துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...

பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ துணி வியாபாரத்தில் களமிறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

துணி வியாபரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு... நம்ப முடியலைல!

உலக புகழ்பெற்ற சொகுசு வகன உற்பத்தி நிறுவனங்களில் பிஎம்டபிள்யூ-வும் ஒன்று. இந்த நிறுவனமே இந்தியாவில் துணி, மணி விற்பனையில் களமிறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆமாங், லைஃப் ஸ்டைல் கலெக்ஷன் எனப்படும் ரைடர்களைக் கவரக்கூடிய ஜாக்கெட், சன்கிளாஸ், சிப்பர் வாட்டர் பாட்டில்கள் (sippers) உள்ளிட்டவற்றை பிஎம்டபிள்யூ அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

துணி வியாபரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு... நம்ப முடியலைல!

2020 பிஎம்டபிள்யூ லைஃப் ஸ்டைல் கலெக்ஷன் எனும் பெயரில் அவை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. இவை, பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட கார் விற்பனையகங்கள் மற்றும் ஷோரூம்களில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. நாடு முழுவதும் விற்பனைக்குக் கிடைக்கும் வகையில் பிஎம்டபிள்யூ நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கின்றது.

துணி வியாபரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு... நம்ப முடியலைல!

ஆண், பெண் என இரு பாலர்களுக்குமான துணி மற்றும் அணிகலன்கள் ஆகியவற்றை அது அறிமுகம் செய்திருக்கின்றகு. நவீன யுக டிசைன் மற்றும் லோகோக்களில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மிகப்பெரிய பிஎம்டபிள்யூ லோகவுடன் கூடிய டீ-சர்ட்டுகள்கூட விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.

துணி வியாபரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு... நம்ப முடியலைல!

இதன்மூலம் என்னென்ன பொருட்கள் விற்பனைக்கு வந்திருக்கின்றன:

பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கே உரித்தான கிட்னி வடிவிலான கிரில்லை பரைசாற்றக்கூடிய புகைப்படத்துடன் கூடிய டீ-சர்ட், பிஎம்டபிள்யூ ஆக்டிவ் ஸ்போர்ட்ஸ் பாட்டில், பிஎம்டபிள்யூ தெர்மோ கப் (சுடும் தன்மையை தக்க வைக்க உதவும் கப்), பிஎம்டபிள்யூ ஆக்டிவ் யோகா மேட், பிஎம்டபிள்யூ கூல் பேக், பிஎம்டபிள்யூ டிராவல் செட் மற்றும் செல்லப் பிராணிகளுக்கான பொருட்கள் உள்ளிட்டவை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன.

துணி வியாபரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு... நம்ப முடியலைல!

இதுதவிர, பெண்களுக்கான எம் ஜாக்கெட், ஆண்களுக்கான ஸ்வெட்டர் ஜாக்கெட், பிஎம்டபிள்யூ தொப்பி, டி-சர்ட் மற்றும் பிஎம்டபிள்யூ எம் போர்ட் உள்ளிட்டவையும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இத்துடன், அன்றாட அவசியமான பொருட்கள் சிலவற்றையும் பிஎம்டபிள்யூ விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.

துணி வியாபரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு... நம்ப முடியலைல!

அதாவது, மோட்டார் ஸ்போர்ட் தரத்திலான குடை, ஜிம் பயன்பாட்டிற்காக அணியக்கூடிய பிரத்யேக பேன்ட் மற்றும் டீசர்ட் உள்ளிட்டவற்றையும் பிஎம்டபிள்யூ விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. மேலும், சிலிகான் பட்டையுடன்கூடி கைக் கடிகாரம், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தேவையான இன்னும் சில பிரத்யேக அணிகலன்களையும் அது அறிமுகப்படுத்தியுள்ளது.

துணி வியாபரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு... நம்ப முடியலைல!

பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது இந்திய ரசிகர்களைக் கவரும் நோக்கில் லைஃப் ஸ்டைல் கலெக்ஷன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதேபோன்று அண்மையில், பட்ஜெட் சொகுசு கார் பிரியர்களைக் கவரும் வகையில், பிஎம்டபிள்யூ 2 சீரிஸின் கிரான் கூபே காரை இந்தியாவில் அது அறிமுகப்படுத்தியது.

துணி வியாபரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு... நம்ப முடியலைல!

இக்காருக்கு இந்திய மதிப்பில் ரூ. 39.3 லட்சம் என விலை நிர்ணயிக்கப்பட்டது. இது ஆரம்பநிலை மாடலான 220டீ ஸ்போர்ட் லைன் வேரியண்டின் விலையாகும். இதன் உயர்நிலை வேரியண்டான எம் ஸ்போர்ட்டிற்கு ரூ. 41.4 லட்சம் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்காருக்கு ரூ. 50 ஆயிரம் என்ற முன் தொகையில் தற்போது முன் பதிவு செய்யப்பட்டு வருகின்றது.

துணி வியாபரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு... நம்ப முடியலைல!

இந்தியாவில் விலை குறைவாக தற்போது விற்பனைக்கு கிடைக்கும் பிஎம்டபிள்யூ காராக இதுவே ஆகும். மேலும், இந்தியாவில் 4 கதவுகள் அமைப்புடன் கூபே ரகத்தில் கிடைக்கும் முதல் காராகவும் இது சந்தையில் உருவெடுத்துள்ளது. புதிய பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூபே காரில் 2.0 லிட்டர் டீசல் எஞ்ஜின் பொருத்தப்பட்டு இருக்கின்றது.

துணி வியாபரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு... நம்ப முடியலைல!

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 187 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸில் இது விற்பனைக்குக் கிடைக்கின்றது. மேலும், விரைவில் பெட்ரோல் மாடலையும் இந்தியாவில் களமிறக்க பிஎம்டபிள்யூ திட்டமிட்டு வருகின்றது.

Most Read Articles

English summary
BMW India launched Lifestyle Collection in India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X