கிலோ மீட்டர்கள் பயணிக்கலாம்! ரெனால்ட் க்விட் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

அதேபோல் ரெனால்ட் க்விட் எலெக்ட்ரிக் காரில் ஏராளமான சிறப்பம்சங்களும் இடம்பெற்றுள்ளன. இதில், 14 இன்ச் ஸ்டீல் வீல்கள், பகல் நேரத்திலும் எரியக்கூடிய எல்இடி விளக்குகள், 8 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை குறிப்பிடத்தகுந்தவை. இதுதவிர பல்வேறு பாதுகாப்பு வசதிகளும் வழங்கப்படுகின்றன.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 271 கிலோ மீட்டர்கள் பயணிக்கலாம்! ரெனால்ட் க்விட் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

இதில், இபிடி உடன் ஏபிஎஸ், ஏர்பேக்குகள், சீட் பெல்ட் ரிமைண்டர், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை. க்விட் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை இந்தியாவில் அறிமுகம் செய்யும் திட்டங்கள் ரெனால்ட் நிறுவனத்திற்கு உள்ளது. ஆனால் தற்போதைய நிலையில் அது தொடர்பாக சிறிய தகவல்கள் மட்டுமே தெரியவந்துள்ளன.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 271 கிலோ மீட்டர்கள் பயணிக்கலாம்! ரெனால்ட் க்விட் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

வாடிக்கையாளர்கள் மத்தியில் எவ்வளவு ஆர்வம் உள்ளது என்பதை அறிந்து கொள்வதற்காக, ஆட்டோ எக்ஸ்போ 2020 திருவிழாவில், கே-இஸட்இ காரை ரெனால்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கலாம். ரெனால்ட் க்விட் எலெக்ட்ரிக் காரை இந்திய மார்க்கெட் கூடிய விரைவில் பெறுவதற்கான அறிகுறியாகவும் கூட இதனை பார்க்கலாம்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 271 கிலோ மீட்டர்கள் பயணிக்கலாம்! ரெனால்ட் க்விட் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

ரெனால்ட் நிறுவனம் க்விட் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தினால், விரைவில் அறிமுகமாகவுள்ள மாருதி வேகன்ஆர் எலெக்ட்ரிக் உள்ளிட்ட மாடல்களுடன் அது போட்டி போடும். சரியான விலை நிர்ணயத்துடன் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டால், ரெனால்ட் க்விட் எலெக்ட்ரிக் வாடிக்கையாளர்களின் ஆதரவை பெறும் என்பதில் சந்தேகமில்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 5, 2020, 12:42 [IST]
English summary
Auto Expo 2020: Renault Kwid Electric (K-ZE) Unveiled. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+