பிஎம்டபிள்யூ எக்ஸ்5 சொகுசு எஸ்யூவியின் விலை குறைவான வேரியண்ட் அறிமுகம்!
பிஎம்டபிள்யூ எக்ஸ்-5 சொகுசு எஸ்யூவி காரின் விலை குறைவான வேரியண்ட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. சிறப்பம்சங்கள், விலை விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

பிஎம்டபிள்யூ எக்ஸ்-5 xDrive30d SportX என்ற பெயரில் இந்த புதிய வேரியண்ட் விற்பனைக்கு வந்துள்ளது. இதுவரை விற்பனையில் இருந்த xDrive 30d Sport என்ற வேரியண்ட்டிற்கு மாற்றாக இந்த புதிய ஸ்போர்ட் எக்ஸ் என்ற புதிய வேரியண்ட் வந்துள்ளது.

அதாவது, எக்ஸ்டிரைவ் 30டீ வேரியண்ட்டில் இருந்த பல வசதிகள் குறைக்கப்பட்டு ஸ்போர்ட் எக்ஸ் என்ற இந்த புதிய வேரியண்ட் கொண்டு வரப்பட்டுள்ளது. விலையை மிக சவாலாக நிர்ணயிக்கும் விதத்தில், இந்த முயற்சியை பிஎம்டபிள்யூ எடுத்துள்ளது.

பிஎம்டபிள்யூ எக்ஸ் டிரைவ் 30டீ ஸ்போர்ட் வேரியண்ட் ரூ.82.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், அதற்கு மாற்றாக வந்திருக்கும் புதிய எக்ஸ் டிரைவ் 30டீ ஸ்போர்ட் எக்ஸ் வேரியண்ட் ரூ.74.90 லட்சம் என்ற மிக சவாலான எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதாவது விலை ரூ.8 லட்சம் குறைந்துள்ளது.

விலை குறைப்புக்காக எக்ஸ் டிரைவ் 30டீ ஸ்போர்ட் வேரியண்ட்டில் கொடுக்கப்பட்டு வந்த பல வசதிகளும் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி, பின்புற கதவை எளிதாக திறப்பதற்கான கம்ஃபோர்ட் அக்செஸ் தொழில்நுட்பம், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் சார்ஜர் ஆகியவை நீக்கப்பட்டு இருக்கிறது.

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எல்சிடி திரையுடன் கூடிய சாவி, ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம் ஆகியவையும் இந்த புதிய வேரியண்ட்டில் இல்லை. லெதர் அப்ஹோல்ஸ்ட்ரிக்கு பதிலாக சாதாரண வகை அப்ஹோல்ஸ்ட்ரி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

அதேநேரத்தில், இந்த வேரியண்ட்டில் எல்இடி ஹெட்லைட்டுகள், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், ஸ்போர்ட்ஸ் இருக்கைகள், 12.3 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கெஸ்ச்சர் கன்ட்ரோல், 19 அங்குல அலாய் வீல்கள், பார்க் அசிஸ்ட், 10 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஆடியோ சிஸ்டம் ஆகியவை வழங்கப்படுகின்றன.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ் டிரைவ் 30டீ ஸ்போர்ட் எக்ஸ் வேரியண்ட்டில் 6 சிலிண்டர்கள் கொண்ட 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 261 பிஎச்பி பவரையும், 620 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் உள்ளது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்-5 எஸ்யூவி கார் மாடலானது எக்ஸ் டிரைவ் 30டீ ஸ்போர்ட் எக்ஸ், எக்ஸ் டிரைவ் 30டீ எக்ஸ் லைன் மற்றும் எக்ஸ் டிரைவ் 40ஐ எம் ஸ்போர்ட் ஆகிய மூன்று மாடல்களில் கிடைக்கிறது. இதில், ஸ்போர்ட் எக்ஸ் மற்றும் எக்ஸ் லைன் வேரியண்ட்டுகளில் ஒரே டீசல் எஞ்சின் தேர்வும், எம் ஸ்போர்ட் மாடலில் பெட்ரோல் எஞ்சின் தேர்வும் கொடுக்கப்படுகிறது.

பெட்ரோல் மாடலில் இருக்கும் 3.0 லிட்டர் ட்வின் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 340 பிஎச்பி பவரையும், 450 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் உள்ளது.

திய எக்ஸ் டிரைவ் 30டீ வேரியண்ட்டில் பிளாக் சஃபையர், பைடோனிக் புளூ மற்றும் மினரல் ஒயிட் ஆகிய வண்ணத் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், கார்னரிங் பிரேக் கன்ட்ரோல், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், ஆட்டோ ஹோல்டு, ஹில் டிசென்ட் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகிய பாதுகாப்பு வசதிகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








