ஆம் ஆத்மி கட்சிக்காரரை ஆச்சரியப்படுத்திய காவலர்கள்! என்ன நடந்துச்சுனு தெரிஞ்சா நீங்களே அசந்துடுவீங்க

ஆம் ஆத்மி மெம்பர் மற்றும் பாலிவுட் பிரபலம் என பல ரோல்களைக் கொண்டிருக்கும் முக்கிய நபர் ஒருவரை காவல்துறையினர் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ஆம் ஆத்மி கட்சிக்காரரை ஆச்சரியப்படுத்திய காவலர்கள்... என்ன நடந்துச்சுனு தெரிஞ்சா நீங்களும் அசந்து போய்டுவீங்க!

அரசியல் மற்றும் பாலிவுட் பிரபலம் என பல ரோல்களைக் கொண்டிருக்கும் முக்கிய நபர் ஒருவரின் பல லட்ச ரூபாய்கள் மதிப்புள்ள சொகுசு கார் திருடர்களிடம் இருந்து மீட்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இக்கார் திருடப்பட்டு எட்டு மாதங்கள் ஆனநிலையில் தற்போதே போலீஸாரால் மீட்கப்பட்டிருக்கின்றது.

ஆம் ஆத்மி கட்சிக்காரரை ஆச்சரியப்படுத்திய காவலர்கள்... என்ன நடந்துச்சுனு தெரிஞ்சா நீங்களும் அசந்து போய்டுவீங்க!

ஆகையால், காருக்கு சொந்தக் காரரான கவிஞர் குமார் விஷ்வாஸ் மிகுந்த ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் உறைந்திருக்கின்றார். இவர், பல்வறு புத்தகங்களை எழுதியுள்ளார். இதுமட்டுமின்றி சிறந்த ஆசிரியர், ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி என பல ரோல்களையும் அவர் தாங்கிக் கொண்டிருக்கின்றனர்.

ஆம் ஆத்மி கட்சிக்காரரை ஆச்சரியப்படுத்திய காவலர்கள்... என்ன நடந்துச்சுனு தெரிஞ்சா நீங்களும் அசந்து போய்டுவீங்க!

உபி மாநிலம், காஸியாபாத் நகரத்தில் உள்ள வசுந்தராவில் பகுதியில்தான் குமார் விஷ்வாஸ் வசித்து வருகின்றார். இங்கு, உள்ள தனது இல்லத்திற்கு வெளியே விட்டுச் சென்ற டொயோட்டா ஃபார்ச்சூனர் காரே சில நிமிடங்களில் காணாமல் போனது. இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் 15ம் அன்று நடைபெற்றது.

ஆம் ஆத்மி கட்சிக்காரரை ஆச்சரியப்படுத்திய காவலர்கள்... என்ன நடந்துச்சுனு தெரிஞ்சா நீங்களும் அசந்து போய்டுவீங்க!

இதுகுறித்து வழக்கு பதிந்த காஜியாபாத் போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இந்த நிலையிலேயே சரியாக 8 மாதங்கள் கழித்து மர்ம நபர்களால் திருடப்பட்ட விலையுயர்ந்த ஃபார்ச்சூனர் கார் தற்போது மீட்கப்பட்டுள்ளது. காருடன் சேர்த்து காரை திருடிய நான்கு பேர் கொண்ட கும்பலையும் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

ஆம் ஆத்மி கட்சிக்காரரை ஆச்சரியப்படுத்திய காவலர்கள்... என்ன நடந்துச்சுனு தெரிஞ்சா நீங்களும் அசந்து போய்டுவீங்க!

போலீஸார் கொடுத்த தகவலின்படி, கமில் எனும் ஆமிர், மொஹமத் கல்லு எனும் மோமின், காலா எனும் ஆரிஃப் மற்றும் நஷபோ எனும் நஷிபுதீன் ஆகிய நான்கு போரில் காரை திருடியவர்கள் கண்டறியப்பட்டுள்ளது. குமார் விஷ்வாஸ் காருடன் சேர்த்து மேலும் இரு கார்களையும் போலீஸார் மீட்டிருக்கின்றனர்.

ஆம் ஆத்மி கட்சிக்காரரை ஆச்சரியப்படுத்திய காவலர்கள்... என்ன நடந்துச்சுனு தெரிஞ்சா நீங்களும் அசந்து போய்டுவீங்க!

மாருதி ஸ்விஃப்ட் மற்றும் மேலும் ஒரு ஃபார்ச்சூனர் எஸ்யூவி காரும் மீட்கப்பட்டுள்ளது. இத்துடன், திருடர்கள் பயன்படுத்தி வந்த சட்ட விரோத துப்பாக்கி மற்றும் தோட்டக்கள், செல்போன்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆம் ஆத்மி கட்சிக்காரரை ஆச்சரியப்படுத்திய காவலர்கள்... என்ன நடந்துச்சுனு தெரிஞ்சா நீங்களும் அசந்து போய்டுவீங்க!

காரை விற்பதற்கான அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டநிலையிலேயே திருடர்களையும், களவு செய்யப்பட்ட கார்களையும் காவல்துறையினர் மீட்டிருக்கின்றனர். இதற்காக காரின் சேஸிஸ் எண் மற்றும் போலீ பத்திரங்கள் அனைத்தும் தயார் செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகின்றது.

ஆம் ஆத்மி கட்சிக்காரரை ஆச்சரியப்படுத்திய காவலர்கள்... என்ன நடந்துச்சுனு தெரிஞ்சா நீங்களும் அசந்து போய்டுவீங்க!

இந்த நிலையிலேயே தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீஸார் அவர்களைக் கையும் களவுமாக பிடித்திருக்கின்றனர். இத்துடன், போலீயாக தயார் செய்யப்பட்ட வாகன ஆவணங்கள் சிலவும் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கொள்ளையர்கள் திருடப்பட்ட வாகனங்களை விற்க நவீன யுக்தியைக் கையாண்டிருக்கின்றனர்.

ஆம் ஆத்மி கட்சிக்காரரை ஆச்சரியப்படுத்திய காவலர்கள்... என்ன நடந்துச்சுனு தெரிஞ்சா நீங்களும் அசந்து போய்டுவீங்க!

அதாவது, ஏற்கனவே விபத்தில் சிக்கிய அல்லது பயனற்று போன வாகனங்களின் ஆவணத்தைப் பெற்றுக் கொண்டு அதற்கேற்ப வாகனங்கள் முதலில் தேர்வு செய்யப்படுகின்றன. பின்னர், ஸ்கெட்ச் போட்டு அந்த வாகனம் திருடப்படுகின்றது. இதன் பின்னர் தங்கள் கை வசம் இருக்கும் ஆவணத்திற்கு ஏற்ப திருடப்பட்ட வாகனத்தின் சேஸிஸ் எண் மற்றும் பிற விஷயங்கள் மாற்றப்படும்.

ஆம் ஆத்மி கட்சிக்காரரை ஆச்சரியப்படுத்திய காவலர்கள்... என்ன நடந்துச்சுனு தெரிஞ்சா நீங்களும் அசந்து போய்டுவீங்க!

இவ்வாறு, அனைத்து விஷயங்களும் கணக்கச்சிதமாக செய்த பின்னரே கார் செகண்ட் ஹேண்ட் சந்தையில் விற்கப்படுகின்றது. இவ்வாறு மாற்றப்படும் வாகனங்கள், அதன் உரிமையாளர்கள் அருகில் வந்தால்கூட அதைக் கண்டுபிடிக்க முடியாது. அந்தளவிற்கு மிக நேர்த்தியான முறையில் திருடங்கள் தங்களின் கை வசத்தைக் காண்பிக்கின்றனர்.

ஆம் ஆத்மி கட்சிக்காரரை ஆச்சரியப்படுத்திய காவலர்கள்... என்ன நடந்துச்சுனு தெரிஞ்சா நீங்களும் அசந்து போய்டுவீங்க!

எனவேதான், பல்வறு வாகன திருட்டு சம்பவங்கள் தற்போதும் தீர்வு காண முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர். இம்மாதிரியான சூழ்நிலையிலேயே அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடிக்கின்ற வகையில் எட்டு மாதங்கள் கழித்து பாலிவுட் பிரபலம் குமார் விஷ்வாஸின் சொகுசு கார் மீட்கப்பட்டிருக்கின்றது.

குறிப்பு: புகைப்படங்கள் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bollywood Poet Kumar Vishwas Fortuner Recovered After 8 Months. Read In Tamil.
Story first published: Tuesday, October 20, 2020, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X