ரூ. 10,500 அபராதம் பெற்ற அதிர்ஷ்டசாலி இளைஞர்... இந்த சம்பவத்த அவரு வாழ்க்கைல மறக்கவே மாட்டாரு!!

இளைஞர் ஒருவருக்கு போலீஸார் ரூ. 10,500க்கான அபராத செல்லாணை வழங்கியிருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ரூ. 10,500 அபராதம் பெற்ற அதிர்ஷ்டசாலி இளைஞர்... இந்த சம்பவத்த அவரு வாழ்க்கைல மறக்கவே மாட்டாரு!!

எப்போதும் சாலையில் சீறிப் பாய்ந்தவாறு செல்லும் பொது பேருந்துகள் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நீண்ட காலமாக முடங்கிய நிலையில் இருந்தன. இந்த நிலையில், வெகு நாட்களுக்கு பிறகு தற்போது அவை மீண்டும் சேவை ஈடுபட ஆரம்பித்துள்ளன. அதேசமயம், இப்போதும் ஒரு சில மாநிலங்கள் பொது போக்குவரத்துச் சேவையை துவங்க தயக்கம் காட்டி வருகின்றன.

ரூ. 10,500 அபராதம் பெற்ற அதிர்ஷ்டசாலி இளைஞர்... இந்த சம்பவத்த அவரு வாழ்க்கைல மறக்கவே மாட்டாரு!!

வைரஸ் பரவல் கட்டுக்கடங்காமல் தற்போதும் தீவிரம் காட்டி வருவதால் அவை தயங்குகின்றன. எனவே, குறிப்பிட்ட சில மாநிலங்கள் பிற மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்தை இன்றளவும் தொடங்காமல் நிறுத்தி வைத்தம் வண்ணமே இருக்கின்றன.

ரூ. 10,500 அபராதம் பெற்ற அதிர்ஷ்டசாலி இளைஞர்... இந்த சம்பவத்த அவரு வாழ்க்கைல மறக்கவே மாட்டாரு!!

இம்மாதிரியான சூழ்நிலையில் மக்களுக்கு சேவை வழங்கும் விதமாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் பொதுப் பேருந்துகளை மாநில அரசுகள் இயக்கி வருகின்றன. இந்நிலையில் இளைஞர் ஒருவர் அரசின் பொதுப் பேருந்து ஒன்றிற்கு வழி விடாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரூ. 10,500 அபராதம் பெற்ற அதிர்ஷ்டசாலி இளைஞர்... இந்த சம்பவத்த அவரு வாழ்க்கைல மறக்கவே மாட்டாரு!!

இந்த சம்பவம் தமிழகதத்தில் அரங்கேறியது அல்ல. கேரள மாநிலம், பயண்ணூர் (Payannur) எனும் பகுதியிலேயே அரங்கேறியிருக்கின்றது. சம்பவத்தில் ஈடுபட்டவரை தற்போது போலீஸார் கைது செய்து, அவருக்கான அபராதத்தை வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரூ. 10,500 அபராதம் பெற்ற அதிர்ஷ்டசாலி இளைஞர்... இந்த சம்பவத்த அவரு வாழ்க்கைல மறக்கவே மாட்டாரு!!

போலீஸார் அளித்துள்ள தகவலின்படி, அந்த இளைஞரின் பெயர் பிரணவ் என்பது தெரியவந்துள்ளது. இவரே கேஎஸ்ஆர்டிசிக்கு சொந்தமான பேருந்திற்கு நீண்ட நேரமாக வழி விடாமல் பயணித்துள்ளார். இளைஞரின் இந்த விதிமீறல் செயலை பேருந்தில் பயணித்த பயணி ஒருவரே, அவரது செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

ரூ. 10,500 அபராதம் பெற்ற அதிர்ஷ்டசாலி இளைஞர்... இந்த சம்பவத்த அவரு வாழ்க்கைல மறக்கவே மாட்டாரு!!

அந்த வீடியோவை அதிகப்படியோனார் பகிர்ந்ததால் பதிவிட்ட சில நேரங்களிலேயே அதிக பார்வையாளர்களை எட்டி, வைரலாகியது. மேலும், கேரள மாநில போக்குவரத்து போலீஸாரின் கண்களிலும் அந்த வீடியோ பட்டது. இதனடிப்படையிலேயே வீடியோவையேச் சான்றாக வைத்து போலீஸார் அந்த இளைஞரை (பிரணவ்) பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

ரூ. 10,500 அபராதம் பெற்ற அதிர்ஷ்டசாலி இளைஞர்... இந்த சம்பவத்த அவரு வாழ்க்கைல மறக்கவே மாட்டாரு!!

மேலும், அரசு பேருந்துக்கு வழி விடாமல் அலைக் கழித்த குற்றத்திற்காக அவருக்கு ரூ. 10,500-க்கான அபராதத்தையும் வழங்கியிருப்பதாக கூறப்படுகின்றது. வீடியோவில், பல முறை பேருந்து அவரைக் கடக்க முயன்றபோதும், இளைஞர் துளியளவும் வழி விடாமல் சென்றதை நம்மால் காண முடிகின்றது. இது மிகவும் ஆபத்தான செயலாகும்.

ரூ. 10,500 அபராதம் பெற்ற அதிர்ஷ்டசாலி இளைஞர்... இந்த சம்பவத்த அவரு வாழ்க்கைல மறக்கவே மாட்டாரு!!

எனவேதான், இருசக்கர வாகனத்தின் பதிவெண்ணைக் கொண்டு அந்த நபரை போலீஸார் தேடிப்பிடித்து அபராதச் செல்லாணை வழங்கியிருக்கின்றனர். இளைஞரின் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத வகையில் இந்த சம்பவத்தைப் போலீஸார் செய்திருக்கின்றனர். இளைஞர் இந்த முரண்பாடான செயல் அவருக்கு மட்டுமின்றி பேருந்திற்கும் நொடிப்பொழுதில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

ரூ. 10,500 அபராதம் பெற்ற அதிர்ஷ்டசாலி இளைஞர்... இந்த சம்பவத்த அவரு வாழ்க்கைல மறக்கவே மாட்டாரு!!

ஆனால், எதைப் பற்றியும் துளியளவும் கவலையின்றி அவர் பேருந்திற்கு வழி விடாமல் ஆட்டம் காட்டியவாறு சென்றிருக்கின்றார். இதற்கு தக்க பாடம் புகட்டும் விதமாகவே போலீஸார் ரூ. 10,500க்கான அபராத செல்லாணை அந்த இளைஞருக்கு வழங்கியிருக்கின்றனர். எந்தெந்த பிரிவுகளின்கீழ் இந்த அபராதம் வழங்கப்பட்டுள்ளது என்ற தகவல் தெரியவில்லை.

ரூ. 10,500 அபராதம் பெற்ற அதிர்ஷ்டசாலி இளைஞர்... இந்த சம்பவத்த அவரு வாழ்க்கைல மறக்கவே மாட்டாரு!!

இருப்பினும், வீடியோவில் அந்த நபர் ஹெல்மெட் அணியாமல் இருப்பது தெரிகின்றது. மேலும், அவர் பல இடங்களில் சாலை விதிகளை மீறியிருப்பதும் தெரிய வருகின்றது. இதனடிப்படையில் பல்வேறு பிரிவுகளின் இந்த அபராதத்தை கேரள மாநில போலீஸார் வழங்கியிருக்காலம் என தெரிகின்றது.

மிகப்பெரிய வாகனங்களை மறித்தவாறு சாலையில் பயணிப்பது மிகவும் ஆபத்தான செயலாகும். பஸ் அல்லது டிரக்குகளை கட்டுப்படுத்துவது அதிக சிரமமான ஒன்று. எனவேதான் கனரக வாகனங்களுக்கு இடையே குறைந்தபட்ச இடைவெளியை விட்டு பயணிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது. இம்மாதிரியான நிலையில் பல முறை அந்த இளைஞர் பேருந்திற்கு முன்னால் சேட்டையில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கின்றது.

ரூ. 10,500 அபராதம் பெற்ற அதிர்ஷ்டசாலி இளைஞர்... இந்த சம்பவத்த அவரு வாழ்க்கைல மறக்கவே மாட்டாரு!!

இதேபோன்று ஆம்புலன்ஸ்களை இடைமறைத்து சென்ற வாகன ஓட்டிகளுக்குகூட போலீஸார் தேடிச் சென்று அபராதச் செல்லாணை வழங்கியிருக்கின்றனர். இதற்கு போக்குவரத்து சட்டத்தில் இடம் இருப்பது குறிப்பிடத்தகுந்தது. அதாவது, அவசர கால வாகனங்களான தீயணைப்பு வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் ஆகியவற்றின் வழியை மறித்தவாறு பயணித்தால் ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் வழங்க சட்டம் இருக்கின்றது.

ரூ. 10,500 அபராதம் பெற்ற அதிர்ஷ்டசாலி இளைஞர்... இந்த சம்பவத்த அவரு வாழ்க்கைல மறக்கவே மாட்டாரு!!

அதேசமயம், அரசின் பொது பேருந்திற்கோ அல்லது பிற வாகனங்களுக்கோ இடையூறு செய்தவாறு சென்றால் இதுபோன்று அதிகபட்ச அபராதம் வழங்க சட்டத்தில் எந்த விதியும் இல்லை. ஆகையால், வேறு ஏதேனும் காரணங்களுக்காக பிரணவிற்கு கேரள போலீஸார் அதிகபட்ச அபராதத்தை வழங்கியிருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Biker Gets RS.10,500 Hefty Penalty For Blocks KSRTC Bus. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X