ஜெர்மன் நாட்டு நிறுவன காரை வாங்கிய இந்திய நடிகர்... இவர் யார் என்பதைவிட காரின் விலைதான் செம்ம ஹைலைட்

ஜெர்மன் நாட்டு நிறுவனத்தின் புதிய மாடல் காரை இந்திய நடிகர் ஒருவர் வாங்கியுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஜெர்மன் நாட்டு நிறுவன காரை வாங்கிய இந்திய நடிகர்... இவர் யார் என்பதைவிட காரின் விலைதான் செம்ம ஹைலைட்!

ஜெர்மன் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், அதன் 2.0 மூலோபயத்தின் அடிப்படையில் இந்தியாவில் பல புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது. இதனடிப்படையில், நடப்பாண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய மாடலான டிகுவான் ஆல்ஸ்பேஸ் எனும் எஸ்யூவி காரை அந்நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

ஜெர்மன் நாட்டு நிறுவன காரை வாங்கிய இந்திய நடிகர்... இவர் யார் என்பதைவிட காரின் விலைதான் செம்ம ஹைலைட்!

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்திய ஒரு மாதத்திற்கு பின்னரே அக்கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஓர் ஏழு இருக்கை வசதிக் கொண்ட எஸ்யூவி காராகும். இதன் விலை ரூ. 33.13 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. எனவே ஆன்ரோடில் இக்காரின் விலை சற்று கூடுதலாகவே இருக்கும். இந்த காரைதான் பிரபல பாலிவுட் நடிகர் அபய் தியோல் சமீபத்தில் வாங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெர்மன் நாட்டு நிறுவன காரை வாங்கிய இந்திய நடிகர்... இவர் யார் என்பதைவிட காரின் விலைதான் செம்ம ஹைலைட்!

இதுகுறித்து சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கும் புகைப்படத்தில், அபய் தியோல் ஹபனெரா ஆரஞ்சு நிற டிகுவான் காருக்கு முன்பக்கம் நின்றபடி போஸ் கொடுக்கும் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. இதில் பாலிவுட் நடிகரைக் காட்டிலும் மிகவும் அழகான தோற்றத்தில் டிகுவான் ஆல்ஸ்பேஸ் கார் இருப்பதை நம்மால் காண முடிகின்றது.

ஜெர்மன் நாட்டு நிறுவன காரை வாங்கிய இந்திய நடிகர்... இவர் யார் என்பதைவிட காரின் விலைதான் செம்ம ஹைலைட்!

ஏழு இருக்கை வசதிகளைக் கொண்டிருக்கும் இக்கார் இந்தியாவில் ஸ்கோடா கோடியாக், டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டீயோவர் ஆகிய கார்களுடன் போட்டியிடுகின்ற வகையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரின் தோற்றம் எஸ்யூவி என்பதைக் காட்டிலும் கிராஸோவர் போன்ற பிம்பத்தையே பார்வையாளர்களுக்கு வழங்குகின்றது.

ஜெர்மன் நாட்டு நிறுவன காரை வாங்கிய இந்திய நடிகர்... இவர் யார் என்பதைவிட காரின் விலைதான் செம்ம ஹைலைட்!

இந்த காரின் அடிப்படையிலேயே ஐந்து இருக்கைக் கொண்ட மாடலையும் களமிறக்க ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டு வருகின்றது. இவ்விரு கார்களுக்கும் இடையே வித்தியாசமான அவற்றின் நீளம் மட்டுமே அமைய இருக்கின்றது. ஆம், ஐந்து இருக்கை வசதிக் கொண்ட டிகுவான் 215 மிமீ அளவில் உருவாக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பெட்ரோல் எஞ்ஜினில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும் எனவும் கூறப்படுகின்றது.

ஜெர்மன் நாட்டு நிறுவன காரை வாங்கிய இந்திய நடிகர்... இவர் யார் என்பதைவிட காரின் விலைதான் செம்ம ஹைலைட்!

சமீப காலமாக ஒட்டுமொத்த வாகன நிறுவனங்களும் குறிப்பிட்ட காரணங்களுக்காக டீசல் எஞ்ஜின் ஆப்ஷனுக்கு முழுக்கு போடும் செயலில் ஈடுபட்டு வருகின்றன. இதே நடவடிக்கையைதான் வோக்ஸ்வாகன் குழுமமும் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது. இது பிற உற்பத்தியாளர்களைப் போலவே பெட்ரோல் என்ஜின்களில் மட்டுமே கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.

ஜெர்மன் நாட்டு நிறுவன காரை வாங்கிய இந்திய நடிகர்... இவர் யார் என்பதைவிட காரின் விலைதான் செம்ம ஹைலைட்!

இதன் வெளிப்பாடாகவே ஐந்து இருக்கை வசதிக்கொண்ட டிகுவானின் அறிமுகம் அமைய இருக்கின்றது. ஆல்ஸ்பேஸ் க்ரோஸோவர் தோற்றத்தைக் கொண்டிருந்தாலும், மோசமான சாலைகளை எளிதில் கையாளக்கூடியது திறன் வழங்கப்பட்டிருக்கின்றது. இதற்காக, இக்காருக்கு கூடுதல் கிரவுண்ட் கிளியரன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. எனவே எந்த மாதிரியான சாலையாக இருந்தாலும் இக்கார் அசால்ட் செய்துவிடும் என தெரிகின்றது.

ஜெர்மன் நாட்டு நிறுவன காரை வாங்கிய இந்திய நடிகர்... இவர் யார் என்பதைவிட காரின் விலைதான் செம்ம ஹைலைட்!

மேலும், டிகுவான் ஆல்ஸ்பேஸ் மிகவும் விசாலமான அம்சங்களை வழங்கும் காரா காட்சியளிக்கிறது. இதில், முழு டிஜிட்டல் திறன் கொண்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், முத்தரப்பு காலநிலை கட்டுப்பாடு, பனோரமிக் சன்ரூஃப், 8.0 அங்குல தொடுதிரை இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஏபிஎஸ், ஈஎஸ்பி, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், மல்டி ஃபங்க்ஷன் ஸ்டீயரிங், பிரீமியம் இன்டீரியர்கள், 8 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம், ஹேண்ட்ஸ் ஃப்ரீ பவர்ட் டெயில்கேட் உள்ளிட்ட பல அம்சங்கள் இக்காரில் இடம்பெற்றிருக்கின்றன.

ஜெர்மன் நாட்டு நிறுவன காரை வாங்கிய இந்திய நடிகர்... இவர் யார் என்பதைவிட காரின் விலைதான் செம்ம ஹைலைட்!

எனவேதான் இக்கார் மீது பலருக்கு ஏக்கம்வர தொடங்கியுள்ளது. இதுமட்டுமின்றி, சிறப்பான திறனை வெளிப்படுத்தும் விதமாக இக்காரில் 2.0 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டிருக்கின்றது. இது அதிகபட்சமாக 187 பிஎச்பி மற்றும் 320 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். இது, 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸில் இயங்குகின்றது.

ஜெர்மன் நாட்டு நிறுவன காரை வாங்கிய இந்திய நடிகர்... இவர் யார் என்பதைவிட காரின் விலைதான் செம்ம ஹைலைட்!

இதுமட்டுமின்றி, ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இக்காரில் 4 மோஷன் அனைத்து வீல் இயங்கும் தொழில்நுட்பத்தை வழங்கியுள்ளது. இந்த தொழில்நுட்பம் பொதுலவாக முன் வீலுக்கே அதிக திறனை வழங்கும். ஆனால், முன் சக்கரத்திற்கு ஏதேனும் தடை ஏற்படுவதை உணர்ந்தால் இந்த தொழில்நுட்பம் உடனடியாக செயல்பட்டு பின் வீலுக்கு இயங்கும் திறனை வழங்கும்.

ஜெர்மன் நாட்டு நிறுவன காரை வாங்கிய இந்திய நடிகர்... இவர் யார் என்பதைவிட காரின் விலைதான் செம்ம ஹைலைட்!

இதுவே புதிதாக அறிமுகமாகியிருக்கும் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் காரில் இடம்பெற்றிருக்கும் மிக முக்கியமான வசதியாக உள்ளது. இத்துடன் இன்னும் பல ஏராளமான புதிய தொழில்நுட்பங்களை ஃபோக்ஸ்வேகன் வாரி வழங்கியிருக்கின்றது. எனவேதான், இக்காரின் விலை சற்று கூடுதலானதாக காட்சியளிக்கின்றது. இருப்பினும், அபய் தியோல் போன்ற கார் ஆர்வலர்கள் மத்தில் கணிசமான வரவேற்பை இக்கார் பெற்று வருகின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bollywood Actor Abhay Deol Buys New Volkswagen Tiguan AllSpace Luxury SUV. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X