பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஜிடி காரின் ஸ்பெஷல் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஜிடி காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

 பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஜிடி காரின் ஸ்பெஷல் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்தியாவின் ஆரம்ப ரக சொகுசு கார் மார்க்கெட்டில் தனித்துவமான டிசைன் அம்சங்களுடன் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் க்ரான் டூரிஷ்மோ கார். சென்னையிலுள்ள பிஎம்டபிள்யூ ஆலையில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஜிடி காரின் ஸ்பெஷல் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த நிலையில், வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் வகையில், பல கூடுதல் சிறப்பம்சங்களுடன் இந்த காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஜிடி ஷேடோ எடிசன் என்ற பெயரில் இந்த மாடல் வந்துள்ளது.

 பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஜிடி காரின் ஸ்பெஷல் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

மேலும், இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எம்- டிசைன் பேக்கேஜ் ஆக்சஸெரீகள் மற்றும் சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. எல்இடி ஹெட்லைட்டுகள், டெயில்லைட்டுகள் உள்ளன. பளபளப்பு மிகுந்த விசேஷ கருப்பு வண்ண க்ரில் அமைப்பு, எம் லோகோ கொண்ட பேட்ஜ், நட்சத்திரத்தை பிரதிபலிக்கும் வகையிலான விசேஷ 18 அங்குல அலாய் வீல்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

 பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஜிடி காரின் ஸ்பெஷல் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

எம் ஸ்போர்ட்ஸ் லெதர் ஸ்டீயரிங் வீல், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், பனோரமிக் சன்ரூஃப் ஆகியவையும் இதன் முக்கிய சிறப்பம்சங்களாக உள்ளன. இந்த காில் 8.8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சி்டம் உள்ளது. ஆப்பிள் கார் ப்ளே செயலியை சப்போர்ட் செய்யும் வசதியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பிரத்யேகமான ஐ-ட்ரைவ் செயலி மூலமாக பல்வேறு கட்டுப்பாட்டு மற்றும் தகவல்களை தரக்கூடிய தொழில்நுட்பமும் உள்ளது.

 பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஜிடி காரின் ஸ்பெஷல் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் க்ரான் டூரிஷ்மோ ஷேடோ எடிசன் மாடலில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 248 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

 பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஜிடி காரின் ஸ்பெஷல் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் 6 ஏர்பேக்குகள், பிரேக் அசிஸ்ட் வசதியுடன் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டைனமிக் டிராக்ஷன் கன்ட்ரோல், கார்னரிங் பிரேக் கன்ட்ரோல், ரன் ஃப்ளாட் டயர்கள், எமெர்ஜென்சி ஸ்பேர் வீல், க்ராஷ் சென்சார் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு தொழில்நுட்ப வசதிகள் உள்ளன.

 பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஜிடி காரின் ஸ்பெஷல் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த கார் ஆல்பைன் ஒயிட், மெல்போர்ன் ரெட் மெட்டாலிக், பிளாக் சஃபையர் மெட்டாலிக், எஸ்டோரில் புளூ மெட்டாலிக் பெயிண்ட் ஒர்க்ஸ் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். உட்புறத்திற்கும் மூன்று விதமான வண்ணத் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

 பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஜிடி காரின் ஸ்பெஷல் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஜிடி ஷேடோ எடிசன் மாடலுக்கு ரூ.42.50 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இது தனித்துவமான தேர்வாகவும் அமையும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 19, 2020, 16:30 [IST]
English summary
BMW has launched the 3 Series Gran Turismo 'Shadow Edition' India and priced at Rs. 42.50 lakh (ex-showroom).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+