வங்கதேச ராணுவத்தில் சேர்ந்தது டாடா ஹெக்ஸா கார்

வங்கதேச ராணுவ பயன்பாட்டு வாகனங்களில் ஒன்றாக டாடா ஹெக்ஸா கார் மாறி இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

வங்கதேச ராணுவத்தில் சேர்ந்தது டாடா ஹெக்ஸா கார்

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு சரியான மாற்றுத் தேர்வை விரும்புவர்களின் எதிர்பார்ப்புகளை டாடா ஹெக்ஸா பூர்த்தி செய்து வருகிறது. கம்பீரமான தோற்றம், அதிக இடவசதி, செயல்திறன் மிக்க எஞ்சின் போன்றவை இந்த காருக்கு தனி வாடிக்கையாளர் வட்டத்தை உருவாக்கி இருக்கிறது.

வங்கதேச ராணுவத்தில் சேர்ந்தது டாடா ஹெக்ஸா கார்

இந்த நிலையில், பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து, டாடா ஹெக்ஸா எஸ்யூவியின் விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. விரைவில் பிஎஸ்6 மாடல் எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கதேச ராணுவத்தில் சேர்ந்தது டாடா ஹெக்ஸா கார்

இந்த சூழலில், வங்க தேச ராணுவ பயன்பாட்டிற்காக டாடா ஹெக்ஸா கார்கள் சப்ளை செய்யப்பட்டு வருவது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, வங்கதேச ராணுவ பயன்பாட்டிற்காக, விசேஷ அம்சங்கள் கொண்ட 200 ஹெக்ஸா கார்களை சப்ளை செய்ய டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு ஆர்டர் கிடைத்தது.

வங்கதேச ராணுவத்தில் சேர்ந்தது டாடா ஹெக்ஸா கார்

ராணுவ பயன்பாட்டு வாகனங்களை தயாரிப்பதில் டாடா மோட்டார்ஸ் சிறந்து விளங்குகிறது. தனது ராணுவ பயன்பாட்டு வாகன தயாரிப்பு அனுபவத்தை வைத்து டாடா ஹெக்ஸா காரையும் மாற்றி உள்ளது.

வங்கதேச ராணுவத்தில் சேர்ந்தது டாடா ஹெக்ஸா கார்

ராணுவ பயன்பாட்டுக்கு ஏற்ற பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய ஹெக்ஸா மாடலானது கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டன. இதில், வங்கதேச ராணுவம் திருப்தியடைந்ததால், தற்போது ஹெக்ஸா கார்கள் வங்கதேச ராணுவத்திற்கு சப்ளை செய்யப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.

வங்கதேச ராணுவத்தில் சேர்ந்தது டாடா ஹெக்ஸா கார்

வங்கதேச ராணுவத்தினர் பயன்பாட்டில் டாடா ஹெக்ஸா கார் இருப்பது குறித்த படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. இதுதான் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த ஹெக்ஸா கார் ராணுவத்திற்கான விசேஷ பச்சை வண்ண பெயிண்ட் பூசப்பட்டு இருக்கிறது.

வங்கதேச ராணுவத்தில் சேர்ந்தது டாடா ஹெக்ஸா கார்

இதன்மூலமாக ராணுவ பயன்பாட்டுக்கு உகந்த ஹெக்ஸா காரின் முதல் லாட் வங்கதேச ராணுவத்திற்கு சப்ளை செய்யப்பட்டுள்ளது உறுதியாகி இருக்கிறது. எனினும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடம் இருந்து நேரடியான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

வங்கதேச ராணுவத்தில் சேர்ந்தது டாடா ஹெக்ஸா கார்

மிகச் சிறப்பான கட்டுமானம், அதிசெயல்திறன் மிக்க எஞ்சின் போன்றவற்றால் போட்டி நிறுவனங்களின் தயாரிப்புகளை விஞ்சி, வங்கதேச ராணுவத்தினர் தேர்வு செய்ய காரணமாக பார்க்கப்படுகிறது.

வங்கதேச ராணுவத்தில் சேர்ந்தது டாடா ஹெக்ஸா கார்

மேலும், கடந்த 2012ம் ஆண்டு முதல் வங்கதேச கார் மார்க்கெட்டில் டாடா மோட்டார்ஸ் இருந்து வருகிறது. இதன்மூலமாக, கார்களுக்கு தேவையான பராமரிப்புப் பணிகளை எளிதாக செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

வங்கதேச ராணுவத்தில் சேர்ந்தது டாடா ஹெக்ஸா கார்

டாடா ஹெக்ஸா காரில் 2.2 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 154 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். இதே எஞ்சின், கியர்பாக்ஸ் தேர்வுடன்தான் வங்கதேச ராணுவத்திற்கும் சப்ளை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

வங்கதேச ராணுவத்தில் சேர்ந்தது டாடா ஹெக்ஸா கார்

இதனிடையே, கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் டாடா ஹெக்ஸா காரின் பிஎஸ்6 எஞ்சின் கொண்ட மாடல் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. இந்த கார் ஹெக்ஸா சஃபாரி என்ற பெயரில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. விரைவில் இந்த மாடல் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, May 18, 2020, 12:28 [IST]
English summary
According to report, Bangladesh army has received first batch of military spec Tata Hexa SUV recently.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+