கார்களை ஹோம் டெலிவிரி தரும் பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம்!
கொரோனா பிரச்னையால், கார்களை வீட்டிலேயே டெலிவிரி கொடுக்கும் புதிய திட்டத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது பிஎம்டபிள்யூ நிறுவனம்.

கொரோனா வைரஸ் பாதிப்பு சொல்ல முடியாத துயரத்தையும், பொருளாதார இழப்புகளையும் தந்து வருகிறது. கொரோனா பிடியில் இருந்து மீள்வதற்கு கையில் ஒருக்கும் ஒரே தடுப்பு ஆயுதம் ஊரடங்கு. இதையே உலகின் அனைத்து நாடுகளும் கையில் எடுத்து கொரனோ போரில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

நம் நாட்டிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் கவலையை அளித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க 21 நாள் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், அனைத்து விதமான வர்த்தகமும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.

வர்த்தக இழப்பை ஓரளவாவது சரிகட்டுவதற்கான புதிய திட்டங்களை வாகன நிறுவனங்கள் கையில் எடுத்துள்ளன. அதன்படி, டாடா, ஹூண்டாய் உள்ளிட்ட கார் நிறுவனங்கள் ஆன்லைனிலேயே கார் முன்பதிவு செய்து வாங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தின.

இதேபோன்று, பிஎம்டபிள்யூ நிறுவனமும் தனது சொகுசு கார்களை ஆன்லைனிலேயே விற்பனை செய்வதற்கான திட்டத்தை அறிவித்துள்ளது. அதாவது, ஷோரூமிற்கு செல்லாமல் முன்பதிவு முதல், டெலிவிரி முதல் அனைத்து சேவைகளையும் வீட்டிலிருந்தே பெற முடியும்.

இந்த திட்டத்தின் கீழ் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள், கார் மாடல் தேர்வு, வண்ணத் தேர்வு, இன்டீரியர் தேர்வு, கூடுதல் ஆக்சஸெரீகளை பொருத்துவதற்கான வாய்ப்பு, கடன் வசதி, டீலர் தேர்வு வரை ஆன்லைனிலேயே செய்ய முடியும்.

முன்பதிவு செய்தவுடன் சம்பந்தப்பட்ட டீலரை சேர்ந்த விற்பனை பிரதிதிகள் வாடிக்கையாளருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பார். மிக விரைவாக கடன் வசதி ஏற்படுத்தி கொடுப்பதற்கான பணிகளையும் விற்பனை பிரதிநிதி துரிதமாக செய்து கொடுப்பார்.

மேலும், கார் முழுமையாக கிருமி நாசினி மூலமாக சுத்தப்படுத்தப்பட்ட பின்னர், வாடிக்கையாளரின் வீட்டிற்கு வந்தே டெலிலிரி கொடுக்கப்படும். அதேபோன்று, ஆவணங்கள் முழுமையாக பாதுகாக்கப்பட்ட உறைக்குள் வைத்து வாடிக்கையாளரிடம் வழங்கப்படும்.
அதாவது, வாடிக்கையாளர் வீட்டில் இருந்தபடியே காரை டெலிவிரி பெற்றுவிடுவதற்கான மிகப்பெரிய வாய்ப்பை இந்த புதிய நடைமுறை மூலமாக பிஎம்டபிள்யூ வழங்குகிறது. இதேபோன்று, அனைத்து நிறுவனங்களும் இழப்பை தவிர்ப்பதற்கு இதே பாணியிலான திட்டங்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








