தீபாவளி அதுவும் இப்படியா! ஷோரூம் மாடியில் இருந்து தவறி விழுந்த கியா செல்டோஸ்

டெலிவிரி செய்யப்படுவதற்கு தயாராக இருந்த செல்டோஸ் கார் ஒன்று கியா மோட்டார்ஸின் டீலர்ஷிப் மையத்தில் தவறி கீழே விழுந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

தீபாவளி அதுவும் இப்படியா! ஷோரூம் மாடியில் இருந்து தவறி விழுந்த கியா செல்டோஸ்

இந்திய சந்தையில் தென் கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் கால்பதித்து வெறும் 1 வருடங்கள் மட்டும் தான் முழுமையாக நிறைவடைந்துள்ளது. ஆனால் இந்த 1 வருடத்தில் இந்நிறுவனம் சில கசப்பமான சம்பவங்களை சந்திந்துள்ளது. இந்த கசப்பான சம்பவங்கள் பெரும்பான்மையானவை கியாவின் டீலர்ஷிப் மையங்களில் தான் நிகழ்கின்றன.

தீபாவளி அதுவும் இப்படியா! ஷோரூம் மாடியில் இருந்து தவறி விழுந்த கியா செல்டோஸ்

இந்த வருட துவக்கத்தில் ஆந்திராவில் அமைந்திருந்த தனது தொழிற்சாலையை மாற்றியிருந்த இந்நிறுவனத்தின் மஹாராஷ்டிரா ஷோரூம் ஒன்றில் விற்பனைகான கார் ஒன்று முதல் மாடியில் இருந்து கீழே விழுந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு கசப்பான அனுபவத்தை வழங்கியது.

தீபாவளி அதுவும் இப்படியா! ஷோரூம் மாடியில் இருந்து தவறி விழுந்த கியா செல்டோஸ்

அதன்பின் கியா கார்னிவல் எம்பிவி கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட புதியதில் அதனை டெலிவிரி எடுத்த வாடிக்கையாளரே அந்த காரை சுவற்றில் மோதினார். இது தொடர்பான வீடியோ அந்த சமயத்தில் இணையத்தில் வைரலானது.

தீபாவளி அதுவும் இப்படியா! ஷோரூம் மாடியில் இருந்து தவறி விழுந்த கியா செல்டோஸ்

இந்த நிலையில் தற்போது டெலிவிரி செய்யப்படுவதற்காக தயார் நிலையில் இருந்த கியா செல்டோஸ் எஸ்யூவி கார் இந்நிறுவனத்தின் டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றின் ஆள் உயர முன்பக்க வராண்டாவில் இருந்து எதிர்பாராத விதமாக கீழே தள்ளப்பட்டுள்ளது.

தீபாவளி அதுவும் இப்படியா! ஷோரூம் மாடியில் இருந்து தவறி விழுந்த கியா செல்டோஸ்

இந்த சம்பத்த்திற்கு காரணமான ஆள் யார், ஏன் அவர் அவ்வாறு நடத்து கொண்டார் என்பது தெரியவில்லை. நிச்சயம் டெலிவிரி செய்யப்பட வேண்டிய காரை யாரும் வேண்டுமென்றே தள்ளிவிட வாய்ப்பில்லை. இதனால் இது ஓட்டுனரின் கவனக்குறைவால் தான் நடந்திருக்கும்.

தீபாவளி அதுவும் இப்படியா! ஷோரூம் மாடியில் இருந்து தவறி விழுந்த கியா செல்டோஸ்

சாலையில் சென்று கொண்டிருக்கும்போது கார் ஒன்று செங்குத்தாக தரையில் மோதி இருப்பதை பார்த்தால் யாராயினும் ஒரு நிமிடம் நின்று பார்ப்பார்கள். அதுபோல தான் இந்த செல்டோஸ் காருக்கு ஏற்பட்ட இந்த நிகழ்வையும் பார்க்க மக்கள் கூட்டம் கூடியுள்ளது.

தீபாவளி அதுவும் இப்படியா! ஷோரூம் மாடியில் இருந்து தவறி விழுந்த கியா செல்டோஸ்

செல்டோஸை பற்றி கூற வேண்டுமென்றால், கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் கால் தடத்தை வலுவாக்க பதிக்க முக்கிய காரணமாக இருந்த கார் மாடலாகும். க்ளோபல் என்கேப் பாதுகாப்பு சோதனையில் 3 மதிப்பெண் மதிப்பீட்டை செல்டோஸ் பெற்றுள்ளது.

இதனால் இந்த எஸ்யூவியை மிகுந்த பாதுகாப்பு மிக்க கார் என்றும் சொல்ல முடியாது, அதேநேரம் பாதுகாப்புகள் குறைவான கார் என்றும் சொல்ல முடியாது. விற்பனையில் இந்த கியா தயாரிப்பிற்கு போட்டியாகவுள்ள க்ரெட்டா 4 மதிப்பெண்களை பெற்றுள்ளதை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.

தீபாவளி அதுவும் இப்படியா! ஷோரூம் மாடியில் இருந்து தவறி விழுந்த கியா செல்டோஸ்

இந்திய சந்தையில் கியா நிறுவனத்திற்கு மற்றொரு மறக்கக்கூடிய சம்பவமாக இது நிகழ்ந்துள்ளது. ஆனால் உலகளவில் தயாரிப்புகளை இந்நிறுவனம் சந்தைப்படுத்தி வருகிறது, இதுபோன்ற சம்பவங்களை நிறைய பார்த்திருக்கும். இதனால் இந்த நிகழ்வு பெரிய அளவில் கியாவை பாதிக்காது என்று நம்புவோம்.

Most Read Articles

மேலும்... #கியா #kia motors
English summary
Kia Seltos Crashes Out Of Dealer Showroom – Nosedives On The Road
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X