உபி-யில் நடந்த கோர விபத்து... ஒருத்தர் கூட மிஞ்சல... வீட்டுக்கு திரும்பும்போது அரங்கேறிய சோகம்...

உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற கோர விபத்தில் 14 பேர் பலியாகியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உபி-யில் நடந்த கோர விபத்து... ஒருத்தர் கூட மிஞ்சல... வீட்டுக்கு திரும்பும்போது அரங்கேறிய சோகம்...

உபி மாநிலம், பிரதாப்கர் பகுதியில் அரங்கேறிய விபத்து ஒன்றில் 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருமண நிகழ்வுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது இந்த கோரமான சம்பவம் அரங்கேயிருக்கின்றது. இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என பலர் பலியாகியுள்ளனர்.

உபி-யில் நடந்த கோர விபத்து... ஒருத்தர் கூட மிஞ்சல... வீட்டுக்கு திரும்பும்போது அரங்கேறிய சோகம்...

நல்லிரவு அரங்கேறிய விபத்து சம்பவத்தால் பிரதாப்கர் பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது. ஜிராக்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சாண்ட்லால். இவரின் மகன் சுனில் யாதவ். இவருக்கே நேற்றைய தினம் (விாழக்கிழமை) திருமணம் நடைபெற்றது. இதில் பங்கேற்றிவிட்டு வீடு திரும்போதே இந்த சோகமான சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.

உபி-யில் நடந்த கோர விபத்து... ஒருத்தர் கூட மிஞ்சல... வீட்டுக்கு திரும்பும்போது அரங்கேறிய சோகம்...

திருமண நிகழ்வு முடிவடைய சற்று காலம் தாமதமானதாகக் கூறப்படுகின்றது. எனவே, குழைந்தைகள் உட்பட 14 பேர் ஒரே மஹிந்திரா பொலிரோ காரில் குண்டா எனும் கிராமத்திற்கு

(சொந்த ஊர்) திரும்பியிருக்கின்றனர். காரை அதே பகுதியைச் சேர்ந்த பப்லு எனும் 22 வயதுள்ள இளைஞர் ஒருவர் ஓட்டியுள்ளார். நேரம் அதிகமாகிவிட்டதால் சற்று அதிக வேகத்தில் காரை அவர் ஓட்டியதாகக் கூறப்படுகின்றது.

உபி-யில் நடந்த கோர விபத்து... ஒருத்தர் கூட மிஞ்சல... வீட்டுக்கு திரும்பும்போது அரங்கேறிய சோகம்...

அவ்வாறு, கிராமத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கையில், சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கன்டெய்னர் லாரின் பின் பக்கத்தில் கட்டுக்கடங்காமல் அக்கார் மோதியிருக்கின்றனது. சம்பவ இடத்திலேயே ஓட்டுநர் மற்றும் முன்னிறுக்கை பயணிகள் சிலர் பலியாகியிருக்கின்றனர். ஒரு சிலர் மட்டும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தநிலையில் அடுத்தடுத்ததாகப் பலியாகியிருக்கின்றனர்.

உபி-யில் நடந்த கோர விபத்து... ஒருத்தர் கூட மிஞ்சல... வீட்டுக்கு திரும்பும்போது அரங்கேறிய சோகம்...

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், இந்த விபத்து பயங்கரமானதாக இருந்ததால் காருக்கு அருகில் கூட நெறுங்கவில்லை என கூறியுள்ளனர். மணிக்பூர் காவல்நிலையத்திற்கு மிக அருகிலேயே இந்த சம்பவம் அரங்கேறியது. எனவே சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து போலீஸார், நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் காருக்குள் இருந்த சடலங்களை மீட்டெடுத்தனர்.

உபி-யில் நடந்த கோர விபத்து... ஒருத்தர் கூட மிஞ்சல... வீட்டுக்கு திரும்பும்போது அரங்கேறிய சோகம்...

இந்த சோகமான சம்பவத்தால் திருமண வீடே தற்போது சோகத்தில் மூழ்கியது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.

உபி-யில் நடந்த கோர விபத்து... ஒருத்தர் கூட மிஞ்சல... வீட்டுக்கு திரும்பும்போது அரங்கேறிய சோகம்...

இந்த கோர விபத்திற்கு துள்ளியமான காரணம் வெளியிடப்படவில்லை. பொலிரோ கார் அதிக வேகத்தில் பறந்து வந்தது ஓர் காரணமாக கூறப்பட்டாலும், அந்த சாலை அதிக இருட்டாக இருந்ததும் முக்கிய காரணம் என்கின்றனர் அப்பகுதி மக்கள். சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி அடர் இருட்டில் நின்றுக் கொண்டிருந்ததைக் கவனிக்காததன் காரணத்தினாலயே இந்த விபத்து நடைபெற்றதாக சிலர் புகார் தெரிவித்துள்ளனர்.

உபி-யில் நடந்த கோர விபத்து... ஒருத்தர் கூட மிஞ்சல... வீட்டுக்கு திரும்பும்போது அரங்கேறிய சோகம்...

விபத்துகளை தவிர்க்கும் வழிமுறை:

விபத்து, இந்தியாவில் அண்மைக் காலங்களாக அதிகளவில் அரங்கேறிக் கொண்டு வருகின்றது. இதற்கு வாகன ஓட்டிகள் விதியை முறையாக கடைப்பிடிக்காததே முக்கிய காரணம் உள்ளது. குறிப்பாக, இவர்கள் விதிகளை மீறுவதனால் அவர்கள் மட்டுமின்றி சில அப்பாவிகளும் பாதிக்கப்படுகின்றனர்.

உபி-யில் நடந்த கோர விபத்து... ஒருத்தர் கூட மிஞ்சல... வீட்டுக்கு திரும்பும்போது அரங்கேறிய சோகம்...

இயற்கையாக நடைபெறும் விபத்துகளைக் காட்டிலும் விதியை மீறுவதனால் அரங்கேறும் விபத்துகளே மிக அதிகம். எனவேதான் சாலை போக்குவரத்து விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அரசும், வாகனத்துறை வல்லுநர்களும் வலியுறுத்துகின்றனர். அரசு வழிகாட்டிய வேகத்திலும், போக்குவரத்து விதிகளையும் சரிவர கடைப்பிடித்தாலே நாட்டில் அரங்கேறும் பெரும்பாலான விபத்துகளைக் குறைக்க முடியும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Accident In UP: Bolero Collide With Parked Truck. Read in Tamil.
Story first published: Friday, November 20, 2020, 17:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X