விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ சொகுசு காரை அடித்து தூக்கிய ரயில்... அசால்டாக வெளியேறிய டிரைவர் - வீடியோ!

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் விலையுயர்ந்த சொகுசு கார்மீது அதிவேகமாக வந்த ரயில் மோதி விபத்துக்குள்ளாகும் வீடியோக் காட்சிகள் வெளியாகியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ சொகுசு காரை அடித்து தூக்கிய ரயில்... அசால்டாக வெளியேறிய டிரைவர் - வீடியோ!

உலகம் முழுவதும் ஏராளமான விபத்துகள் தினந்தோறும் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. எவ்வளவு விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும் விபத்துகள் குறைந்தபாடில்லை. இந்தியாவில் விபத்தை குறைக்கும் நோக்கில் போக்குவரத்து விதமீறல்களுக்கான அபராதம் பத்து மடங்கு வரை உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ சொகுசு காரை அடித்து தூக்கிய ரயில்... அசால்டாக வெளியேறிய டிரைவர் - வீடியோ!

இருப்பினும், விதிமீறல்கள் குறைந்தபாடில்லை. இது இந்தியாவில் மட்டுமின்றி வாக அடர்த்தியை அதிகமாக கொண்டிருக்கும் உலக நாடுகள் அனைத்திற்கும் பொதுவான ஒன்றாக இருக்கின்றது. இதன்காரணமாகவே, நாளுக்கு நாள் புதிய எண்ணிக்கையை சாலை விபத்துகளும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் எட்டி வருகின்றன.

விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ சொகுசு காரை அடித்து தூக்கிய ரயில்... அசால்டாக வெளியேறிய டிரைவர் - வீடியோ!

இதனை உறுதிச் செய்கின்ற வகையில் இணையத்தில் தினந்தோறும் ஏராளமான விபத்துகள்குறித்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

அதில், ஒரு சில விபத்துகுறித்த வீடியோக்கள் மிகவும் கொடூரமானவையாக இருக்கின்றன.

விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ சொகுசு காரை அடித்து தூக்கிய ரயில்... அசால்டாக வெளியேறிய டிரைவர் - வீடியோ!

இருப்பினும், விழிப்புணர்வின் காரணமாக ஒரு சிலர் முகப்புத்தகம், யுடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இருப்பினும் விதிமீறி வாகனங்களை இயக்குபவர்கள் அடங்கியவாறு இல்லை.

அந்தவகையில், விதியை மீறி வாகனத்தை இயக்கி விபத்தில் சிக்கிய காரை பற்றிய புதிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக வருகின்றது.

விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ சொகுசு காரை அடித்து தூக்கிய ரயில்... அசால்டாக வெளியேறிய டிரைவர் - வீடியோ!

இந்த வீடியோவில் அடைக்கப்பட்ட ரயில்வே கேட்டைக் கடக்கும் காரொன்று ரயிலில் சிக்கி சின்னாபின்னமாவதை வெளிப்படுத்தும் வகையில் காட்சிகள் இருக்கின்றன.

இந்த சம்பவம் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் அரங்கேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ சொகுசு காரை அடித்து தூக்கிய ரயில்... அசால்டாக வெளியேறிய டிரைவர் - வீடியோ!

இந்த வைரல் வீடியோவில் கருப்பு நிற பிஎம்டபிள்யூ சொகுசு கார் ஒன்று வந்த வேகத்திலேயே அடைக்கப்பட்டிருந்த ரியல்வே கேட்டை கடக்க முயன்றதானலயே இந்த விபத்தைச் சந்தித்ததாக போலீஸார் கூறியுள்ளனர். அப்போது, அதிவேகமாக வந்த ரயில் கட்டுபடுத்த முடியாமல் கார் மீது மோதி, சில மீட்டர்கள் இழத்துச் சென்று நின்றது.

விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ சொகுசு காரை அடித்து தூக்கிய ரயில்... அசால்டாக வெளியேறிய டிரைவர் - வீடியோ!

இந்த விபத்தில் கார் முழுவதுமாக உருக்குலைந்து சிதிலமடைந்தது. இருப்பினும், காரில் இயக்கி வந்த ஓட்டுநருக்கு அதிர்ஷ்டவசமாக ஒன்றுமே ஆகவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ சொகுசு காரை அடித்து தூக்கிய ரயில்... அசால்டாக வெளியேறிய டிரைவர் - வீடியோ!

அதேசமயம், விபத்தை அடுத்து சிறு சிறு காயங்களுடன் காரை ஓட்டி வந்தவர் நொறுங்கிக்கிடந்த காரின் முகப்பு பகுதியில் இருந்து அசால்டாக வெளிவந்ததாகவும் விபத்தை நேரில் பார்த்த வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ சொகுசு காரை அடித்து தூக்கிய ரயில்... அசால்டாக வெளியேறிய டிரைவர் - வீடியோ!

இந்தளவிற்கு கோர விபத்தில் அவர் தப்பியது மிகவும் அதிர்ஷ்டவசமான ஒன்று என்ற கருத்தையும் அவர்கள் கூறினர். இருப்பினும், சிறு காயங்கள் காரணமாக காவல்துறையினர் அந்த டிரைவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். சில மணி நேர சிகிச்சைக்கு பின்னர் முறுநாள் அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்த விபத்துகுறித்த காட்சியை லாஸ் ஏஞ்சல்ஸ் நகர காவல்துறை அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அவர்களின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றனர்.

மேலும், அந்த டுவிட்டர் பதிவில், "தண்டவாளங்களை கடக்கும்போது அதிக கவனத்துடன் கடக்க வேண்டும் என்று" வாகன ஓட்டிகளுக்கு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
BMW Collided With Fast Moving Train. Read In Tamil.
Story first published: Sunday, March 8, 2020, 11:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X