மருத்துவர்களை கவுரவப்படுத்த பிஎம்டபிள்யூ வழங்கும் ஸ்பெஷல் திட்டம்!

கொரோனா தடுப்புப் போரில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை போற்றும் விதத்தில் சிறப்பு சர்வீஸ் திட்டம் ஒன்றை பிஎம்டபிள்யூ நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா போர்... மருத்துவர்களுக்கு பிஎம்டபிள்யூ வழங்கும் சூப்பர் பரிசு!

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான போரில் மருத்துவர்கள் தங்கள் இன்னுயிரயைும் பொருட்படுத்தாமல் களம் கண்டுள்ளனர். தூக்கத்தையும், குடும்பத்தையும் நினைக்காமல் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களை குணப்படுத்தும் பணிகளில் மருத்துவர்களின் பங்கு மகத்தானதாக இருந்து வருகிறது.

கொரோனா போர்... மருத்துவர்களுக்கு பிஎம்டபிள்யூ வழங்கும் சூப்பர் பரிசு!

இந்த நிலையில், கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை கவுரவிக்கும் விதமாக சிறப்பு சர்வீஸ் திட்டத்தை பரிசாக வழங்குவதாக பிஎம்டபிள்யூ நிறுவனம் அறிவித்துள்ளது. பிஎம்டபிள்யூ , மினி கார்கள் மற்றும் பிஎம்டபிள்யூ மோட்டோராட் பைக்குகளை வைத்திருக்கும் மருத்துவர்களுக்கு இது பொருந்தும்.

கொரோனா போர்... மருத்துவர்களுக்கு பிஎம்டபிள்யூ வழங்கும் சூப்பர் பரிசு!

இந்த திட்டத்தின்படி, இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு பெற்ற மருத்துவர்கள் பிஎம்டபிள்யூ கார், பைக் உரிமையாளர்களாக இருக்கும்பட்சத்தில், அவர்களுக்கு இலவச எஞ்சின் ஆயில் மாற்றித் தருவதுடன், பரிசோதனையையும் செய்து தருவதாக பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.

கொரோனா போர்... மருத்துவர்களுக்கு பிஎம்டபிள்யூ வழங்கும் சூப்பர் பரிசு!

லாக் டவுன் முடிந்து 90 நாட்களுக்குள் இந்த சிறப்பு திட்டத்தை மருத்துவர்கள் பயன்படுத்திக் கொள்வதற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், கார்களில் கிருமி நாசினியுடன் சுத்தம் செய்து தரும் பணிகளும் செய்து தரப்படுவதாக பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.

கொரோனா போர்... மருத்துவர்களுக்கு பிஎம்டபிள்யூ வழங்கும் சூப்பர் பரிசு!

இதுகுறித்து பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் தலைவர் அர்லிண்டோ டெக்ஸிரா கூறுகையில்," இந்த மாத துவக்கத்தில் இருந்தே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான சென்னை மற்றும் டெல்லி உள்ளடக்கிய என்சிஆர் பிராந்தியத்தில் மருத்துவத் துறை தேவைக்காகவும், பாதிக்கப்பட்டோருக்காகவும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பிஎம்டபிள்யூ சார்பில் செய்து வருகிறோம்.

கொரோனா போர்... மருத்துவர்களுக்கு பிஎம்டபிள்யூ வழங்கும் சூப்பர் பரிசு!

மக்களின் உடல்நலன் மற்றும் பொது சுகாதாரத்தை பாதுகாப்பதற்காக மருத்துவர்கள் இரவு பகல் தினசரி பாராமல் உழைத்து வருகின்றனர். அவர்களுக்கு அன்பளிப்பாக எஞ்சின் ஆயில் சர்வீஸ் திட்டத்தை எங்களது டீலர்கள் மூலமாக வழங்க உள்ளோம்.

கொரோனா போர்... மருத்துவர்களுக்கு பிஎம்டபிள்யூ வழங்கும் சூப்பர் பரிசு!

எதிர்பாராத இந்த இக்கட்டான தருணத்தில், மருத்துவர்களின் வாகனங்களை அன்பளிப்பு திட்டத்தின் வாயிலாக பராமரித்து தருவதில் எமது நிறுவனமும், டீலர்களும் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறோம்," என்று கூறி இருக்கிறார்.

More from DriveSpark

Article Published On: Friday, May 1, 2020, 6:28 [IST]
English summary
BMW India has announced a new initiative for doctors who own BMW or MINI cars and/or BMW Motorrad motorcycles. The company will be providing a complimentary engine oil service for all doctor customers of the BMW brand in the country.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+