ஊரடங்கை மீறி தேசிய நெடுஞ்சாலையில் குதிரை சவாரி... பாஜக எம்எல்ஏ மகனின் அடாவடி செயல்... வைரல் வீடியோ!

பொதுமக்கள் பலர் வெளியில் வாகனங்களில் வெளியே வரவே தயங்கி வரும் நிலையில், பாஜக எம்எல்ஏ ஒருவரின் மகன் மாஸ்க் போன்ற பாதுகாப்பு அம்சம் எதுவும் அணியாமல் குதிரை சவாரியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்த தகவலை முழுமையாக இந்த பதிவில் காணலாம்.

ஊரடங்கை மீறி தேசிய நெடுஞ்சாலையில் குதிரை சவாரி... பாஜக எம்எல்ஏ மகனின் அடாவடி செயல்... வைரல் வீடியோ!

இந்தியாவில் கொரோனா வைரஸ் காட்டு தீயைவிட மிக அதி வேகமாக பரவிக் கொண்டிருக்கின்றது. தினந்தோறும் புதிதாக கண்டறியப்படும் வைரஸ் தொற்றுடையவர்களின் எண்ணிக்கையே இதற்கு சான்று. இந்த எண்ணிக்கையைக் கட்டுபடுத்துவதற்காகவே தேசியளவில் ஊரடங்கு உத்தரவு அமலுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றது.

ஊரடங்கை மீறி தேசிய நெடுஞ்சாலையில் குதிரை சவாரி... பாஜக எம்எல்ஏ மகனின் அடாவடி செயல்... வைரல் வீடியோ!

தற்போது நான்காம் கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கில் நாட்டின் பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு லேசான தளர்வுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இது மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவைக் காட்டிலும் கூடுதல் தளர்வுகளைக் கொண்டதாக காட்சியளிக்கின்றது. இருப்பினும், மக்கள் வழக்கம்போல் நடமாட தடை விதிக்கப்பட்ட நிலையே காட்சியளிக்கின்றது.

ஊரடங்கை மீறி தேசிய நெடுஞ்சாலையில் குதிரை சவாரி... பாஜக எம்எல்ஏ மகனின் அடாவடி செயல்... வைரல் வீடியோ!

இதனால், எந்தவொரு வரலாறும் கூறாத ஊரடங்கை, மக்கள் தங்களின் நேரடி வாழ்க்கையில் தற்போது சந்தித்து வருகின்றனர்.

ஆனால் இதனை அனைத்து மக்களுமே முழுமையாக கடைப்பிடிக்கின்றனர் என்று கூறிவிட முடியாது. ஆம், ஒரு சிலர் அரசின் விதிகளைப் பின்பற்றாமல் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் வெளியே நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.

ஊரடங்கை மீறி தேசிய நெடுஞ்சாலையில் குதிரை சவாரி... பாஜக எம்எல்ஏ மகனின் அடாவடி செயல்... வைரல் வீடியோ!

அதிலும் அரசியல் பலம் கொண்டவர்களின் நடமாட்டம் சற்று கூடுதலாகவே உள்ளது. இதனை உறுதிச் செய்யும் வகையில் தற்போது கர்நாடகா மாநிலம், சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் ஓர் சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.

இதில் தொடர்புடையவர் புவன்குமார் என கண்டறியப்பட்டுள்ளது. இவர், குண்டுல்பேட் தொகுதி பாஜக எம்எல்ஏ-வான சிஎஸ் நிரஞ்ஜன் குமாரின் மகன் ஆவார்.

ஊரடங்கை மீறி தேசிய நெடுஞ்சாலையில் குதிரை சவாரி... பாஜக எம்எல்ஏ மகனின் அடாவடி செயல்... வைரல் வீடியோ!

கொரோனா அச்சம் மற்றும் போலீசாரின் கடுமையான நடவடிக்கை உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் பலர் வெளியே தலை காட்டவே தயங்குகின்றனர். ஆனால், புவன்குமாரோ ஊரடங்கு உத்தரவையும் மீறி குதிரை சவாரியில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக, அந்த நேரத்தில் அவர் மாஸ்க் மற்றும் கையுறை போன்ற எந்தவொரு பாதுகாப்பு அம்சத்தையும் அணியவில்லை என கூறப்படுகின்றது.

ஊரடங்கை மீறி தேசிய நெடுஞ்சாலையில் குதிரை சவாரி... பாஜக எம்எல்ஏ மகனின் அடாவடி செயல்... வைரல் வீடியோ!

இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது டுவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

அத்தியாவசிய தேவைக்காக மக்கள் வெளியே வரலாம் என அனுமதி வழங்கியிருக்கும்போதிலும் ஒரு சில இடங்களில் போலீஸார் கண்மூடித்தனமாக வாகன ஓட்டிகளை தாக்கி வருவதை நம்மால் காண முடிகின்றது.

ஊரடங்கை மீறி தேசிய நெடுஞ்சாலையில் குதிரை சவாரி... பாஜக எம்எல்ஏ மகனின் அடாவடி செயல்... வைரல் வீடியோ!

ஆனால், இந்த சம்பவத்தில் எந்தவொரு பாதுகாப்பு அம்சமுமின்றி சாம்ராஜ்நகர் மாவட்டத்தின் முக்கிய தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் அந்த இளைஞர் ஜாலியாக வலம் வந்திருக்கின்றார். இது மைசூர்-ஊட்டியை இணைக்கும் முக்கிய சாலையாகும். இங்குதான் கடந்த திங்களன்று புவன்குமார், குதிரையில் ஜாலி ரைடிங்கில் ஈடுபட்டுள்ளார்.

ஊரடங்கை மீறி தேசிய நெடுஞ்சாலையில் குதிரை சவாரி... பாஜக எம்எல்ஏ மகனின் அடாவடி செயல்... வைரல் வீடியோ!

ஆனால், தற்போதுதான் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது. இந்த விதிமீறலுக்காக புவன்குமார்மீது என்ன மாதிரியான நடவடிக்கை பாயும் என்பதுகுறித்த தகவல் வெளியாகவில்லை. ஆனால், இதுபோன்ற விதிமீறலில் ஈடுபட்ட சாமான்ய மக்களுக்கு போலீஸார் கடுமையான தண்டனைகளை வழங்கி வருகின்றனர்.

ஊரடங்கை மீறி தேசிய நெடுஞ்சாலையில் குதிரை சவாரி... பாஜக எம்எல்ஏ மகனின் அடாவடி செயல்... வைரல் வீடியோ!

குறிப்பாக, வெளியில் சுற்றி திரியும் வாகன ஓட்டிகளுக்கு லத்தி சார்ஜ், வழக்கு பதிவு, வாகன பறிமுதல், அபராதம் உள்ளிட்ட பல்வேறு தண்டனைகளைப் போலீஸார் வழங்கி வருகின்றனர். எனவே, நெட்டிசன்கள் பலர் எம்எல்ஏ மகன்மீது சட்டம் பாயும் வரை இந்த வீடியோவை வைரலாக்க வேண்டும் என போர்க் கொடி தூக்கியிருக்கின்றனர். இதனால், எம்எல்ஏ சிஎஸ் நிரஞ்ஜன் குமார் மற்றும் அவரது மகன் புவன் குமாருக்கு நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது.

ஊரடங்கை மீறி தேசிய நெடுஞ்சாலையில் குதிரை சவாரி... பாஜக எம்எல்ஏ மகனின் அடாவடி செயல்... வைரல் வீடியோ!

இதுகுறித்து இந்தியா டுடேவிடம் கருத்து தெரிவித்த பாஜக எம்எல்ஏ நிரஞ்ஜன் குமார், "குதிரை சவாரி செய்தது எனது மகன்தான். கொரோனா வைரஸ் தடை காலத்தில் குதிரை சவாரி செய்யக்கூடாது என எந்தவொரு விதியும் அதிகாரப்பூர்வமாக (எழுத்துபூர்வமாக) தெரிவிக்கப்படவில்லை" என கூறினார்.

ஊரடங்கை மீறி தேசிய நெடுஞ்சாலையில் குதிரை சவாரி... பாஜக எம்எல்ஏ மகனின் அடாவடி செயல்... வைரல் வீடியோ!

மேலும் பேசிய அவர், "சம்பவத்தன்று தான் மைசூரில் இருந்ததாகவும், ஆகையால் என்ன நடந்தது என்றே எனக்கு தெரியாது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமின்றி, தனது மகனால் தவறு ஏதேனும் நடைபெற்றிருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்தார்.

ஊரடங்கை மீறி தேசிய நெடுஞ்சாலையில் குதிரை சவாரி... பாஜக எம்எல்ஏ மகனின் அடாவடி செயல்... வைரல் வீடியோ!

தற்போது, எம்எல்ஏ நிரஞ்ஜன் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆகியோர் சாம்ராஜ்நகர் எல்லைப் பகுதியில் உள்ள பசுமை மண்டலம் ஒன்றில் வசித்து வருகின்றனர். எனவே, அங்கு அவர்கள் எந்தவொரு பாதுகாப்பு (மாஸ்க், கையுறை) கவசங்களையும் பயன்படுத்தவில்லை என கூறப்படுகின்றது.

இருப்பினும், வெளியில் வரும்போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் ஒவ்வொரு மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு அறிவுறுத்தி வருகின்றன.

ஊரடங்கை மீறி தேசிய நெடுஞ்சாலையில் குதிரை சவாரி... பாஜக எம்எல்ஏ மகனின் அடாவடி செயல்... வைரல் வீடியோ!

இந்த நிலையிலேயே, தனக்கும் தன்னைச் சுற்றியிருப்போர்களுக்கும் கொடிய வைரஸ் கொரோனா தொற்றை ஏற்படுத்தும் வகையில் புவன் குமார் மாஸ்க் இல்லாமல் குதிரை சவாரி செய்துள்ளார். தற்போது இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதால் அம்மாவட்ட காவல் அதிகாரிகள் எம்எல்ஏ மகன்மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுப்பதற்கான வழிகளை ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து சாம்ராஜ்நகர் எஸ்பி கூறியதாவது, "தடை காலத்தின்போது சாலைகளில் குதிரை சவாரி செய்வது விதிமீறல் எனக் கண்டறியப்பட்ட பின்னரே அவர் (புவன் குமார்) மீது நடவடிக்கை எடுக்க முடியும்" என்றார்.

இவ்வாறு, சாம்ராஜ் நகர் காவல் அதிகாரிகள் ஆய்வு செய்துக்கொண்டிருக்கும் அதே வேலையில், நாட்டின் பிற பகுதிகளில் எந்தவொரு கேள்வியையும் எழுப்பாமல் வெளியில் சுற்றி திரிபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வரும் தகவலை நாம் பார்த்திருப்போம்.

ஊரடங்கை மீறி தேசிய நெடுஞ்சாலையில் குதிரை சவாரி... பாஜக எம்எல்ஏ மகனின் அடாவடி செயல்... வைரல் வீடியோ!

குறிப்பாக, மாஸ்க் அணிய வில்லை என்றால் ரூ. 500 அபராதம், ஒருவருக்கு மேல் ஓர் டூவீலரில் பயணித்தால் வாகன பறிமுதல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளைப் போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். இம்மாதிரியான சூழ்நிலையில் எம்எல்ஏ மகனின் செயல் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 20, 2020, 17:28 [IST]
English summary
Gundlupet BJP MLA Son Rides A Horse On Highway Without Wearing A Mask During Lockdown. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+