பெயிண்டிங் கடையில் இருந்த கோடி ரூபாய் விலையுள்ள காரை தூக்கிய போலீஸ்... மிரண்டுபோன கடைக்காரர்!

இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமான விலையுள்ள லம்போர்கினி கல்லர்டோ காரை சாலையோர பெயிண்டிங் கடையில் இருந்து போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

பெயிண்டிங் கடையில் இருந்த கோடி ரூபாய் விலையுள்ள காரை தூக்கிய போலீஸ்... காரணத்தை கேட்டு மிரண்டுபோன கடைக்காரர்!

லம்போர்கினி நிறுவனத்தின் விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் ரக கார்களில் கல்லர்டோ மாடலும் ஒன்று. இது ஓர் அதி திறன் கொண்ட காராகும். எனவேதான் இக்காருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் நிலவி வருகின்றனர். மேலும், பல இளைஞர்களின் கனவு வாகனமாகவும் இருக்கின்றது. இந்த காரைதான் பெங்களூரு நகர போலீஸார் தற்போது பறிமுதல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெயிண்டிங் கடையில் இருந்த கோடி ரூபாய் விலையுள்ள காரை தூக்கிய போலீஸ்... காரணத்தை கேட்டு மிரண்டுபோன கடைக்காரர்!

இதனை பெங்களூருவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மிகவும் சாதாரண சாலையோர பழுது நீக்கம் மற்றும் பெயிண்டிங் வேலை செய்யும் கடையிலிருந்து காவல்துறையினர் கை பற்றியிருக்கின்றனர். போலீஸார் ஏன் இந்த விலையுயர்ந்த காரை பறிமுதல் செய்தனர் என்பது அங்கு நின்றுக் கொண்டிருந்தவர்களுக்குகூட விடை தெரியாத மர்மமாக இருந்தது. அக்கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் பல கார்கள் இருந்தும் போலீஸார் லம்போர்கினி கல்லர்டோவை மட்டும் ஏன் பறிமுதல் செய்தனர் என குழம்பினர். இதுகுறித்த விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதைதான் நாம் இந்த பதிவில் பார்க்கவிருக்கின்றோம்.

பெயிண்டிங் கடையில் இருந்த கோடி ரூபாய் விலையுள்ள காரை தூக்கிய போலீஸ்... காரணத்தை கேட்டு மிரண்டுபோன கடைக்காரர்!

பெங்களூரு போலீஸார் இந்த காரை கடந்த சில மாதங்களாகவே தேடி வந்ததாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே சாலையோர பழுதுநீக்கும் கடையிலிருந்து பறிமுதல் செய்திருக்கின்றனர். மஹாராஷ்டிரா மாநிலத்தின் பதிவெண்ணைக் கொண்டிருக்கும் இந்த கார் நாட்டின் பல்வேறு பகுதிகளில் விதிமீறலில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகின்றது.

பெயிண்டிங் கடையில் இருந்த கோடி ரூபாய் விலையுள்ள காரை தூக்கிய போலீஸ்... காரணத்தை கேட்டு மிரண்டுபோன கடைக்காரர்!

குறிப்பாக நாட்டின் மேற்கு பகுதியில் இக்கார் அதிகம் உலா வந்திருக்கின்றது. அவ்வாறு, அக்கார் அதிகபட்சம் இரவு நேரங்களில் மட்டுமே சாலையில் சுற்றித் திரிந்ததாகவும், அப்போது உச்சபட்ச வேகத்தில் லம்போர்கினி சாலையில் சீறிப் பாய்ந்ததாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் கல்லர்டோ மீது கூறப்படுகின்றது. இதுபோன்ற பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட காரணத்தினாலயே இக்கார் தேடப்படும் ஒன்றாக மாறியது.

பெயிண்டிங் கடையில் இருந்த கோடி ரூபாய் விலையுள்ள காரை தூக்கிய போலீஸ்... காரணத்தை கேட்டு மிரண்டுபோன கடைக்காரர்!

இந்த நிலையிலேயே லம்போர்கினி கல்லர்டோ பெங்களூரு காவலர்களிடம் சிக்கியிருக்கின்றது. இந்த காரை, அதன் உரிமையாளர் நிற மாற்றம் செய்வதற்காக அங்கு விடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகின்றது. இதைத்தொடர்ந்து, அதன் உரிமையாளரை காவல்நிலையத்திற்கு வரவழைத்த போலீஸார், அக்கார் குறித்த ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

பெயிண்டிங் கடையில் இருந்த கோடி ரூபாய் விலையுள்ள காரை தூக்கிய போலீஸ்... காரணத்தை கேட்டு மிரண்டுபோன கடைக்காரர்!

ஆவணத்தில் இருந்த தகவலும் காரின் பதிவெண்ணும் முரண்பட்டதாக இருந்தது. தொடர்ந்து ஆய்வு செய்ததில் காரின் பதிவெண் போலியானது என்பதும் தெரியவந்தது. மஹாராஷ்டிரா ஆர்டிஓ-வும் MH02 BM 9000 என்ற பதிவெண்ணைப் பற்றி தெரியவே தெரியாது என கையை விரித்திருக்கின்றனர். இதைத்தொடர்ந்து, போலீஸார் மேலும் விசாரித்ததில் லம்போர்கினி கல்லர்டோ 2008ம் ஆண்டு தலைநகர் டெல்லியில் பதிவு செய்யப்பட்ட வாகனம் என்பது தெரியவந்தது.

பெயிண்டிங் கடையில் இருந்த கோடி ரூபாய் விலையுள்ள காரை தூக்கிய போலீஸ்... காரணத்தை கேட்டு மிரண்டுபோன கடைக்காரர்!

ஆனால், ஏன் அதை போலியான பதிவெண் கொண்டு அதன் உரிமையாளர் பயன்படுத்தினார் என்பது தெரியவில்லை. இதுகுறித்த விசாரணையிலேயே பெங்களூரு போலீஸார் தற்போது ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். பொதுவாக, வாகன வரியைக் குறைக்க வேண்டும் என்பதற்காக விலையுயர்ந்த கார்களை வாங்கும் தொழிலதிபர்கள், அக்காரை போலியான ஆவணங்கள் கொண்டு பிற மாநிலங்களில் பதிவு செய்கின்றனர். குறிப்பாக, யூனியன் பிரதேசங்களில் பதிவு செய்வதை பல செல்வந்தர்கள் வாடிக்கையாக வைத்திருக்கின்றனர்.

பெயிண்டிங் கடையில் இருந்த கோடி ரூபாய் விலையுள்ள காரை தூக்கிய போலீஸ்... காரணத்தை கேட்டு மிரண்டுபோன கடைக்காரர்!

இதனால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கார்களுக்கு விதிக்கப்படும் உச்சபட்ச வரியை அவர்களால் தவிர்க்க முடியும். இந்த காரணத்திற்காகவே லம்போர்கினி கல்லர்டோ காரின் உரிமையாளர் இக்காரை டெல்லியில் பதிவு செய்துவிட்டு நாட்டின் பிற மாநிலங்களில் வைத்து பயன்படுத்தியிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர். ஆனால், இதுவரை காரின் உரிமையாளர்மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது என்பது பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை.

பெயிண்டிங் கடையில் இருந்த கோடி ரூபாய் விலையுள்ள காரை தூக்கிய போலீஸ்... காரணத்தை கேட்டு மிரண்டுபோன கடைக்காரர்!

அதேசமயம், லம்போர்கினி கல்லர்டோ பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டிருப்பதன் காரணத்தினால், அக்கார் தற்போது ஆர்டிஓ அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டு, தனியறையில் அடைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் போலியான பதிவெண்ணைப் பயன்படுத்துவது மிகப் பெரிய குற்றமாக கருதப்படுகின்றது. இம்மாதிரியான பதிவெண்ணைக் கொண்ட கார்கள் பெரும்பாலும் சட்ட விரோதமான செயல்களுக்கே அதிகம் ஈடுபடுத்தப்படுகின்றன. ஆகையால், போலீஸார் இதன் உரிமையாளரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்திருக்கின்றனர்.

பெயிண்டிங் கடையில் இருந்த கோடி ரூபாய் விலையுள்ள காரை தூக்கிய போலீஸ்... காரணத்தை கேட்டு மிரண்டுபோன கடைக்காரர்!

விலையுயர்ந்த கார்கள் இதுபோன்ற விதிமீறலில் ஈடுபடும்போது அது பெரிதாக வெளிச்சத்திற்கு வருவதில்லை. பெரும்பாலும் உயர் ரக கார்களைப் போலீஸார் தங்களின் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வராமல் மேலோட்டமான ஆய்வை மட்டுமே நடத்திவிட்டு வழியனுப்பி வைத்துவிடுகின்றனர். இதனாலயே அவைகள் சார்ந்து நடைபெறும் பெரும்பாலான குற்றச்சம்பவங்கள் வெளியில் தெரியாமலேயே போய்விடுகின்றன.

பெயிண்டிங் கடையில் இருந்த கோடி ரூபாய் விலையுள்ள காரை தூக்கிய போலீஸ்... காரணத்தை கேட்டு மிரண்டுபோன கடைக்காரர்!

இதையுணர்ந்த காவல்துறை அண்மைக் காலங்களாக விலையுயர்ந்த கார்களாக இருந்தாலும் விதிமீறலில் ஈடுபட்டிருப்பின் பாராபட்சமின்றி நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளனர். அந்தவகையில் அண்மைக் காலங்களில் சிக்கிய விலையுயர்ந்த கார்கள் ஏராளம். இதன் வரிசையிலேயே தற்போது லம்போர்கினி கல்லர்டோ கார் இணைந்திருக்கின்றது. இக்கார் இந்தியாவில் ரூ. 1.55 கோடியில் இருந்து 3.06 கோடி ரூபாய் வரையிலான விலையைக் கொண்டிருக்கின்றது. இந்த மாடல் தற்போது இந்தியாவில் காலவதியான மாடல் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bengaluru City Police Seized Lamborghini Gallardo. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X