இந்திய ஓட்டுனர்களின் தலை எழுத்தை மாற்றிய பாரத் பென்ஸ்... டிரக் விற்பனையில் புதிய மைல்கல்!

இந்திய ஓட்டுனர்களின் தலை எழுத்தை மாற்றுவதற்கு அடிப்படையாக இருந்த பாரத் பென்ஸ் நிறுவனம் டிரக் விற்பனையில் புதிய மைல்கல்லை தொட்டு அசத்தி உள்ளது.

இந்திய ஓட்டுனர்களின் தலை எழுத்தை மாற்றிய பாரத் பென்ஸ்... டிரக் விற்பனையில் புதிய மைல்கல்!

ஜெர்மனியை சேர்ந்த டெய்ம்லர் நிறுவனம் டிரக் உள்ளிட்ட கனரக வாகனத் தயாரிப்பில் உலக அளவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் பிராண்டில் கார் விற்பனையில் முக்கிய இடத்தை பிடித்த டெய்ம்லர் வாகன குழுமம் டிரக் உள்ளிட்ட கனரக வாகனத் தயாரிப்பிலும் ஈடுபட முடிவு செய்தது.

இந்திய ஓட்டுனர்களின் தலை எழுத்தை மாற்றிய பாரத் பென்ஸ்... டிரக் விற்பனையில் புதிய மைல்கல்!

இதன்படி, கடந்த 2012ம் ஆண்டு இந்தியாவில் டிரக் மற்றும் பஸ் உற்பத்தியை துவங்கியது. மேலும், இந்திய சந்தையில் உள்ள வளமான வர்த்தக வாய்ப்பை மனதில் வைத்து பாரத் பென்ஸ் என்ற பிரத்யேக பிராண்டில் டிரக் மாடல்களை அறிமுகம் செய்தது.

இந்திய ஓட்டுனர்களின் தலை எழுத்தை மாற்றிய பாரத் பென்ஸ்... டிரக் விற்பனையில் புதிய மைல்கல்!

சென்னை அருகே ஓரகடத்தில் தனது புதிய டிரக் ஆலையை 400 ஏக்கர் பரப்பளவில், ரூ.4,400 கோடி மதிப்பீட்டில் இந்த புதிய டிரக் ஆலையை அமைக்கப்பட்டது.

இந்திய ஓட்டுனர்களின் தலை எழுத்தை மாற்றிய பாரத் பென்ஸ்... டிரக் விற்பனையில் புதிய மைல்கல்!

பாரத் பென்ஸ் டிரக்குகளின் தொழில்நுட்பம் மற்றும் வசதிகள் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் என இருவரின் எதிர்பார்ப்புகளையும் கச்சிதமாக பூர்த்தி செய்தன. மேலும், ஓட்டுனர்கள் விரைவில் அயர்ந்து போவதை தவிர்க்கும் விதத்தில் சிறப்பான கேபின் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் வெகுவாக கவர்ந்தது.

இந்திய ஓட்டுனர்களின் தலை எழுத்தை மாற்றிய பாரத் பென்ஸ்... டிரக் விற்பனையில் புதிய மைல்கல்!

இதனால், பிற நிறுவனங்களும் ஓட்டுனர்களுக்கான வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவற்கு அடித்தளமாக அமைந்தது. எனவே, இந்திய ஓட்டுனர்களின் தலை எழுத்தை மாற்றுவதற்கு அடித்தளமிட்ட பெருமை பாரத் பென்ஸ் டிரக்குகளுக்கு உண்டு.

இந்திய ஓட்டுனர்களின் தலை எழுத்தை மாற்றிய பாரத் பென்ஸ்... டிரக் விற்பனையில் புதிய மைல்கல்!

கடந்த 2015ம் ஆண்டு முதல் பாரத் பென்ஸ் பிராண்டில் பஸ் மாடல்களையும் உற்பத்தி செய்து வருகிறது. பாரத் பென்ஸ் மட்டுமின்றி, 50க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கு மெர்சிடிஸ் பென்ஸ், ஃப்ரைட்லைனர் மற்றும் ஃப்யூஸோ பிராண்டுகளில் டிரக் உள்ளிட்ட கனரக வாகனங்களை டெய்ம்லர் குழுமம் சென்னை ஆலையில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வருகிறது. இதுவரை 30,000 வர்த்தக வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது.

இந்திய ஓட்டுனர்களின் தலை எழுத்தை மாற்றிய பாரத் பென்ஸ்... டிரக் விற்பனையில் புதிய மைல்கல்!

இதுதவிர்த்து, 2014ம் ஆண்டு முதல் உலகின் பிற பகுதிகளில் செயல்பட்டு வரும் டெய்ம்லர் குழுமத்தின் கனரக வாகன உற்பத்தி ஆலைகளுக்கு இங்கிருந்து முக்கிய உதிரிபாகங்களும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

இந்திய ஓட்டுனர்களின் தலை எழுத்தை மாற்றிய பாரத் பென்ஸ்... டிரக் விற்பனையில் புதிய மைல்கல்!

இந்த நிலையில், இந்தியாவில் பாரத் பென்ஸ் டிரக்குகளுக்கும், பஸ்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதனால், பாரத் பென்ஸ் டிரக் விற்பனை இந்தியாவில் ஒரு லட்சம் என்ற புதிய மைல்கல்லை எட்டி உள்ளது.

இந்திய ஓட்டுனர்களின் தலை எழுத்தை மாற்றிய பாரத் பென்ஸ்... டிரக் விற்பனையில் புதிய மைல்கல்!

பாரத் பென்ஸ் பிராண்டில் 10 முதல் 16 டன் வரையிலான MDT ரக டிரக்குகளும், 19 முதல் 35 டன் வரையிலான HDT C ரக டிரக்குகளும், 28 முதல் 42 டன் வரையிலான HDT R ரக டிரக்குகளும், 40 முதல் 55 டன் வரையிலான HDT T ரக டிரக்குகளையும் விற்பனை செய்து வருகிறது.

இந்திய ஓட்டுனர்களின் தலை எழுத்தை மாற்றிய பாரத் பென்ஸ்... டிரக் விற்பனையில் புதிய மைல்கல்!

பள்ளி வாகனங்கள் மற்றும் பணியாளர்கள் போக்குவரத்திற்கான விசேஷ பஸ் மாடல்களையும் இந்தியாவில் விற்பனையில் வைத்துள்ளது டெய்ம்லர் நிறுவனம். வாடிக்கையாளர் மத்தியில் பாரத் பென்ஸ் மாடல்களுக்கு சிறப்பான வரவேற்பு இருந்து வருவதால், அடுத்தடுத்து விற்பனையில் பல சாதனை இலக்குகளை பாரத் பென்ஸ் தொடும் என்று நம்பலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 29, 2020, 21:28 [IST]
English summary
BharatBenz has announced that the company have sold over 1 lakh trucks within 8 years since production began in 2012.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+