ஹூண்டாய் எலண்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் காரின் எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டின் விற்பனை நிறுத்தம்...
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் எலண்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டான எஸ்-ன் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியுள்ளது. இதனால் எஸ்எக்ஸ் மேனுவல், எஸ்எக்ஸ் ஆட்டோ மற்றும் எஸ்எக்ஸ்(ஒ) ஆட்டோ என்ற மூன்று வேரியண்ட்களில் மட்டுமே இனி விற்பனையாகவுள்ள இந்த ஃபேஸ்லிஃப்ட் காரை பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

ஆரம்பத்தில் மலிவான விலையில் தான் விற்கப்பட்டு வந்த ஹூண்டாய் மோட்டார்ஸின் எலண்ட்ரா மாடல், பிறகு ஹோண்டா சிவிக் செடான் காருடன் விற்பனையில் போட்டியிடுவதற்காக எக்ஸ்ஷோரூம் விலையை அதிகரித்து கொண்டது.

ஹூண்டாய் எலண்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் தற்போதைய எக்ஸ்ஷோரூம் விலை ரூ.18.49 லட்சத்தில் இருந்து ரூ.20.39 லட்சம் வரையில் உள்ளது. இதன் டாப் வேரியண்ட்டான எஸ்எக்ஸ் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தான் ரூ.20.39 லட்சத்தில் எக்ஸ்ஷோரூம் விலையை பெற்றுள்ளது.

பெட்ரோல் வேரியண்ட்டில் மட்டும் தான் இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் விற்பனை செய்யப்பட்டு வருவதால் ஹூண்டாய் எலண்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடல் தற்போதைக்கு பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 2.0 லிட்டர் பெட்ரோல் என்ற ஒரே ஒரு என்ஜின் தேர்வை மட்டும் தான் கொண்டுள்ளது.

ஆனால் இதன் பிஎஸ்6 டீசல் என்ஜின் தயாரிப்பு பணியில் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வருவதால் எலண்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் காரில் விரைவில் டீசல் வேரியண்ட்டை எதிர்பார்க்கலாம். மேலும் இந்த டீசல் என்ஜின் புதிய க்ரெட்டா மாடலில் வழங்கப்பட்டுள்ள 1.5 லிட்டர் என்ஜின் ஆக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 1.5 லிட்டர் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 114 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் காருக்கு வழங்குகிறது. இந்த டீசல் என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் (6-ஸ்பீடு) என்ற இரு கியர்பாக்ஸ் தேர்வுகளும் வழங்கப்படவுள்ளன.

இப்போதைக்கு ஹூண்டாய் எலண்ட்ரா மாடலுக்கு போட்டியாக ஹோண்டா சிவிக் மாடல் மட்டும் தான் உள்ளது. முன்னதாக ஸ்கோடா நிறுவனத்தில் இருந்து இதற்கு போட்டியாக ஆக்டேவியா செடான் மாடல் வெளியிடப்பட்டு வந்தது. ஆனால் அதன் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டு விட்டது.

இருப்பினும் செக் குடியரசு நாட்டை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஸ்கோடா ஆக்டேவியா மாடலின் புதிய தலைமுறை காரை விரைவில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் வெறும் 200 யூனிட்களில் ஆக்டேவியாவின் ஸ்பெஷல் எடிசனாக ஆர்எஸ்245 வெர்சன் இந்தியாவில் சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








