புத்துணர்ச்சியான தோற்றத்தில் 1994 டாடா எஸ்டேட் ஸ்டேஷன் வேகன்... வீடியோவுடன் முழு விபரம் இதோ...

டாடா மோட்டார்ஸின் தனித்துவமான மாடல்களுள் ஒன்றாக விளங்கும் எஸ்டேட் நீண்ட வருடங்களுக்கு பிறகு முற்றிலும் அழகான தோற்றத்திற்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

புத்துணர்ச்சியான தோற்றத்தில் 1994 டாடா எஸ்டேட் ஸ்டேஷன் வேகன்... வீடியோவுடன் முழு விபரம் இதோ...

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் அதன் வரலாற்றில் பல விதமான தயாரிப்பு கார்களை விற்பனை செய்து வந்துள்ளது. இதில் ஒன்றாக 1990களில் சந்தையில் ஆதிக்கம் செலுத்திய மாடல் தான் எஸ்டேட் ஸ்டேஷன் வேகன்.

புத்துணர்ச்சியான தோற்றத்தில் 1994 டாடா எஸ்டேட் ஸ்டேஷன் வேகன்... வீடியோவுடன் முழு விபரம் இதோ...

பெயருக்கு ஏற்றாற்போல் உட்புற கேபினில் இந்த கார் மாடல் அதிகளவில் வசதிகளை கொண்டிருந்தது. எல்லா கார்களின் ஆதிக்கமும் ஒரு கால கட்டம் வரையில் தான் என்பதுபோல் டாடா எஸ்டேட் மீதான வாடிக்கையாளர்களின் கவனம் குறையவே, இந்த காரின் தயாரிப்பை தயாரிப்பு நிறுவனம் நிறுத்தியது.

புத்துணர்ச்சியான தோற்றத்தில் 1994 டாடா எஸ்டேட் ஸ்டேஷன் வேகன்... வீடியோவுடன் முழு விபரம் இதோ...

இதன் விற்பனை குறைவிற்கு மற்றொரு காரணமும் உண்டு. அதாவது இந்திய சந்தையில் ஸ்டேஷன் வேகன் ரக கார்கள் பெரிய அளவில் விற்பனையாகுவதில்லை. இதற்கு பல நிறுவனங்கள் இவ்வாறான கார்களை தயாரித்து தோல்வியுற்றுள்ளன என்பது தான் சாட்சி.

புத்துணர்ச்சியான தோற்றத்தில் 1994 டாடா எஸ்டேட் ஸ்டேஷன் வேகன்... வீடியோவுடன் முழு விபரம் இதோ...

ஆனால் தற்போது இந்த கடந்த கால வரலாற்றை எல்லாம் மறக்கும் வகையில் டாடா எஸ்டேட் கார் ஒன்று புத்துணர்ச்சியான தோற்றத்திற்கு மாடிஃபைடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ பெட்ரொல்ஹெட் மோட்டார் கேரேஜ் என்ற யுடியூப் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் காட்டப்பட்டப்பட்டிருப்பது 1994ல் வெளியான டாடா எஸ்டேட் ஸ்டேஷன் வேகன் காராகும். ப்ரீமியம் வாகனமாக டாடா நிறுவனம் அறிமுகப்படுத்திய இந்த காரில் தற்போதைய மாடர்ன் கார்களுக்கு இணையான வசதிகள் அப்போதே வழங்கப்பட்டு இருந்தன.

புத்துணர்ச்சியான தோற்றத்தில் 1994 டாடா எஸ்டேட் ஸ்டேஷன் வேகன்... வீடியோவுடன் முழு விபரம் இதோ...

இதில் முக்கியமான வசதிகள் என்று பார்த்தால், ஏசி, பவர் ஸ்டேரிங், பவர் ஜன்னல்கள் மற்றும் மியூசிக் ப்ளேயர் உள்ளிட்டவற்றை அடங்குகின்றன. மெர்சிடிஸ் பென்ஸ் டி-சீரிஸ் ஸ்டேஷன் வேகன் மாடலின் பாடி ஷெல்லில் தயாரிக்கப்பட்டு வந்த எஸ்டேட் மாடல் அதன் காலத்தில் சாலையில் சென்றால் அவ்வளவு நேர்த்தியாக இருக்கும்.

புத்துணர்ச்சியான தோற்றத்தில் 1994 டாடா எஸ்டேட் ஸ்டேஷன் வேகன்... வீடியோவுடன் முழு விபரம் இதோ...

சரி, இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ள காரின் விஷயத்திற்கு வருவோம். இந்த எஸ்டேட் காரின் உரிமையாளர் காரின் பெயிண்ட் அமைப்பை மாற்றியமைத்துள்ளார். இதன் காரணமாக சில்வர் நிறத்திற்கு மாறியுள்ள இந்த காரில் ஹெட்லேம்ப், டர்ன் இண்டிகேட்டர்கள் மற்றும் டெயில்லைட்களில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை என்பது வீடியோவை பார்க்கும்போதே தெரிகிறது.

புத்துணர்ச்சியான தோற்றத்தில் 1994 டாடா எஸ்டேட் ஸ்டேஷன் வேகன்... வீடியோவுடன் முழு விபரம் இதோ...

இவ்வளவு ஏன், சக்கரங்களின் டிசைனை மாற்ற கூட உரிமையாளருக்கு மனம் வரவில்லை போல. அப்படியே உள்ளே என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்பதை அறியலாம் என பார்த்தால் இந்த வீடியோ அவ்வளவு தெளிவாக காரின் உட்புற கேபினின் தோற்றத்தை காட்டவில்லை.

புத்துணர்ச்சியான தோற்றத்தில் 1994 டாடா எஸ்டேட் ஸ்டேஷன் வேகன்... வீடியோவுடன் முழு விபரம் இதோ...

இதனால் அவையும் எந்தவொரு மாற்றத்திற்கும் உட்படுத்தப்பட்டிருக்காது என நம்புவோம். ஸ்டேஷன் வேகன் ரக கார்களுக்கு எப்போதும் பெரிய அளவிலான பூட் வழங்கப்படும். இதனால் உட்புறம் மிக பெரிய அளவை கொண்டிருக்கும். இந்த டாடா எஸ்டேட் காரும் அப்படி தான் உள்ளது. இதன் இரண்டாம் வரிசை இருக்கைகளை மடக்கினால் இன்னும் அதிகளவில் காலியான இடம் கிடைக்கும்.

புத்துணர்ச்சியான தோற்றத்தில் 1994 டாடா எஸ்டேட் ஸ்டேஷன் வேகன்... வீடியோவுடன் முழு விபரம் இதோ...

எஸ்டேட் கார்களில் 2 லிட்டர் டீசல் என்ஜினை டாடா நிறுவனம் வழங்கி வந்தது. இதே என்ஜின் தான் இந்த காரிலும் உள்ளது. அதிகப்பட்சமாக 68 பிஎச்பி மற்றும் 118 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

புத்துணர்ச்சியான தோற்றத்தில் 1994 டாடா எஸ்டேட் ஸ்டேஷன் வேகன்... வீடியோவுடன் முழு விபரம் இதோ...

இந்த ட்ரான்ஸ்மிஷன் உதவியுடன் ஆற்றலை என்ஜின் பின் சக்கரங்களுக்கு வழங்குவதால் கார் பின் சக்கரங்களின் மூலம் தான் இயங்கும். இதே என்ஜின்-ட்ரான்ஸ்மிஷன் இணைப்பில் தான் சுமோ, சியாரா மற்றும் மொபைல் மாடல்களை டாடா நிறுவனம் விற்பனை செய்துவந்தது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Beautifully restored Tata Estate on video Blast from the past
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X