2020 மஹிந்திரா கேயூவி100 நெக்ஸ்ட் காரில் டீசல் என்ஜின் கிடைக்காது... விலையும் உயர்ந்தது...!

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்ட காம்பெக்ட் எஸ்யூவி மாடலான கேயூவி100 நெக்ஸ்ட் காரின் பெட்ரோல் வேரியண்ட்டை இன்னும் சில வாரங்களில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

2020 மஹிந்திரா கேயூவி100 நெக்ஸ்ட் காரில் டீசல் என்ஜின் கிடைக்காது... விலையும் உயர்ந்தது...!

இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள லேட்டஸ்ட் தகவலில் இந்த எஸ்யூவி காரின் ஆரம்ப விலையை எக்ஸ்ஷோரூமில் ரூ.5.50 லட்சத்தில் நிர்ணயிக்க மஹிந்திரா நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

2020 மஹிந்திரா கேயூவி100 நெக்ஸ்ட் காரில் டீசல் என்ஜின் கிடைக்காது... விலையும் உயர்ந்தது...!

ஆனால் என்ஜின் அப்கிரேட்டை தவிர்த்து, இந்த விலை மதிப்பிற்கு ஏற்ப இந்த பிஎஸ்6 கார் அதன் முந்தைய தலைமுறை மாடலில் இருந்து டிசைன் மற்றும் தொழிற்நுட்பங்களில் எந்த அப்டேட்டையும் பெறவில்லை.

2020 மஹிந்திரா கேயூவி100 நெக்ஸ்ட் காரில் டீசல் என்ஜின் கிடைக்காது... விலையும் உயர்ந்தது...!

வெளிப்புறத்தில் இந்த கார், ஸ்போர்ட்டியான டிசைனில் நேர்த்தியான க்ரில், எல்இடி டிஆர்எல்களுடன் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் மற்றும் சில்வர் நிற ஸ்கிட் ப்ளேட்கள் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது. இதில் சில்வர் ப்ளேட் காரின் பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது.

2020 மஹிந்திரா கேயூவி100 நெக்ஸ்ட் காரில் டீசல் என்ஜின் கிடைக்காது... விலையும் உயர்ந்தது...!

பக்கவாட்டில் கருப்பு நிற சக்கர ஆர்ச்கள், ஆர்விஎம்கள் மற்றும் ட்யூல்லெஸ் டயருடன் உள்ள ரேடியல் அலாய் சக்கரங்கள் போன்ற பாகங்கள் உள்ளன. மஹிந்திரா கேயூவி100 காரின் உட்புற கேபின் 6 நபர்கள் பயணம் செய்யும் அளவிற்கு மிகவும் விசாலமாக உள்ளது.

2020 மஹிந்திரா கேயூவி100 நெக்ஸ்ட் காரில் டீசல் என்ஜின் கிடைக்காது... விலையும் உயர்ந்தது...!

தேவைக்கு ஏற்றாற்போல் உயரத்தை மாற்றக்கூடிய ஓட்டுனர் இருக்கையை பெற்றுள்ள இந்த கார் ஃபேப்ரிக் துணியால் அலங்கரிக்கபட்ட கேபின், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் 3-ஸ்போக் பல செயல்பாடுகள் கொண்ட ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்ட வசதிகளையும் உட்புறத்தில் கொண்டுள்ளது.

2020 மஹிந்திரா கேயூவி100 நெக்ஸ்ட் காரில் டீசல் என்ஜின் கிடைக்காது... விலையும் உயர்ந்தது...!

இவை மட்டுமின்றி டிஜிட்டலில் ஓட்டுனருக்கு தேவையான வசதிகளை வழங்கக்கூடிய திரை, இணைப்பு வசதிகளுடன் உள்ள 7 இன்ச் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் தற்போதைய கேயூவி100 நெக்ஸ்ட் பிஎஸ்4 மாடல் கார் கொண்டுள்ள அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் பெற்றுள்ளது.

2020 மஹிந்திரா கேயூவி100 நெக்ஸ்ட் காரில் டீசல் என்ஜின் கிடைக்காது... விலையும் உயர்ந்தது...!

மஹிந்திரா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட கேயூவி100 நெக்ஸ்ட் காரில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 1.2 லிட்டர் மூன்று-சிலிண்டர் பெட்ரோல் என்ஜினை பொருத்தியுள்ளது. அதிகப்பட்சமாக 83 பிஎச்பி பவரையும் 115 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜினுடன் ட்ரான்ஸ்மிஷனிற்காக 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

2020 மஹிந்திரா கேயூவி100 நெக்ஸ்ட் காரில் டீசல் என்ஜின் கிடைக்காது... விலையும் உயர்ந்தது...!

தற்போதைய மாடலிலும் வழங்கப்பட்டுள்ள இந்த என்ஜின் அமைப்பு பிஎஸ்4 தரத்திலும் இதே ஆற்றல் அளவை தான் வெளிப்படுத்தி வருகிறது. புதிய கேயூவி100 நெக்ஸ்ட் பிஎஸ்6 மாடலின் எக்ஸ்ஷோரூம் விலைகளை பற்றி வெளிவந்துள்ள தகவலின்படி பார்த்தால், இந்த காரின் எண்ட்ரீ லெவல் கே2+ ட்ரிம் ஆனது ரூ.5.50 லட்சத்தையும், மிட்-லெவல் கே4+ ட்ரிம் ஆனது ரூ.5.96 லட்சத்தையும், டாப் ட்ரிம் ஆன கே8 அதிகப்பட்சமாக ரூ.7.12 லட்சத்தையும் விலையாக பெற்றுள்ளன.

2020 மஹிந்திரா கேயூவி100 நெக்ஸ்ட் காரில் டீசல் என்ஜின் கிடைக்காது... விலையும் உயர்ந்தது...!

இவற்றின் விலை தற்போதைய விலையை விட ரூ.29,000 வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்சமயம் கேயூவி100 நெக்ஸ்ட் மாடலானது கே2, கே2+, கே4+, கே6+, கே8 மற்றும் கே8 ட்யூல் டோன் என்ற ஆறு விதமான ட்ரிம்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

2020 மஹிந்திரா கேயூவி100 நெக்ஸ்ட் காரில் டீசல் என்ஜின் கிடைக்காது... விலையும் உயர்ந்தது...!

இதில் கே2, கே6+ மற்றும் கே8 ட்யூல் டோன் உள்ளிட்ட ட்ரிம்களின் தயாரிப்பு மற்றும் விற்பனை பிஎஸ்6 அப்டேட்டால் இந்தியாவில் நிறுத்தப்படவுள்ளது. அதேபோல் 5-இருக்கை வெர்சன் தேர்வும் நீக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பிஎஸ்6 மாடல் 6-இருக்கை வெர்சனில் மட்டும் தான் கிடைக்கும்.

2020 மஹிந்திரா கேயூவி100 நெக்ஸ்ட் காரில் டீசல் என்ஜின் கிடைக்காது... விலையும் உயர்ந்தது...!

என்ஜின் தேர்வுகளிலும் தற்போதைய கேயூவி100 நெக்ஸ்ட் மாடலில் வழங்கப்பட்டு வருகின்ற 1.2 லிட்டர் எம்ஃபால்கான் டி75 டர்போசார்ஜ்டு 3-சிலிண்டர் டீசல் என்ஜின் தேர்வை மஹிந்திராவின் இந்த புதிய பிஎஸ்6 மாடல் கார் பெறவில்லை. இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 77 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க் திறனை காருக்கு வழங்கி வருகிறது.

2020 மஹிந்திரா கேயூவி100 நெக்ஸ்ட் காரில் டீசல் என்ஜின் கிடைக்காது... விலையும் உயர்ந்தது...!

அறிமுகத்திற்கு பிறகு பிஎஸ்6 மஹிந்திரா கேயூவி100 நெக்ஸ்ட் மாடல் கார் மாருதி சுசுகி இக்னிஸ், டாடா நெக்ஸான் மற்றும் 2020 ஹோண்டா டபிள்யூஆர்-வி மாடல்களுடன் விற்பனையில் போட்டியிடவுள்ளது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
BS6 Mahindra KUV100 NXT petrol prices revealed details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X