'என்னுடைய காரையே நிறுத்துவியா? மண்டியிடு' - கடமையை செய்த காவலரை தண்டித்த அரசு அதிகாரி..

காரை நிறுத்தி ஆய்வு செய்ததற்காக அரசு அதிகாரி ஒருவர், ஊர் காவல் படையைச் சேர்ந்தவரை மண்டியிட்டு, தோப்புக்கரணம் போடச் செய்துள்ளார். அரசு அதிகாரியின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

'என்னுடைய காரையே நிறுத்துவியா? மண்டியிடு' - கடமையை செய்த காவலரை தண்டித்த அரசு அதிகாரி.. கொதிக்கும் மக்கள்!

ஒற்றை உயிர் கொல்லி வைரஸ் கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் பூட்டப்பட்டநிலையில் இருக்கின்றன. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் இத்தகைய கசப்பான நடவடிக்கையை மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்டிருக்கின்றன.

'என்னுடைய காரையே நிறுத்துவியா? மண்டியிடு' - கடமையை செய்த காவலரை தண்டித்த அரசு அதிகாரி.. கொதிக்கும் மக்கள்!

தேசிய ஊரடங்கு உத்தரவு கடந்த 14ம் தேதியுடன் முடிவடைய இருந்தநிலையில், வருகின்ற மே 3ம் தேதி வரை நீடிக்கும் என பிரதமர் மோடி அறிவித்தார். இதைத்தொடர்ந்து, சில துறைகளுக்கு மட்டும் நிபந்தனைகளுடன் கூடிய லேசான தளர்வு அளிக்கப்பட்டது.

இந்த தளர்வு காரணமாக ஒரு சிலர் தங்களின் பணிக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர். அவ்வாறு, வாகனங்கள் மூலம் வெளியில் வருபவர்களை காவல்துறையினர் தற்போதும் உரிய ஆய்வு செய்த பின்னரே முன்னேறிச் செல்ல அனுமதிக்கின்றனர்.

'என்னுடைய காரையே நிறுத்துவியா? மண்டியிடு' - கடமையை செய்த காவலரை தண்டித்த அரசு அதிகாரி.. கொதிக்கும் மக்கள்!

இத்தகைய ஆய்வில் ஈடுபட்ட ஊர் காவல்படையைச் சேர்ந்த காவலரைதான் அரசு அதிகாரி ஒருவர், அவரை தடுத்து நிறுத்தியதற்காக தண்டனை வழங்கியுள்ளார். அரசு பணியாளரின் இந்த அதிகாரப்போக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீஹார் மநிலத்தில் உள்ள அரரியா என்னும் பகுதியில்தான் இந்த வருந்தக்க சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. இந்நிகழ்வை அரங்கேற்றியவர் அரரியா பகுதியின் மூத்த விவசாயத்துறை அதிகாரியான மனோஜ் குமார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

'என்னுடைய காரையே நிறுத்துவியா? மண்டியிடு' - கடமையை செய்த காவலரை தண்டித்த அரசு அதிகாரி.. கொதிக்கும் மக்கள்!

நாடு முழுவதும் கொரோனாவிற்கு எதிரான போரில் காவல்துறை முழு வீச்சுடன் போராடிக் கொண்டிருக்கின்றனர். குடும்பங்கள் மற்றும் குழந்தைகளை தனித்துவிட்டு பலர் விடுப்பின்றி பணிக்கு வருவதை நம்மால் காண முடிகின்றது.

இந்த நிலையில் போலீஸார் பற்றாக்குறைக் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் ஊர் காவல்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

'என்னுடைய காரையே நிறுத்துவியா? மண்டியிடு' - கடமையை செய்த காவலரை தண்டித்த அரசு அதிகாரி.. கொதிக்கும் மக்கள்!

அவர்கள் போலீஸாருடன் இணைந்து, சீருடை அணிந்து வாகன தணிக்கை உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்து வருகின்றனர்.

இந்நிலையிலேயே, காரில் சொகுசாக அமர்ந்து வந்த அரசு அதிகாரி மனோஜ் குமாரை, கணேஷ் என்ற ஊர் காவல்படையைச் சேர்ந்த காவலர் ஆய்விற்கு உட்படுத்தியுள்ளார்.

'என்னுடைய காரையே நிறுத்துவியா? மண்டியிடு' - கடமையை செய்த காவலரை தண்டித்த அரசு அதிகாரி.. கொதிக்கும் மக்கள்!

அப்போது, அவர் ஓர் விவாசயத்துறை அதிகாரி என்றும், உடனடியாக செல்ல வேண்டும் என்றும் ஆய்விற்கு உட்படாமல் தப்பிக்க முற்பட்டுள்ளார்.

ஆனால், அதற்கு ஊர் காவல்படை காவலர் கணேஷ் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகின்றது. இதனால் ஆத்திரமடைந்த மனோஜ் குமார், காரை விட்டு இறங்கி வந்து சக காவலர்கள் முன்னிலையில் கணேஷை கடுமையாக திட்டி தீர்த்துள்ளார். மேலும், 50 தோப்புகரணங்கள் போடுமாறு உத்தரவிட்டுள்ளார்.

'என்னுடைய காரையே நிறுத்துவியா? மண்டியிடு' - கடமையை செய்த காவலரை தண்டித்த அரசு அதிகாரி.. கொதிக்கும் மக்கள்!

அப்போது, காவலர் கணேஷ் தன்னை மன்னித்துவிடுங்கள் என கை கூப்பி கும்பிட்டு வேண்டியுள்ளார். இருப்பினும், அதிகாரத்தின் உச்சமாக அவரை கடுமையாக சாடியும், தோப்புகரணம் போட வைத்தும் தனது ஆத்திரத்தை தீர்த்துள்ளார் மனோஜ்.

'என்னுடைய காரையே நிறுத்துவியா? மண்டியிடு' - கடமையை செய்த காவலரை தண்டித்த அரசு அதிகாரி.. கொதிக்கும் மக்கள்!

விவசாயத்துறை அதிகாரின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் காவல்துறையின் மூத்த அதிகாரிக்கும் பங்கிருப்பது வீடியோவின் வாயிலாக தெரிகின்றது. அவரும், அரசு அதிகாரியின் காரை எப்படி நீ நிறுத்துவாய் என்று கேட்பது வீடியோவில் பதிவாகியுள்ளது.

'என்னுடைய காரையே நிறுத்துவியா? மண்டியிடு' - கடமையை செய்த காவலரை தண்டித்த அரசு அதிகாரி.. கொதிக்கும் மக்கள்!

இந்த சம்பவம்குறித்து பதிலளித்த பீஹார் மாநில டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே, "இவ்விகாரம்குறித்து உரிய ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.

தொடர்ந்து, அம்மாநில விவசாயத்துறை அமைச்சகம் சார்பில் மனோஜ் குமாருக்கு நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

'என்னுடைய காரையே நிறுத்துவியா? மண்டியிடு' - கடமையை செய்த காவலரை தண்டித்த அரசு அதிகாரி.. கொதிக்கும் மக்கள்!

பார்ப்போரை ஒரு நிமிடம் உறைய வைக்கின்ற அளவிற்கு இந்த வீடியோ சுமார் 30 நொடிகள் ஓடுகின்றது. அதில், வயதான அந்த காவலர் பலரின் முன்னிலையில் தோப்பு கரணமிட்டும், அதிகாரியின் காலில் விழும் காட்சிகள் அடங்கியிருக்கின்றது.

தான் அவசரமாக வீடியோ கான்ஃபெரன்ஸ் மீட்டிங்கிற்கு சென்றுக்கொண்டிருந்தபோது ஊர் காவலர் மடக்கியதன் காரணத்தினாலயே இவ்வாறு நடந்துக் கொண்டதாக அரசு அதிகாரி மனோஜ் குமார் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இது கண்டனத்திற்கு செயல் என்ற கருத்துகள் பரவிய வண்ணம் இருக்கின்றது. போலீஸாரின் பணியில் ஊர் காவல்படையினரின் பங்கு இன்றியமையாததாக உள்ளது. இவர்கள், காவலர்களைக் காட்டிலும் அதிக ஆபத்தான பணிகளையும் இறங்கி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 22, 2020, 22:28 [IST]
English summary
Bihar Senior Agricultural Officer Punished Home Guard With Sit-Ups. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+