காருதான் காஸ்ட்லி, காரணம் ரொம்ப சீப்பு... கோடி ரூபாய் காரில் 100கிமீ பயணித்த இளைஞர்... ஏன் தெரியுமா?

கோடி ரூபாய் மதிப்புள்ள காஸ்ட்லீ காரில் கிளம்பிய 100 கிமீ பயணித்த இளைஞர் ஒருவர் போலீசாரின் சோதனையின்போது கூறிய காரணம் காவலர்களையே அசரவைத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

காருதான் காஸ்ட்லி, காரணம் ரொம்ப சீப்பு... கோடி ரூபாய் சொகுசு காரில் 100கிமீ பயணித்த இளைஞர்... எதற்காக தெரியுமா?

நாடு முழுவதும் சுமார் 45 நாட்களுக்கும் அதிகமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கின்றது. கொரோனா வைரஸ் பரவலின் அச்சம் காரணமாக கொண்டுவரப்பட்ட இந்த தடையுத்தரவால் நாடே ஸ்தம்பித்து நிற்கின்றது. இந்த நிலை மேலும் நீடிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

ஏற்கனவே இரண்டு கட்டங்களாக அமலில் இருந்த தடையுத்தரவால் பொதுமக்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகியிருக்கின்றனர்.

காருதான் காஸ்ட்லி, காரணம் ரொம்ப சீப்பு... கோடி ரூபாய் சொகுசு காரில் 100கிமீ பயணித்த இளைஞர்... எதற்காக தெரியுமா?

இந்த நிலையிலேயே கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு மூன்றாம் கட்ட தேசிய அளவிலான ஊரடங்கு உத்தரவை அறிவித்தது. இந்த அறிவிப்புடன் நாட்டின் பொருளாதார நிலையைக் கவனத்தில் கொண்டு லேசான தளர்வுகளை வழங்கியது.

இதனால், ஒரு சில நிறுவனங்கள் மட்டும் குறைந்தளவு பணியாளர்களுடன் மீண்டும் இயங்கத் தொடங்கியிருக்கின்றன.

காருதான் காஸ்ட்லி, காரணம் ரொம்ப சீப்பு... கோடி ரூபாய் சொகுசு காரில் 100கிமீ பயணித்த இளைஞர்... எதற்காக தெரியுமா?

இருப்பினும், பொதுமக்கள் வழக்கம்போல் நடமாடுவதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையே காணப்படுகின்றது. ஆகையால், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வரும் மக்களைப் போலீஸார் கடுமையான கண்டித்து வருகின்றனர். அவர்களுக்கு அபராதம் விதித்தல் மற்றும் வழக்கு பதிவு செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காருதான் காஸ்ட்லி, காரணம் ரொம்ப சீப்பு... கோடி ரூபாய் சொகுசு காரில் 100கிமீ பயணித்த இளைஞர்... எதற்காக தெரியுமா?

இந்நிலையில், பிஎம்டபிள்யூ சொகுசு காரில் கிளம்பிய ஒரு இளைஞர் காய்-கறி வாங்குவதாக கூறி சுமார் 100 கிமீ பயணத்துள்ளார். இளைஞரின் இந்த செயல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. என்னது., காய்-கறி வாங்க நூறு கிலோமீட்டரா..? என பொதுமக்களை கேள்வி எழுப்ப செய்துள்ளது.

காருதான் காஸ்ட்லி, காரணம் ரொம்ப சீப்பு... கோடி ரூபாய் சொகுசு காரில் 100கிமீ பயணித்த இளைஞர்... எதற்காக தெரியுமா?

இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் அரங்கேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊரடங்கு உத்தரவு காரணமாக நாட்டின் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடிய நிலையிலேயே காணப்படுகின்றது. இதில், தேசிய நெடுஞ்சாலைகள் மட்டுமின்றி இந்தியாவின் சில முக்கிய நகரங்களின் சாலைகளும் வாகனங்களற்ற நிலையிலேயே இருக்கின்றது.

காருதான் காஸ்ட்லி, காரணம் ரொம்ப சீப்பு... கோடி ரூபாய் சொகுசு காரில் 100கிமீ பயணித்த இளைஞர்... எதற்காக தெரியுமா?

இதனைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு சிலர் ஜாலி ரொடு செல்லும் வகையில் ஊர் சுற்றி வருகின்றனர். இவர்களால், அரசின் நோக்கம் சீர்குலைவதுடன், கொரோனா வைரஸ் பரவலின் அதிகரிக்கின்ற சூழல் உருவாகின்றது.

காருதான் காஸ்ட்லி, காரணம் ரொம்ப சீப்பு... கோடி ரூபாய் சொகுசு காரில் 100கிமீ பயணித்த இளைஞர்... எதற்காக தெரியுமா?

இந்த நிலையிலேயே எக்ஸ்-ஷோரூமில் ரூ. 1 கோடி என்ற மதிப்பில் விற்பனையாகும் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எக்ஸ்டிரைவ்40ஐ எம் ஸ்போர்ட் காரில் இளைஞர் ஒருவர் மருந்து மற்றும் காய் வாங்குவதாகக் கூறிக்கொண்டு நொய்டாவில் இருந்து மீரட்டிற்கு புறப்பட்டிருக்கின்றார்.

காருதான் காஸ்ட்லி, காரணம் ரொம்ப சீப்பு... கோடி ரூபாய் சொகுசு காரில் 100கிமீ பயணித்த இளைஞர்... எதற்காக தெரியுமா?

இளைஞர் பயன்படுத்திய பிஎம்டபிள்யூ கார்...

இவரை, மீரட்டிற்கு செல்லும் வழியில் இருக்கும் பெகும்புல் சௌக் என்னும் பகுதியில் தடுத்து நிறுத்திய போலீஸார், ஆய்வு செய்தனர். அப்போதுதான் அவர் தவறான காரணத்தை கூறி சுமார் 100 கிமீ இடைவெளியில் பயணத்தை மேற்கொண்டது தெரியவந்தது.

காருதான் காஸ்ட்லி, காரணம் ரொம்ப சீப்பு... கோடி ரூபாய் சொகுசு காரில் 100கிமீ பயணித்த இளைஞர்... எதற்காக தெரியுமா?

தொடர்ந்து போலீசார் விசாரித்ததில் அந்த இளைஞர் நொய்டாவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்த காரணத்திற்காக அந்த இளைஞருக்கு அபராத செல்லாணைப் போலிஸார் வழங்கினர்.

காருதான் காஸ்ட்லி, காரணம் ரொம்ப சீப்பு... கோடி ரூபாய் சொகுசு காரில் 100கிமீ பயணித்த இளைஞர்... எதற்காக தெரியுமா?

ஆனால், நாட்டின் பிற பகுதிகளில் இதுபோன்று விதிமீறும் இளைஞர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றது. குறிப்பாக, ஒரு சில மாநிலங்களில் விதிமீறல் வாதிகள்மீது வழக்கு தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால், இங்கு சொகுசு காரை இயக்கி வந்த இளைஞருக்கு அபராதச் செல்லாண் மட்டுமே வழங்கப்பட்டு, திருப்பியனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றார்.

காருதான் காஸ்ட்லி, காரணம் ரொம்ப சீப்பு... கோடி ரூபாய் சொகுசு காரில் 100கிமீ பயணித்த இளைஞர்... எதற்காக தெரியுமா?

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சொகுசு மாடல்களில் ஒன்றான எக்ஸ்7 காரில் அந்த இளைஞர் மட்டுமே பயணித்ததாகக் கூறப்படுகின்றது. எனவே, போலீஸார் அவருக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கி திருப்பியனுப்பி வைத்திருக்கின்றனர்.

காருதான் காஸ்ட்லி, காரணம் ரொம்ப சீப்பு... கோடி ரூபாய் சொகுசு காரில் 100கிமீ பயணித்த இளைஞர்... எதற்காக தெரியுமா?

மீரட் மற்றும் நொய்டா ஆகிய இரு நகரங்களும் உத்தரபிரதேச மாநிலத்திலேயே இருந்தாலும், அவற்றிற்கிடையேயான தூரம் 100 கிமீ ஆகும். இதன் அண்டை மாநிலமான (யூனியன் பிரதேசமயம்) டெல்லி கொரோனா அச்சம் காரணமாக முழுமையாக சீல் வைக்கப்பட்டுள்ளது.

காருதான் காஸ்ட்லி, காரணம் ரொம்ப சீப்பு... கோடி ரூபாய் சொகுசு காரில் 100கிமீ பயணித்த இளைஞர்... எதற்காக தெரியுமா?

எனவே, அம்மாநிலத்தின் எல்லைப் பகுதிக்குள் செல்ல வேண்டுமானால் அங்கீகரிக்கப்பட்ட பாஸுடன் மட்டுமே செல்ல முடியும். அதேசமயம், அத்தியாவசியப் பணியாக இருந்தால் மட்டுமே இந்த தளர்வு வழங்கப்படுகின்றது. இம்மாதிரியான சூழ்நிலையிலேயே டெல்லிக்கு மிக அருகில் இருக்கும் பகுதியில் இருந்து இந்த இளைஞர் விதியை மீறி வெளியே வந்திருக்கின்றார்.

குறிப்பு: பிஎம்டபிள்யூ கார் புகைப்படத்தை தவிர மற்ற அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை...

More from DriveSpark

Article Published On: Friday, May 8, 2020, 19:30 [IST]
English summary
BMW X7 Busted For Violating Lockdown. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+