Just In
- 1 hr ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 1 hr ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 1 hr ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
- 2 hrs ago
இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா? இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்!!
Don't Miss!
- Movies
ஜாமீன் கிடைச்சு 2 நாளாச்சு.. 140 நாளுக்குப் பிறகு சிறையில் இருந்து வர காத்திருக்கும் ராகிணி திவேதி!
- Lifestyle
உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த கசப்பு உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..!
- Sports
ஹப்பா கடைசியில் மனம் மாறிய சென்னை.. சிஎஸ்கே இறக்கிய பெரிய கேம் பிளான்.. கசிந்த தகவல்!
- Finance
வாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..!
- News
எல்லாம் கூடி.. வெண்ணை திரண்டு வரும்போது.. இப்படி பானையை போட்டு உடைக்கிறாரே பாரதி!
- Education
8-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அட்டகாசமான எஸ்யூவி, க்ராஸ்ஓவர் ரக கார்கள்... பட்ஜெட் ரொம்ப டைட்டா இருந்தா இந்த கார்களை பாருங்க...
இந்தியாவில் 10 லட்ச ரூபாய்க்குள் கிடைக்கும் எஸ்யூவி, க்ராஸ்ஓவர் ரக கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சர்வதேச அளவில் எஸ்யூவி மற்றும் க்ராஸ்ஓவர் செக்மெண்ட், கடந்த சில வருடங்களில் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்துள்ளது. இதற்கு இந்திய சந்தையும் விதிவிலக்கு அல்ல. ஆனால் இந்தியர்கள் விலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடியவர்கள். இதன் காரணமாக இந்தியாவில் செயல்படும் கார் நிறுவனங்கள் முடிந்த அளவிற்கு குறைவான விலையில் எஸ்யூவி, க்ராஸ்ஓவர்களை அறிமுகம் செய்து வருகின்றன.

இந்த வகையில் இந்தியாவில் 10 லட்ச ரூபாய்க்குள் (எக்ஸ் ஷோரூம்) கிடைக்கும் சிறந்த பிஎஸ்-6 எஸ்யூவி மற்றும் க்ராஸ்ஓவர் கார்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். உங்களுக்கு எஸ்யூவி, க்ராஸ்ஓவர் கார் வாங்க வேண்டும் என்னும் அவசியம் இருக்கும் பட்சத்தில், பண நெருக்கடியில் இருந்தால், இந்த கார்களை நீங்கள் பரிசீலிக்கலாம்.

ஹூண்டாய் வெனியூ
இந்திய சந்தையில் கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் மிக பிரபலமான கார்களில் ஒன்றாக ஹூண்டாய் வெனியூ உருவெடுத்து விட்டது. பல்வேறு இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள், அட்டகாசமான வசதிகள் ஆகியவைதான் இதற்கு முக்கியமான காரணங்களாக உள்ளன.

ஹூண்டாய் நிறுவனம் வெனியூ காரை தற்போது, 6.7 - 11.58 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற விலையில் விற்பனை செய்து வருகிறது. ஹூண்டாய் வெனியூ காரில், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் (83 பிஎஸ்/ 114 என்எம்), 1.5 லிட்டர் டர்போ டீசல் (100 பிஎஸ்/ 240 என்எம்) மற்றும் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு TGDi பெட்ரோல் இன்ஜின் (120 பிஎஸ்/ 172 என்எம்) ஆகிய தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரை 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி ஆகிய தேர்வுகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் iMT (Intelligent Manual Transmission) தேர்வும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

டாடா நெக்ஸான்
டாடா நெக்ஸான் காருக்கு அறிமுகமே தேவையில்லை. தோற்றம், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் என அனைத்து அம்சங்களிலும் சிறந்த கார் என்பதை டாடா நெக்ஸான் ஏற்கனவே நிரூபித்து காட்டியுள்ளது. இதுவும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்தான். டாடா நிறுவனம் நடப்பாண்டு தொடக்கத்தில் நெக்ஸான் காரை மேம்படுத்தியது.

இந்த நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடல், புத்தம் புதிய முன்பகுதியை பெற்றுள்ளது. அத்துடன் எலெக்ட்ரின் சன் ரூஃப், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், கனெக்டட் கார் டெக்னாலஜி உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர மேம்படுத்தப்பட்ட பிஎஸ்6 1.2 லிட்டர் ரிவோட்ரான் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் ரிவோடார்க் டீசல் இன்ஜின் தேர்வுகளையும் நெக்ஸான் ஃபேஸ்ஃலிப்ட் பெற்றது.

இதில், பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 120 பிஎஸ் பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். அதே சமயம் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 110 பிஎஸ் பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஆப்ஷனல் 6 ஸ்பீடு ஏஎம்டி ஆகிய தேர்வுகள் வழங்கப்படுகின்றன. 6.99 - 12.7 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற விலைகளில் டாடா நெக்ஸான் விற்பனை செய்யப்படுகிறது.

மாருதி சுஸுகி எஸ் க்ராஸ்
டீசல் இன்ஜின் உடன் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்த மாருதி சுஸுகி எஸ் க்ராஸ் சமீபத்தில், பிஎஸ்-6 விதிகளுக்கு இணக்கமான 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது எஸ் க்ராஸ் காரில் இந்த ஒரே ஒரு இன்ஜின் தேர்வு மட்டும்தான் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 105 பிஎஸ் பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 4 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. மாருதி சுஸுகி நிறுவனம் பிஎஸ்-6 எஸ் க்ராஸ் காரின் ஆரம்ப விலையை 8.39 லட்ச ரூபாய் நிர்ணயம் செய்துள்ளது. அதே சமயம் டாப் வேரியண்ட்டின் விலை 12.39 லட்ச ரூபாய் ஆகும் (இவை இரண்டுமே எக்ஸ் ஷோரூம் விலைதான்).