விலையுயர்ந்த காரை குடும்ப உறுப்பினராக சேர்த்த பாஜக எம்எல்ஏ... இந்த காரோட விலை எவ்ளோ தெரியுமா..?

கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஒருவர் விலையுயர்ந்த காரை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

விலையுயர்ந்த காரை குடும்ப உறுப்பினாரக சேர்த்த பாஜக எம்எல்ஏ... இந்த கரோட விலை எவ்ளோ தெரியுமா..?

எம்ஜி நிறுவனத்தின் புதுமுக அறிமுகமாக குளோஸ்டர் கார் இருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி ரக காராகும். இதனை வெறும் எஸ்யூவி ரக கார் என்று மட்டுமே சொல்லி முடித்துவிட முடியாது. ஏனெனில் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் எந்தவொரு காரிலும் இல்லாத ஓர் தொழில்நுட்பம் குளோஸ்டர் காரில் இருக்கின்றது. அதாவது, இக்காரில் 'தன்னாட்சி லெவல் 1' தொழில்நுட்ப வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

விலையுயர்ந்த காரை குடும்ப உறுப்பினாரக சேர்த்த பாஜக எம்எல்ஏ... இந்த கரோட விலை எவ்ளோ தெரியுமா..?

இது மனித மூலையைக் காட்டிலும் அதிவேகத்தில் செயல்பட்டு ஆபத்துகளைத் தவிர்க்க உதவும். அதாவது, தானியங்கி பிரேக், தானியங்கி பார்க்கிங் வசதி, அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் மோதல் தவிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பை இக்கார் வழங்கும். இத்தகைய சிறப்பு வசதிகள் கொண்ட காரை பாஜக-வைச் சேர்ந்த ஒருவர் புதிதாக வாங்கியிருக்கின்றார்.

விலையுயர்ந்த காரை குடும்ப உறுப்பினாரக சேர்த்த பாஜக எம்எல்ஏ... இந்த கரோட விலை எவ்ளோ தெரியுமா..?

கர்நாடாக மாநிலத்தின் ஹொன்னலி சட்டமன்ற தொகுதியின் உறுப்பினரான எம்பி ரேணுகாச்சார்யாவே இந்த காரை வாங்கியவர் ஆவார். இவர், கர்நாடக முதலமைச்சர் பிஎஸ் எடியுரப்பாவின் அரசியல் செயலாளராகவும் இருந்து வருகின்றார்.

விலையுயர்ந்த காரை குடும்ப உறுப்பினாரக சேர்த்த பாஜக எம்எல்ஏ... இந்த கரோட விலை எவ்ளோ தெரியுமா..?

இவரே, புதிய காரை விற்பனையாளரிடத்தில் இருந்து பெறுவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளன. இதனடிப்படையிலேயே இவர் புதிய எம்ஜி குளோஸ்டர் காரை வாங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விலையுயர்ந்த காரை குடும்ப உறுப்பினாரக சேர்த்த பாஜக எம்எல்ஏ... இந்த கரோட விலை எவ்ளோ தெரியுமா..?

மேலும், இதுகுறித்த புகைப்படத்தை எம்பி ரேணுகாச்சார்யாவே அவரது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார். அதில், எம்ஜி குளோஸ்டர் காரை 'குடும்பத்தின் புதிய உறுப்பினர்' எனவும் கூறியிருக்கின்றார். எம்ஜி நிறவனத்தின் பிரீமியம் காராக குளோஸ்டர் எஸ்யூவி இருக்கின்றது. எனவே இக்காரில் தொழில்நுட்ப வசதிகள் மட்டுமின்றி எக்கசக்க லக்சூரி வசதிகளும் காணப்படுகின்றன.

விலையுயர்ந்த காரை குடும்ப உறுப்பினாரக சேர்த்த பாஜக எம்எல்ஏ... இந்த கரோட விலை எவ்ளோ தெரியுமா..?

அந்தவகையில், பனோரமிக் சன்ரூஃப், மூன்று விதமான ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், 12.3 இன்ச் அளவுள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன்), ஐ-ஸ்மார்ட் இணைப்பு வசதி, 8 இன்ச் அளவிலான இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் வழங்கப்படுகின்றன.

விலையுயர்ந்த காரை குடும்ப உறுப்பினாரக சேர்த்த பாஜக எம்எல்ஏ... இந்த கரோட விலை எவ்ளோ தெரியுமா..?

இத்தகைய சிறப்பு வசதிகளைக் கொண்ட எம்ஜி குளோஸ்டர், ரூ. 28.98 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இக்கார் சூப்பர், ஷார்ப், ஸ்மார்ட் மற்றும் சேவி ஆகிய நான்கு விதமான தேர்வுகளில் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. மேலும், இதில் இருவிதமான எஞ்ஜின் தேர்வும் வழங்கப்படுகின்றது.

விலையுயர்ந்த காரை குடும்ப உறுப்பினாரக சேர்த்த பாஜக எம்எல்ஏ... இந்த கரோட விலை எவ்ளோ தெரியுமா..?

2.0 லிட்டர் டர்போ டீசல் எஞ்ஜின் மற்றும் 2.0 லிட்டர் ட்வின் ட்ர்போ டீசல் எஞ்ஜின் ஆகிய தேர்வுகளில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த கார் இந்தியாவில் தனித்துவமான விற்பனையைப் பெற்று வரும் பிற எஸ்யூவி கார்களான மஹிந்திரா அல்டுராஸ் ஜி4, டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனைக்கு களமிறங்கியிருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
BJP MLA MP Renukacharya Buys Mg Gloster SUV. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X