வாகன ஓட்டிகள் மீது மோதிய பென்ட்லீ - போலீஸ் கூடாரத்தில் மோதிய லம்போர்கினி.. ஒரே நாளில் இரு சம்பவங்கள்
பெங்களூருவில் ஒரே நாளில் இரு வெவ்வேறு இடங்களில் சொகுசு கார்கள் விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு நகரத்தின் மிகவும் பரபரப்பான இரு வெவ்வேறு சாலைகளில் விலையுயர்ந்த கார்கள் விபத்தை ஏற்படுத்தியுள்ளன. ஒரே நாளில் தொடர்ச்சியாக நடைபெற்ற சம்பவத்தால் பெங்களூருவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்று கிழமை (பிப்ரவரி 9) அன்றுதான் இந்த தொடர் சம்பவங்கள் பெங்களூருவில் நடைபெற்றுள்ளன. இந்த சம்பவத்தில் சக வாகன ஓட்டிகள் உட்பட போக்குவரத்து போலீஸார்களின் ஓய்வு கூடாரமும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இதுகுறித்த விரிவான தகவலை கீழே காணலாம்.

இந்தியாவில் விற்பனையாகும் பல கோடி மதிப்புள்ள சொகுசு கார்களில் பென்ட்லீ நிறுவனத்தின் தயாரிப்புகளும் ஒன்று. டிஎஸ் 09 யுசி 9 (TS 09 UC 9) என்ற பதிவெண்ணைப் பொருந்திய இந்த கார் ஹெப்பல் என்ற பகுதியில் அதிவேகமாக வந்தபோது விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் மதியம் 2.30 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் இரு இளைஞர்கள் கடுமையான பாதிப்புகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதில், ஒருவர் பொறியாளர் பிரஃபல் குமார் என்றும் மற்றொருவர் ஆட்டோ ஓட்டுநர் அப்துல் என்றும் கூறப்படுகின்றது. விபத்தை ஏற்படுத்திய அந்த சொகுசு காரின் உரிமையாளர், அங்கு கூட்டம் அதிகம் சூழ்ந்த காரணத்தால் காரை சம்பவ இடத்திலியே விட்டுவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகின்றது.
படுகாயமடைந்த அப்துல் மற்றும் பிரஃபல் ஆகிய இருவரையும் அங்கு கூடிய பொதுமக்கள் ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சம்பவம்குறித்து தகவலறிந்து வந்த போலீஸ் காரை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, காரின் பதிவெண்ணை வைத்து ஆய்வு செய்ததில் அந்த கார் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. அவர்களை நேற்றைய (திங்கள்) காவல்நிலையத்தில் ஆஜராகும்படியும் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தின் சூடு அடங்குவதற்கு முன்பே அன்றைய தினத்திலேயே இதேபோன்று சொகுசு கார் விபத்தை ஏற்படுத்தியது. இந்த தொடர் சம்பவங்கள் பெங்களூருவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள புத்தம் புதிய லம்போர்கினி கார் விபத்தை ஏற்படுத்தியது. இது, போக்குவரத்து போலீஸார் பயன்படுத்தும் கூடாரத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தியது. மாலை 5.15 மணி நேரத்தில் நடந்த இந்நிகழ்வின்போது போலீஸார் யாரும் சம்பவ இடத்தில் எஇல்லை என்று கூறப்படுகின்றது.

ஆகையால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இது பெங்களூருவின் முக்கிய பகுதிகளில் ஒன்றான கப்பன் பூங்காவிற்கு அருகே அரங்கேறியிருக்கின்றது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார் ஐபிசி பிரிவு 279ன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோன்று, இதற்கு முன்பாக அதிவேகத்தில் இயங்கிய கார்களால் பல்வேறு விபத்து சம்பவங்கள் பெங்களூருவில் நடைபெற்றிருக்கின்றன. அவ்வாறு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் டெஸ்ட் டிரைவ் செய்யப்பட்ட விலையுயர்ந்த கார் மோதியதில் 31 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இத்துடன், அந்த காரில் பயணித்த நபர்களும் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காரில் இருந்தவர்கள் சீட் பெல்ட் அணிந்திருந்ததாலும், ஏர் பேக்குகள் சரியான நேரத்தில் வேலை செய்த காரணத்தினாலும் அவர்கள் உயிர் பிழைத்ததாக போலீஸார் கூறினர்.

அதேசமயம், இந்த சம்பவங்கள் அனைத்தும் காரை அதிவேகத்தில் இயக்கியதே முக்கிய காரணம் என்று போலீஸார் கூறுகின்றனர். பொதுவாக இந்த காரில் காணப்படும் உச்சபட்ச வேகம் என்பது இந்திய சாலைகளுக்கு பொருந்த ஓர் வேகமாகவே காணப்படுகின்றது. இருப்பினும், இந்த அதிதிறன் கொண்ட வாகனங்களை இயக்கும் சாரதிகள் அதன் உச்சபட்ச வேகத்தை பரிசோதிக்காமல் இருப்பதே இல்லை. அவ்வாறு, பரிசோதித்தன பின்னர் இதுபோன்ற சிக்கலிலும் அவர்கள் சிக்கிக் கொள்கின்றனர்.


Click it and Unblock the Notifications








