ஊரடங்கிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள மாருதி எர்டிகா...!
இந்திய சந்தையில் கடந்த மாதத்தில் அதிகம் விற்பனையான எம்பிவி கார்களின் லிஸ்ட்டை ஆட்டோபுண்டிஸ் செய்தி தளம் வெளியிட்டுள்ளது. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

இதனால் கார்களின் விற்பனை மீண்டும் ஆரம்பமாகியுள்ள நிலையில் எம்பிவி கார்களின் விற்பனையில் கடந்த மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா மாடல் முதலிடத்தை பிடித்துள்ளது. மொத்தமாக 2020 மே மாதத்தில் 2,353 எர்டிகா எம்பிவி மாடல்கள் விற்பனையாகியுள்ளன.

இதன்படி இந்த லிஸ்ட்டில் முதலிடத்தில் இந்த கார் இருந்தாலும், 9000 எர்டிகா கார்கள் விற்பனையான 2019 மே மாதத்தை விடவும் இந்த எண்ணிக்கை 73 சதவீதம் குறைவாகும். எர்டிகா மாடலிற்கு அடுத்த இடத்தில் மஹிந்திரா பொலேரியோ 1,715 யூனிட்கள் விற்பனையுடன் உள்ளது.

இதன் விற்பனையும் கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது சுமார் 71 சதவீதம் வீழ்ச்சியை நோக்கி சென்றுள்ளது. ஏனெனில் அப்போது மொத்தம் 5,947 யூனிட்கள் விற்பனையாகி இருந்தன. இந்த லிஸ்ட்டில் மூன்றாவது இடத்தை ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி பிடித்துள்ளது. சப்-4 மீட்டர் எண்ட்ரீ-லெவல் எம்பிவி மாடலான இது கடந்த 2020 மே மாதத்தில் 931 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.

அறிமுகத்தில் இருந்து கணிசமான விற்பனை எண்ணிக்கைகளை பெற்றுவரும் ட்ரைபர் எம்பிவி மாடல் தான் ரெனால்ட்டின் தற்போதைக்கு ஒரே ஒரு நம்பிக்கை மாடலாக உள்ளது. நான்காவது இடத்தில் 759 யூனிட்கள் விற்பனையுடன் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மாடல் உள்ளது.

2020 மே மாதத்துடன் ஒப்பிடும் கடந்த மாதத்தில் 87 சதவீதம் விற்பனை எண்ணிக்கைகளை குறைவாக பெற்றுள்ள இந்த எம்பிவி மாடலின் விலையை டொயோட்டா நிறுவனம் சமீபத்தில் தான் ரூ.61 ஆயிரம் அளவில் அதிகரித்து இருந்தது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை அறிய கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

இதற்கு பிறகு மூன்று இலக்கங்களில் மாருதி எர்டிகாவின் ப்ரீமியம் வெர்சனான எக்ஸ்எல்6 மாடல் தான் விற்பனை எண்ணிக்கையை சந்தையில் பதிவு செய்துள்ளது. ஏனெனில் இதற்கு அடுத்து உள்ள டட்சன் கோ ப்ளஸ், கியா கார்னிவல், டொயோட்டா வெல்ஃபய்ர் உள்ளிட்டவை இரண்டு இலக்கங்களில் தான் விற்பனை எண்ணிக்கையை பெற்றுள்ளன.

| Rank | Model | May'20 | May'19 | Growth (%) |
| 1 | Maruti Ertiga | 2,353 | 8,864 | -73 |
| 2 | Mahindra Bolero | 1,715 | 5,947 | -71 |
| 3 | Renault Triber | 931 | 0 | - |
| 4 | Toyota Innova Crysta | 759 | 5,631 | -87 |
| 5 | Maruti XL6 | 711 | 0 | - |
| 6 | Datsun Go Plus | 62 | 242 | -74 |
| 7 | Kia Carnival | 50 | 0 | - |
| 8 | Toyota Vellfire | 32 | 0 | - |
| 9 | Mahindra Marazzo | 0 | 1,381 | -100 |
| 10 | Mahindra Xylo | 0 | 312 | -100 |
| 11 | Tata Hexa | 0 | 301 | -100 |
| 12 | Honda BR-V | 0 | 255 | -100 |
| 13 | Renault Lodgy | 0 | 49 | -100 |
கடந்த மாதத்தில் இவை மூன்றும் பதிவு செய்த விற்பனை எண்ணிக்கை முறையே 62, 50, 32 ஆக உள்ளது. இவையாவது பரவாயில்லை இவற்றை தொடர்ந்து உள்ள மஹிந்திரா மராஸ்ஸோ, மஹிந்திரா எக்ஸ்யெலோ, டாடா ஹெக்ஸா, ஹோண்டா பிஆர்-வி, ரெனால்ட் லாட்ஜி உள்ளிட்டவை பூஜ்ஜிய விற்பனை எண்ணிக்கையை தான் கடந்த மாதத்தில் சந்தையில் பதிவு செய்துள்ளன.

இவற்றில் மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி மாடல் கடந்த ஆண்டு மே மாதத்தில் 1,381 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. எம்பிவி மாடல்களின் இந்த விற்பனை நிலவரம் இந்திய சந்தை கடந்த இரு மாதங்களில் ஊரடங்கினால் எந்த அளவிற்கு பாதித்துள்ளது என்பதை தெளிவாக வெளிக்காட்டுகிறது. இருப்பினும் இந்த நிலை இன்னும் சில மாதங்களில் சீரடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








