பளபளக்கும் சில்வர் நிறத்தில்... புனேவில் தரிசனம் அளித்த பிஎம்டபிள்யூ எம்5 ஃபேஸ்லிஃப்ட்...
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய எம்5 ஃபேஸ்லிஃப்ட்டின் ஸ்பை படங்கள் புனேவில் இருந்து வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

பிஎம்டபிள்யூ நிறுவனம் எம்5 ஃபேஸ்லிஃப்ட் காரை பற்றிய விபரங்களை கடந்த ஜூன் மாதத்தில் வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் தான் தற்போது இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் புனேவில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

வழக்கமான பிஎம்டபிள்யூ எம்5 காரின் அப்டேட் வெர்சனாக வெளிவரும் இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் இரட்டை L-வடிவ எல்இடி பகல்நேர விளக்குகளுடன் ரீடிசைனில் எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் புகை எஃபக்ட் உடன் புதிய எல்இடி டெயில்லைட்கள் உள்ளிட்டவற்றை பெற்றுள்ளது.

இவற்றுடன் பளபளப்பான கருப்பு நிறத்தில் க்ரில், வித்தியாசமான பம்பர்கள், பூட் ஸ்பாய்லர் மற்றும் டிஃப்யூஸர் போன்றவற்றையும் புதிய எம்5 கார் கொண்டுள்ளது. மேற்கூரை கார்பன் ஃபைபரால் தயாரிக்கப்பட்டும், அலாய் சக்கரங்கள் 20 இன்ச்சில் வழங்கப்பட்டும் உள்ளன.

தற்போது, கார் க்ரேஸி இந்தியா என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள பிஎம்டபிள்யூ எம்5 ஃபேஸ்லிஃப்ட் கார் சில்வர் நிறத்தில் காட்சியளிக்கிறது. இதன் உட்புறத்தில் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதியுடன் 12.3 இன்ச்சில் தொடுத்திரை ஹெட் யூனிட்டை கொண்ட ஐட்ரைவ் 7 இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் முக்கிய சிறப்பம்சமாக வழங்கப்பட்டிருக்கும்.

டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் 12.3 இன்ச்சில் வழங்கப்பட்டுள்ளது. 4.4 லிட்டர், இரட்டை-டர்போசார்ஜ்டு வி8 என்ஜினை எம்5 மீண்டும் பெற்றுள்ளது. இந்த டர்போ என்ஜின் எம்5 காரில் 592 பிஎச்பி மற்றும் 750 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது.

அதுவே எம்5 காம்பெடிஷனில் 609 பிஎச்பி மற்றும் 750 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையிலும் வழங்கப்படுகிறது. கம்பெர்ட், ஸ்போர்ட், ஸ்போர்ட்+ மற்றும் புதிய ட்ராக் மோட் உள்ளிட்ட பல்வேறு ட்ரைவ் மோட்களுடன் அனைத்து-சக்கர ட்ரைவ் சிஸ்டத்தை இந்த இரு வேரியண்ட்களும் நிலையாக பெற்றுள்ளன.


Click it and Unblock the Notifications








