இந்தியாவோட நல்லதுக்காம்... பெட்ரோல், டீசல் விலை இன்னும் கடுமையாக உயர்கிறது... எவ்வளவு தெரியுமா?

பெட்ரோல், டீசல் விலை உயரவுள்ளதாக தற்போது வெளியாகியிருக்கும் தகவல் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவோட நல்லதுக்காம்... பெட்ரோல், டீசல் விலை இன்னும் கடுமையாக உயர்கிறது... எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் வாகன பெருக்கத்தால், போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசுபாடு என இரு முக்கியமான பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. தலைநகர் டெல்லி உள்பட இந்தியாவின் முன்னணி நகரங்கள் பலவும் இந்த 2 பிரச்னைகளாலும் தற்போது மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே இந்த பிரச்னைகளின் தாக்கத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவோட நல்லதுக்காம்... பெட்ரோல், டீசல் விலை இன்னும் கடுமையாக உயர்கிறது... எவ்வளவு தெரியுமா?

குறிப்பாக காற்று மாசுபாடு பிரச்னையை குறைக்கும் வகையில், வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வரவுள்ளன. இந்தியாவில் தற்போது பிஎஸ்-4 விதிகள் நடைமுறையில் உள்ளன. இது கடந்த 2017ம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்னதாக கடந்த 2005ம் ஆண்டு பிஎஸ்-2 விதிகளும், 2010ம் ஆண்டு பிஎஸ்-3 விதிகளும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.

இந்தியாவோட நல்லதுக்காம்... பெட்ரோல், டீசல் விலை இன்னும் கடுமையாக உயர்கிறது... எவ்வளவு தெரியுமா?

இடையில் பிஎஸ்-5 விதிகள் தவிர்க்கப்பட்டு, இந்தியா நேரடியாகவே பிஎஸ்-6 விதிகளுக்கு செல்கிறது. பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் வெகு விரைவில் அமலுக்கு வரவுள்ளதால், வாகன உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் தங்களது தயாரிப்புகளை பிஎஸ்-6 விதிகளுக்கு ஏற்ப மேம்படுத்தி வருகின்றன. அதேபோல் எண்ணெய் நிறுவனங்களும் பிஎஸ்-6 எரிபொருளை விற்பனைக்கு அறிமுகம் செய்வதில் தீவிரமாக உள்ளன.

இந்தியாவோட நல்லதுக்காம்... பெட்ரோல், டீசல் விலை இன்னும் கடுமையாக உயர்கிறது... எவ்வளவு தெரியுமா?

பிஎஸ்-4 எரிபொருளில் சல்பர் அளவு 50 பிபிஎம்-ஆக (PPM) இருக்கும். ஆனால் பிஎஸ்-6 எரிபொருளில் சல்பர் அளவு 10 பிபிஎம்-ஆக குறைக்கப்பட்டு விடும். எனவே பிஎஸ்-4 எரிபொருளுடன் ஒப்பிடும்போது, பிஎஸ்-6 எரிபொருள் மிகவும் சுத்தமானது. இதன் காரணமாக அதன் விலையும் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவோட நல்லதுக்காம்... பெட்ரோல், டீசல் விலை இன்னும் கடுமையாக உயர்கிறது... எவ்வளவு தெரியுமா?

தற்போது இந்தியாவில் பிஎஸ்-4 எரிபொருள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது யூரோ-4 எரிபொருளுக்கு இணையானது. ஆனால் வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்தியா முழுவதும் பிஎஸ்-6 எரிபொருளை கிடைக்க செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதன் காரணமாக வரும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்தியாவோட நல்லதுக்காம்... பெட்ரோல், டீசல் விலை இன்னும் கடுமையாக உயர்கிறது... எவ்வளவு தெரியுமா?

பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒரு லிட்டருக்கு 50 பைசா முதல் 1 ரூபாய் வரை உயர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (Indian Oil Corporation - IOC) தற்போது பிஎஸ்-6 கிரேடு எரிபொருளை உற்பத்தி செய்ய தொடங்கியுள்ளது.

இந்தியாவோட நல்லதுக்காம்... பெட்ரோல், டீசல் விலை இன்னும் கடுமையாக உயர்கிறது... எவ்வளவு தெரியுமா?

இதுகுறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தலைவர் சஞ்சீவ் சிங் கூறுகையில், ''இந்தியாவில் வரும் ஏப்ரல் 1 முதல், பெட்ரோல் மற்றும் டீசல் 100 சதவீதம் பிஎஸ்-6 விதிகளுக்கு இணக்கமானதாக இருக்கும்'' என்றார். பிஎஸ்-6 எரிபொருளை உருவாக்கும் வகையில், தன் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்துவதற்காக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 17 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது.

இந்தியாவோட நல்லதுக்காம்... பெட்ரோல், டீசல் விலை இன்னும் கடுமையாக உயர்கிறது... எவ்வளவு தெரியுமா?

அதே சமயம் இந்த இன்டஸ்ட்ரீ சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்துள்ளது. அதே சமயம் பிஎஸ்-6 விதிகளால் பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு உயரவுள்ளது? என்பது சரியாக தெரியவில்லை. எனினும் ஒரு லிட்டருக்கு 50 பைசா முதல் 1 ரூபாய் வரை உயர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவோட நல்லதுக்காம்... பெட்ரோல், டீசல் விலை இன்னும் கடுமையாக உயர்கிறது... எவ்வளவு தெரியுமா?

இது வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் சுமையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம் இந்தியாவின் சுற்றுச்சூழலையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. புது டெல்லியை போன்று இந்தியாவின் வேறு எந்த நகரிலும் காற்று மாசுபாடு பிரச்னை ஏற்பட்டு விடக்கூடாது. எனவே கூடுதல் விலை கொடுத்து பெட்ரோல், டீசல் வாங்க தயாராகி கொள்ளுங்கள்.

இந்தியாவோட நல்லதுக்காம்... பெட்ரோல், டீசல் விலை இன்னும் கடுமையாக உயர்கிறது... எவ்வளவு தெரியுமா?

தற்போதைய நிலையில் தலைநகர் டெல்லியில் பிஎஸ்-6 எரிபொருள் கிடைக்கிறது. அதே சமயம் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் 100 சதவீதம் பிஎஸ்-6 எரிபொருளை கிடைக்க செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏப்ரல் 1ம் தேதிக்கு முன்னதாகவே இந்தியா முழுவதும் பிஎஸ்-6 எரிபொருள் சப்ளையை தொடங்கி விடும் நம்பிக்கையுடன் எண்ணெய் நிறுவனங்கள் உள்ளன.

இந்தியாவோட நல்லதுக்காம்... பெட்ரோல், டீசல் விலை இன்னும் கடுமையாக உயர்கிறது... எவ்வளவு தெரியுமா?

பிஎஸ்-6 விதிகளால், பெட்ரோல், டீசல் விலை மட்டுமல்லாது வாகனங்களின் விலையும் உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிற்கு பிஎஸ்-6 விதிமுறைகள் மிகவும் அவசியமானது என்பதில் மாற்று கருத்தே கிடையாது. ஆனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்ற கூடுதல் சுமையை தங்கள் தலையில் சுமத்த கூடாது என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்தியாவோட நல்லதுக்காம்... பெட்ரோல், டீசல் விலை இன்னும் கடுமையாக உயர்கிறது... எவ்வளவு தெரியுமா?

ஏனெனில் இந்தியாவில் ஏற்கனவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகமாக இருப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், இன்னும் விலை உயர்ந்தால், அது அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்விற்கும் வழி வகுத்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

English summary
BS-6 Emission Norms: Petrol, Diesel Prices To Go Up From April 2020. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X