ரூ.1.29 கோடி ஆரம்ப விலையுடன் 2020 பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் க்ரான் கூபே இந்தியாவில் அறிமுகம்...!
பிஎம்டபிள்யூ நிறுவனம் அதன் பிரபலமான லக்சரி மாடல்களான எம்8 மற்றும் 8 சீரிஸ் க்ரான் கூபே கார்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரு புதிய பிஎம்டபிள்யூ கார்களை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் க்ரான் கூபே மாடல் 840ஐ க்ரான் கூபே மற்றும் 840ஐ க்ரான் கூபே எம் ஸ்போர்ட் எடிசன் என்ற இரு விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 840ஐ வேரியண்ட்டின் விலை ரூ.1.30 கோடியாகவும், 840ஐ எம் ஸ்போர்ட் வேரியண்ட்டின் விலை ரூ.1.55 கோடியாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் ஜெர்மனை சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனம் தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ள எம்8 கூபே ரூ.2.15 கோடியில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கினால் டீலர்ஷிப் ஷோரூம்கள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பினும் இந்த இரு புதிய பிஎம்டபிள்யூ கார்களையும் இந்நிறுவனத்தின் ஆன்லைன் சில்லறை விற்பனை தளத்தின் மூலமாக வாங்க முடியும்.

இதில் 8 சீரிஸ் மாடல் இந்நிறுவனத்தின் லேட்டஸ்ட் மற்றும் புதிய தனித்துவமான 4-கதவு கூபே மாடலாக இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் நீளம் 5 மீட்டர்கள், அகலம் 2 மீட்டர்கள் ஆகும். இந்த பரிணாம அளவுகளை இந்நிறுவனத்தின் லேட்டஸ்ட் 7 சீரிஸ் மாடலும் பெற்றிருந்தது.

இருப்பினும் புதிய 8 சீரிஸ் மாடலில் வழங்கப்பட்டுள்ள ஸ்லோப்பிங் ரூஃப்லைன், பின்புறத்தில் ஹெட்ரூம் உள்ளிட்டவை கூடுதலாக வெற்றிடத்தை வழங்குவதால் கூடுதலாக சில பயணிகளை ஏற்றி கொள்ள முடியும்.

இதன் 840ஐ க்ரான் கூபே, எம் ஸ்போர்ட் என இரு எடிசன் மாடல்களும் அதிகளவில் ஸ்டைலிங் மற்றும் ஸ்போர்டியான டிசைனில் அதிக எண்ணிக்கையில் வசதிகளையும் எலக்ட்ரானிக்ஸ் பாகங்களையும் பெற்றுள்ளன. அதேநேரம் இதன் டாப் வேரியண்ட்டான எம் ஸ்போர்ட் வெர்சன் கூடுதலாக சில வசதிகளையும் கொண்டுள்ளது.

இந்த கூடுதல் வசதிகளில் கூர்மையான தோற்றத்திற்காக காஸ்மெட்டிக் பாகம் ஒன்று, பிஎம்டபிள்யூவின் லேசர் லைட் ஹெட்லேம்ப் யூனிட்கள், பெரிய 19-இன்ச் அலாய் சக்கரங்கள், 4 நிலைகளில் க்ளைமேட் கண்ட்ரோல், ஆப்பிள் கார்ப்ளே உடன் லேட்டஸ்ட் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 16-இன்ச் ஸ்பீக்கர்களுடன் ஹர்மன்-கார்டோன் ஆடியோ சிஸ்டம், முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 360 கோண கேமிரா உள்ளிட்டவை அடங்குகின்றன.

8 சீரிஸ் மாடலின் இந்த இரு வெர்சன்களிலும் 3.0 லிட்டர் 6-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 340 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் உடன் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

8 சீரிஸ் மாடலின் 840ஐ க்ரான் கூபே எடிசனின் செயல்திறன்மிக்க வெர்சன் தான் பிஎம்டபிள்யூ எம்8 கூபே கார். இந்த காரில் இந்நிறுவனம் பெரிய 4.4 லிட்டர் வி8 ட்வின்-டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜினை பொருத்தியுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 600 பிஎச்பி பவரையும், 750 என்எம் டார்க் திறனையும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் வெளிப்படுத்தும்.

பிஎம்டபிள்யூவின் இந்த எம்8 மாடல் 0-விலிருந்து 100kmph என்ற வேகத்தை வெறும் 3.3 வினாடிகளில் எட்டிவிடும். இதன் அதிகப்பட்ச வேகம் 250kmph ஆகும். இந்த இரு புதிய மாடல்களிலும் இந்நிறுவனத்தின் எக்ஸ்ட்ரைவ் தொழிற்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளதால் அவற்றின் என்ஜின், ஆற்றலை காருக்கு அனைத்து சக்கரங்களின் வழியாக அனுப்பும்.

எம்8 மாடலில் மட்டும் கூடுதல் தேர்வாக பின்சக்கர ட்ரைவ் உள்கட்டமைப்பு வழங்கப்படுகிறது. பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் லக்சரி மாடலாக விளங்கும் 8 சீரிஸ் மாடலுக்கு மெர்சிடிஸ்-பென்ஸ் சிஎல்எஸ் போட்டியாகவுள்ளது. எம்8 மாடலுக்கு மெர்சிடிஸ் நிறுவனத்தின் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி எஸ்63 கூபே கார் போட்டியாக விளங்கும்.


Click it and Unblock the Notifications








