சக்கரங்களுக்கு பதிலாக செங்கற்களில் நின்ற விலையுயர்ந்த கார்கள்... காரணம் தெரிஞ்சா மிரண்டு போய்டுவீங்க

புத்தம் புதிய விலையுயர்ந்த கார்கள் சக்கரங்களுக்கு பதிலாக செங்கற்களில் நிற்பதைப் போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இவை ஏன் இப்படி நிற்கின்றன என்பதுகுறித்த தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

சக்கரங்களுக்கு பதிலாக செங்கற்களில் நின்ற விலையுயர்ந்த கார்கள்... காரணம் தெரிஞ்சா மிரண்டு போய்டுவீங்க!

கொரோனா வைரசால் மனித வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் தாக்கங்கள் ஏராளம். இந்த வைரஸ் தாக்குதல் பலரின் வாழ்க்கையை கேள்விக் குறியாக மாற்றியுள்ளது. குறிப்பிட்டு கூற வேண்டும் வைரஸ் பரவல் காரணமாக பலர் தங்களது வேலையை இழந்து நடுத்தெருவில் நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

சக்கரங்களுக்கு பதிலாக செங்கற்களில் நின்ற விலையுயர்ந்த கார்கள்... காரணம் தெரிஞ்சா மிரண்டு போய்டுவீங்க!

எனவே, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் வறுமையில் வாடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலை ஒரு சிலரை சமூக விரோத செயலில் ஈடுபட வைத்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றது.

சக்கரங்களுக்கு பதிலாக செங்கற்களில் நின்ற விலையுயர்ந்த கார்கள்... காரணம் தெரிஞ்சா மிரண்டு போய்டுவீங்க!

அதாவது, திருட்டு, கொள்ளை மற்றும் வழிப்பறி போன்றவற்றில் ஈடுபடத் தூண்டியிருப்பதாக கூறப்படுகின்றது. இதனை உறுதிச் செய்யும் வகையில் அண்மைக் காலங்களாக வாகனங்கள் சார்ந்த திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்த நிலையில் இருக்கின்றது.

சக்கரங்களுக்கு பதிலாக செங்கற்களில் நின்ற விலையுயர்ந்த கார்கள்... காரணம் தெரிஞ்சா மிரண்டு போய்டுவீங்க!

அந்தவகையில், தலைநகர் டெல்லியில் வாகனம் சார்ந்து அரங்கேறிய விநோத திருட்டு சம்பவம் பற்றிய தகவலை இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். ஆம், கொடுக்கப்பட்டுள்ள தலைப்பை வைத்து நீங்கள் யூகித்து சரிதான். விலையுயர்ந்த கார்களின் டயர்களைதான் திருடர்கள் தற்போது கொள்ளையடித்துச் சென்றிருக்கின்றனர்.

சக்கரங்களுக்கு பதிலாக செங்கற்களில் நின்ற விலையுயர்ந்த கார்கள்... காரணம் தெரிஞ்சா மிரண்டு போய்டுவீங்க!

டயர்கள் திருடப்பட்டிருக்கும் இரு கார்களும் அருகருகே நிறுத்தப்பட்டிருந்ததாகக் கூறப்படுகின்றது. இரண்டும் புத்தம் புதிய கார்களாகும். காரின் பதிவெண்ணை வைத்து பார்த்தால் இரண்டும் ஒரே நேரத்தில் வைத்து பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகின்றது. ஆனால், இரண்டிற்கும் உரிமையாளர்கள் வெவ்வேறு நபர்கள் ஆவர்.

சக்கரங்களுக்கு பதிலாக செங்கற்களில் நின்ற விலையுயர்ந்த கார்கள்... காரணம் தெரிஞ்சா மிரண்டு போய்டுவீங்க!

imageSource: Team BHP

கியா செல்டோஸ் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா ஆகிய இரு கார்களின் எட்டு வீல்கள்தான் தற்போது களவாடப்பட்டுள்ளது. இதில், கியோ செல்டோஸ் காரின் உரிமையாளர் பங்கஜ் கர்க் என்றும் ஹூண்டாய் க்ரெட்டா காரின் உரிமையாளர் ராஜ் குமார் குப்தா எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

சக்கரங்களுக்கு பதிலாக செங்கற்களில் நின்ற விலையுயர்ந்த கார்கள்... காரணம் தெரிஞ்சா மிரண்டு போய்டுவீங்க!

இவர்கள் இருவரும் காரை நிறுத்த பார்க்கிங் வசதி இல்லாத காரணத்தால், வீட்டுக்கு வெளியே நிறுத்தி வந்துள்ளனர்.

இம்மாதிரியான சூழ்நிலையிலேயே கார்களின் வீல்கள் கழட்டிச் செல்லப்பட்டிருக்கின்றது. மேலும், வீல்களுக்கு பதிலாக காரை தூக்கி நிறுத்த திருடர்கள் செங்கற்களைப் பயன்படுத்தியிருக்கின்றனர்.

சக்கரங்களுக்கு பதிலாக செங்கற்களில் நின்ற விலையுயர்ந்த கார்கள்... காரணம் தெரிஞ்சா மிரண்டு போய்டுவீங்க!

விலையுயர்ந்த காரை விட்டுவிட்டு அவற்றின் டயர்களை மட்டும் திருடிச் சென்ற சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரு கார்களும் உயர்நிலை வேரியண்ட் என்பது தெரியவந்துள்ளது. இவையிரண்டிலும் 17 இன்ச் அளவுடைய மேக் வீல்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன.

சக்கரங்களுக்கு பதிலாக செங்கற்களில் நின்ற விலையுயர்ந்த கார்கள்... காரணம் தெரிஞ்சா மிரண்டு போய்டுவீங்க!

இரண்டும் எஸ்யூவி ரக கார் என்பதால் இரு கார்களிலும் ஒரே மாதிரியான வீல்களே இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில்தான் குறிவைத்து அந்த வீல்கள் மட்டும் திருடப்பட்டுள்ளன. முன்பெல்லாம் பாதுகாப்பற்ற இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களின் நிலை மட்டுமே கேள்விக் குறியாக இருந்தது.

சக்கரங்களுக்கு பதிலாக செங்கற்களில் நின்ற விலையுயர்ந்த கார்கள்... காரணம் தெரிஞ்சா மிரண்டு போய்டுவீங்க!

ஆனால், தற்போதைய சம்பவம் வாகனங்களின் முக்கிய கூறுகளுக்கும் ஆபத்து நிறைந்தததே என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மேலும், வாகனங்களை பாதுகாப்பான இடத்தில் நிறுத்த வேண்டும் என்பதை இது சுட்டிக்காட்டியுள்ளது.

சக்கரங்களுக்கு பதிலாக செங்கற்களில் நின்ற விலையுயர்ந்த கார்கள்... காரணம் தெரிஞ்சா மிரண்டு போய்டுவீங்க!

அதேசமயம், சந்தையில் இதுபோன்ற வாகனம் சார்ந்த திருட்டுச் சம்பவங்களைத் தவிர்க்கின்ற வகையிலான தொழில்நுட்பங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அவை, மிகக் குறைந்த விலையான ரூ. 1,500இல் இருந்தே கிடைக்கின்றன. வாகனத்தை திருடும் நோக்கில் யாரேனும் தொட்டாலோ அல்லது தெரியாதவர் நபர்கள் காரை எடுக்க முயற்சிச் செய்தாலே அது எச்சரிக்கை ஒலி எழுப்பும்.

சக்கரங்களுக்கு பதிலாக செங்கற்களில் நின்ற விலையுயர்ந்த கார்கள்... காரணம் தெரிஞ்சா மிரண்டு போய்டுவீங்க!

மேலும், திருடப்பட்ட வாகனம் எங்கு இருக்கின்றது. தற்போது எந்த சாலையில், என்ன வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கின்றது என்பதைக் கூட அது காட்டிக் கொடுக்கும். ஏன், ஒரு சில கருவிகள் வாகனத்தை இயக்கத்தைக்கூட முடக்க உதவும். இதுமாதிரியான பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அவை அவற்றின் சிறப்பம்சத்தைப் பொருத்து சற்று விலையுயர்ந்து கிடைக்கின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Brand New Hyundai Creta & Kia Seltos All 4 Wheels Stolen. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X