குண்டும் குழியுமான சாலைகளுக்கு பை-பை சொல்லுங்க... தயாராகுகிறது பள்ளங்களை தேடி அடைக்கும் ரோபோ வாகனம்!

சாலைகளில் உள்ள பள்ளங்களை தானாகவே தேடிக் கண்டுபிடித்து அடைக்கும் தானியங்கி ரோபோ எந்திரம் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குண்டும் குழியுமான சாலைகளுக்கு பை-பை சொல்லுங்க... தயாராகுகிறது பள்ளங்களை தேடி அடைக்கும் ரோபோ வாகனம்...

பள்ளம், மேடுகள் நிறைந்த சாலைகளால் வாகன ஓட்டிகள் சந்திக்கும் பிரச்னைகள் எண்ணற்றவை. இந்தியாவின் ஏதோ ஓர் மூலையில் ஏதோ ஒரு நபர் மட்டுமே சந்திக்க கூடிய பிரச்னையல்ல இது. நாடு முழுவதும் பறந்து விரிந்துக் காணப்படக் கூடிய தலைவலியை ஏற்படுத்தும் பிரச்னையாகும்.

குண்டும் குழியுமான சாலைகளுக்கு பை-பை சொல்லுங்க... தயாராகுகிறது பள்ளங்களை தேடி அடைக்கும் ரோபோ வாகனம்...

வாகனம் சார்ந்து அரங்கேறும் விபத்துகள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணமாக விதிமீறல்களே கூறப்படுகின்றது. பள்ளம் மற்றும் மேடுகள் நிறைந்த சாலைகளாலும் அதிகளவில் விபத்துகள் உருவாகுகின்றன. ஆம், நம் நாட்டில் அரங்கேறும் பெரும்பாலான விபத்துகளுக்கு இந்த குண்டும் குழியுமாகக் காணப்படும் சாலைகளுமே மிகப்பெரிய காரணியாகும். ஆனால், எந்தவொரு அரசும் இதைப் பற்றி வாயே திறப்பதில்லை.

குண்டும் குழியுமான சாலைகளுக்கு பை-பை சொல்லுங்க... தயாராகுகிறது பள்ளங்களை தேடி அடைக்கும் ரோபோ வாகனம்...

இந்தியாவின் முக்கிய நகரங்களின் சாலைகளில்கூட பள்ளங்கள் நிறைந்த சாலையை மிகவும் சாதாரணமாக நம்மால் காண முடியும். மிகப்பெரிய பொத்தோல்கள் இருந்தாலும் அதனை நம்ப ஊர் வாகன ஓட்டிகள், நடு ரோட்டில் நிற்கும் விலங்குகளைக் கடந்துச் செல்வதைப் போல் பள்ளங்களையும் கண்டும், காணாமல் கடந்து செல்கின்றனர்.

குண்டும் குழியுமான சாலைகளுக்கு பை-பை சொல்லுங்க... தயாராகுகிறது பள்ளங்களை தேடி அடைக்கும் ரோபோ வாகனம்...

இம்மாதிரியான சூழ்நிலையில் பொத்தோல்களைக் கண்டால் தானாக தேடிச் சென்று அடைக்கும் திறனுள்ள வாகனம் ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வாகனத்தை இங்கிலாந்து நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் ஓர் வாகன உற்பத்தி நிறுவனமே வடிவமைத்து வருகின்றது.

குண்டும் குழியுமான சாலைகளுக்கு பை-பை சொல்லுங்க... தயாராகுகிறது பள்ளங்களை தேடி அடைக்கும் ரோபோ வாகனம்...

இதுகுறித்து இங்கிலாந்து நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த வாகனத்தின் உருவாக்கம் பணி விரைவில் முடிவடையும் நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே அந்நாட்டு சாலைகளில் உள்ள பள்ளங்களை சீர் செய்ய விரைவில் அந்த வாகனம் களமிறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குண்டும் குழியுமான சாலைகளுக்கு பை-பை சொல்லுங்க... தயாராகுகிறது பள்ளங்களை தேடி அடைக்கும் ரோபோ வாகனம்...

குண்டும், குழியும் நிறைந்த சாலைகள் இந்தியாவில் மட்டுமின்றி பல வளர்ந்த நாடுகளிலும் காணப்படுகின்றது. கால நிலை மற்றும் அதிக வாகனங்களின் பயன்பாடு ஆகியவற்றின் காரணமாக சாலைகள் வெகு விரைவில் பழுதடைகின்றன. அந்தமாதிரியான பழுதடைந்த சாலைகளைச் சாலைகளை தேடுவதையும், அதைக் கண்டறிந்து அடைப்பதையும் விரைவில் இந்த வாகனம் மேற்கொள்ள இருக்கின்றது.

குண்டும் குழியுமான சாலைகளுக்கு பை-பை சொல்லுங்க... தயாராகுகிறது பள்ளங்களை தேடி அடைக்கும் ரோபோ வாகனம்...

இந்த பள்ளத்தைத் தேடிப்பிடித்து சீர் செய்யும் வாகனத்திற்கு ரோபாடிஸ்3டி (Robotiz3d) என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க தானாக இயங்கும் வாகனம் ஆகும். எனவேதான் இதை உருவாக்கி வரும் நிறுவனம், ரோபாடிஸ்3டி என்ற பெயரை வைத்திருக்கின்றது.

குண்டும் குழியுமான சாலைகளுக்கு பை-பை சொல்லுங்க... தயாராகுகிறது பள்ளங்களை தேடி அடைக்கும் ரோபோ வாகனம்...

இந்த வாகனம் அடுத்த ஆண்டில் பயன்பாட்டிற்கு வரலாம் என இங்கிலாந்து நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் இங்கிலாந்து அரசு நாட்டின் பல்வேறு சாலைகளில் உள்ள பள்ளங்களைச் சீர் பல பில்லியன் பவுண்டுகளைச் செலவு செய்வதாகக் கூறப்படுகின்றது. குறிப்பாக கடந்த ஒரு தசாப்தத்தில் மட்டும் 1 பில்லியன் பவுண்டுகளை நாடு முழுவதும் உள்ள பள்ளங்களை மட்டும் சீர் செய்ய இங்கிலாந்து அரசு செலவு செய்துள்ளது.

குண்டும் குழியுமான சாலைகளுக்கு பை-பை சொல்லுங்க... தயாராகுகிறது பள்ளங்களை தேடி அடைக்கும் ரோபோ வாகனம்...

இந்த நிலையிலேயே இங்கிலாந்து நாட்டின் சாலைகளைச் சீரமைப்பதற்காக சிறப்பு ரோபோட்டிக் தானியங்கி வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை அடக்கிய வாகனமாக உள்ளது. குறிப்பாக, சீரற்ற பாதையை சீரமைக்கத் தேவையான அனுத்து உபகரணும், ரோட் ரோலர், தார் மற்றும் ஜல்லி கற்கள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய வாகனமாக உருவாக்கப்பட்டுள்ளது.

குண்டும் குழியுமான சாலைகளுக்கு பை-பை சொல்லுங்க... தயாராகுகிறது பள்ளங்களை தேடி அடைக்கும் ரோபோ வாகனம்...

மேலும், மனிதர்களின் உதவியின்றி தானாகவே சாலையில் ரோந்து சென்று பள்ளங்களைத் தேடும். அவ்வாறு பள்ளங்களை அது தேடும்போது வழக்கமான வாகனங்களைப் போலவே சாலையில் ஊர்ந்து செல்லும். மேலும், அது சென்றுக் கொண்டிருக்கும்போதே, வாகனத்தில் இடம் பெற்றிருக்கும் நுண்ணறிவுக் கொண்ட சென்சார்கள் பள்ளங்களைத் தேட ஆரம்பிக்கும்.

குண்டும் குழியுமான சாலைகளுக்கு பை-பை சொல்லுங்க... தயாராகுகிறது பள்ளங்களை தேடி அடைக்கும் ரோபோ வாகனம்...

அவ்வாறு பள்ளம் இருப்பதை அதுக் கண்டுபிடித்தால் உடனடியாக அந்த லேனை மட்டும் க்ளோஸ் செய்து, வாகன இயக்கத்தை நிறுத்தும். பின்னர், பள்ளத்தை சீரமைக்கும் பணியில் அது ஈடுபடும். இந்த வாகனம் அலுவல் நேரமல்லா நேரங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட இருப்பதாக கூறப்படுகின்றது. வாகன இயக்கத்தை தடை இந்த வாகனம் தடைச் செய்யக்கூட என்ற காரணத்திற்காக இந்த முடிவெடுக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், பிற வாகனங்களுக்கு இடையூறு இல்லாத வகையிலேயே தானியங்கி சாலை சீரமைக்கும் வாகனம் இயக்கப்பட இருக்கின்றது.

குண்டும் குழியுமான சாலைகளுக்கு பை-பை சொல்லுங்க... தயாராகுகிறது பள்ளங்களை தேடி அடைக்கும் ரோபோ வாகனம்...

வழக்கமான வாகனத்தைபோல் காணப்படும் இது, சாலையில் பள்ளம் இருப்பதை உணர்ந்தவுடன் ரோடு போடும் வாகனமாக மாறிவிடும். இந்த செயல் ஒரு சில நொடிகளிலேயே செய்யப்படும். இதைத்தொடர்ந்தே பள்ளத்தை அடைக்கும் பணியில் அது ஈடுபடும். இதற்கான, ரோடு ரோலர் கருவி மற்றும் தாரை சூடேற்றி தெளிக்கும் கருவி என அனைத்துமே அந்த வாகனத்தில் இடம்பெற்றிருக்கின்றன.

குண்டும் குழியுமான சாலைகளுக்கு பை-பை சொல்லுங்க... தயாராகுகிறது பள்ளங்களை தேடி அடைக்கும் ரோபோ வாகனம்...

இதேபோன்று, தன்னாள் அடைக்க முடியாத மிகப்பெரிய பள்ளங்களை இந்த வாகனம் கண்டுபிடித்தால் அதுகுறித்த தகவலை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகைப்படத்துடன் அனுப்பி வைக்கும். அவ்வாறு தகவல் கிடைத்த உடன் அதனை அவசர கால நடவடிக்கையாக அதிகாரிகள் சீர் செய்வர்.

குண்டும் குழியுமான சாலைகளுக்கு பை-பை சொல்லுங்க... தயாராகுகிறது பள்ளங்களை தேடி அடைக்கும் ரோபோ வாகனம்...

ரோபாடிஸ்3டி வாகனத்தை இங்கிலாந்து நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் யுனிவர்சிட்டி ஆஃப் லிவர்பூல் மற்றும் ஏ2இ இன்டஸ்ட்ரீஸ் ஆகிய இரண்டும் இணைந்து உருவாக்கியிருக்கின்றன. விரைவில் இந்த இவர்களே இந்த வாகனத்தை பயன்பாட்டிற்குக் கொண்டு வரவும் இருக்கின்றனர். சாலையைச் சீரமைக்கும் வாகனத்தில் ஆட்டோ இன்டலிஜென்ஸ் வசதி கொடுப்பது இதுவே முதல் முறையாகும். எனவே, இங்கிலாந்து கடந்து உலக மக்களை இந்த வாகனம் ஈர்க்கத் தொடங்கியுள்ளது.

குறிப்பு: சில புகைப்படங்கள் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles

English summary
Autonomous Robot Vehicles To Fix Roads Soon UK. Read In Tamil.
Story first published: Thursday, October 29, 2020, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X