மஹிந்திரா கேயூவி100 பிஎஸ்6 பெட்ரோல் காரின் அதிகப்பட்ச விலையே ரூ.7.12 லட்சம் தானாம்..!

பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்ட மஹிந்திரா கேயூவி100 பெட்ரோல் மாடலின் எக்ஸ்ஷோரூம் விலைகள் வேரியண்ட்கள் வாரியாக வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மஹிந்திரா கேயூவி100 பிஎஸ்6 பெட்ரோல் காரின் அதிகப்பட்ச விலையே ரூ.7.12 லட்சம் தானாம்..!

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் கேயூவி100 மாடலை பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனால் இதன் அறிமுகம் விரைவில் நடைபெறவுள்ளது மட்டுமில்லாமல் முன்பதிவுகள் மற்றும் டெலிவிரிகள் இன்னும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் தொடங்கப்படவுள்ளன.

மஹிந்திரா கேயூவி100 பிஎஸ்6 பெட்ரோல் காரின் அதிகப்பட்ச விலையே ரூ.7.12 லட்சம் தானாம்..!

பிஎஸ்6 மஹிந்திரா கேயூவி100 பெட்ரோல் கார், கே2+, கே4+ மற்றும் கே8 என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த மூன்று கேயூவி100 வேரியண்ட்களும் எக்ஸ்ஷோரூமில் பெறவுள்ள விலையை கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.

Variant Price
K2+ Rs 5.50 Lakh
K4+ Rs 5.96 Lakh
K8 Rs 7.12 Lakh
மஹிந்திரா கேயூவி100 பிஎஸ்6 பெட்ரோல் காரின் அதிகப்பட்ச விலையே ரூ.7.12 லட்சம் தானாம்..!

இதில் கே2+ மாடலின் விலை தற்போதைய விலையை விட ரூ.18,000 அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கே4+ மற்றும் டாப் வேரியண்ட்டான கே8 முறையே ரூ.16,000 மற்றும் ரூ.11,000-ஐ விலை உயர்வாக பெற்றுள்ளன.

மஹிந்திரா கேயூவி100 பிஎஸ்6 பெட்ரோல் காரின் அதிகப்பட்ச விலையே ரூ.7.12 லட்சம் தானாம்..!

பெட்ரோல் வேரியண்ட்களை சேர்த்து மொத்தமாக மஹிந்திரா கேயூவி100 மாடல் தற்சமயம் எக்ஸ்ஷோரூமில் ரூ.5.32 லட்சத்தில் இருந்து ரூ.7.95 லட்சம் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மஹிந்திரா கேயூவி100 பிஎஸ்6 பெட்ரோல் காரின் அதிகப்பட்ச விலையே ரூ.7.12 லட்சம் தானாம்..!

இந்த காரின் பெட்ரோல் வேரியண்ட்களில் வழங்கப்பட்டு வரும் 1.2 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின், விலை உயர்வை பெற்றுள்ள பிஎஸ்6 கேயூவி100 பெட்ரோல் மாடல்களிலும் பொருத்தப்படவுள்ளன. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 83 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

மஹிந்திரா கேயூவி100 பிஎஸ்6 பெட்ரோல் காரின் அதிகப்பட்ச விலையே ரூ.7.12 லட்சம் தானாம்..!

ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக இந்த பெட்ரோல் என்ஜினுடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் தான் வழங்கப்படவுள்ளது. அதேநேரம் தற்போதைய கேயூவி100 மாடலில் உள்ள ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வு நீக்கப்படவுள்ளது.

மஹிந்திரா கேயூவி100 பிஎஸ்6 பெட்ரோல் காரின் அதிகப்பட்ச விலையே ரூ.7.12 லட்சம் தானாம்..!

பிஎஸ்6 மாற்றத்தால் மஹிந்திரா கேயூவி100 மாடலின் டீசல் வேரியண்ட்களின் தயாரிப்பு மற்றும் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்படவுள்ளது. தற்சமயம் டீலர்ஷிப்களில் விற்பனை செய்யப்பட்டுவரும் கேயூவி100 மாடலின் டீசல் வேரியண்ட்கள் 1.2 லிட்டர் எம்ஃபால்கான் டர்போ-சார்ஜ்டு டீசல் என்ஜினை பெற்றுள்ளது.

மஹிந்திரா கேயூவி100 பிஎஸ்6 பெட்ரோல் காரின் அதிகப்பட்ச விலையே ரூ.7.12 லட்சம் தானாம்..!

அதிகப்பட்சமாக 77 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட இந்த டீசல் என்ஜினுடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் நிலையாக வழங்கப்படுகிறது. கேயூவி100 மாடலின் டீசல் வேரியண்ட் நிறுத்தப்படுவதற்கு அதனை பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்துவது அதிக செலவு ஏற்படுத்தும் வேலையாக இருப்பது முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா கேயூவி100 பிஎஸ்6 பெட்ரோல் காரின் அதிகப்பட்ச விலையே ரூ.7.12 லட்சம் தானாம்..!

இருப்பினும் டீசல் வேரியண்ட்களை மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி500, ஸ்கார்பியோ மற்றும் தார் உள்ளிட்ட சில பிஎஸ்6 மாடல்கள் பெறவுள்ளன. 15 இன்ச்சில் அலாய் சக்கரத்தை கொண்டுள்ள கேயூவி100 மாடலில் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான ஓட்டுனர் இருக்கை வழங்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா கேயூவி100 பிஎஸ்6 பெட்ரோல் காரின் அதிகப்பட்ச விலையே ரூ.7.12 லட்சம் தானாம்..!

இவை மட்டுமின்றி ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவுடன் இணைக்கக்கூடிய 7-இன்ச் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், டிஆர்எல் விளக்குகள் மற்றும் ஆடியோ, மொபைல் போன் கண்ட்ரோல் மற்றும் பின்பக்கம் பார்க்கும் கண்ணாடிகளை அட்ஜெஸ்ட் செய்வதற்கான எலக்ட்ரிக் கண்ட்ரோல்களை கொண்ட ஸ்டேரிங் சக்கரம் போன்ற அம்சங்களும் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

மஹிந்திரா கேயூவி100 பிஎஸ்6 பெட்ரோல் காரின் அதிகப்பட்ச விலையே ரூ.7.12 லட்சம் தானாம்..!

பாதுகாப்பு அம்சங்களாக இந்த காரில், முன்புற இரட்டை காற்றுப்பைகள், இபிடியுடன் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம், பின்பக்க பார்க்கிங் சென்சார்ஸ், பகல் மற்றும் இரவு நேரங்களில் தன்னிச்சையாக செயல்படக்கூடிய IRVM, அதிவேகத்தை எச்சரிக்கும் வசதி மற்றும் ஐசோஃபிக்ஸ் அமைப்பால் சான்றழிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இருக்கை உள்ளிட்டவை உள்ளன.

மஹிந்திரா கேயூவி100 பிஎஸ்6 பெட்ரோல் காரின் அதிகப்பட்ச விலையே ரூ.7.12 லட்சம் தானாம்..!

மைக்ரோ-எஸ்யூவி வடிவ காரான கேயூவி100 மாடலில் கடைசியாக 2017ல் மஹிந்திரா நிறுவனம் அப்டேட்களை வழங்கி இருந்தது. அதன்பின் தற்போது என்ஜின் அமைப்பில் மட்டும் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன.

மஹிந்திரா கேயூவி100 பிஎஸ்6 பெட்ரோல் காரின் அதிகப்பட்ச விலையே ரூ.7.12 லட்சம் தானாம்..!

சந்தையில் கேயூவி100 மாடலுக்கு போட்டியாக மாருதி எஸ்-பிரெஸ்ஸோ மற்றும் ரெனால்ட் க்விட் என்ற எஸ்யூவி தோற்ற ஹேட்ச்பேக் கார்கள் உள்ளன. ஆனால் இவை இரண்டும் கேயூவி100 மாடலை விட சிறிய அளவில் தோற்றத்தை கொண்டுள்ளன. இந்த பிரிவில் விரைவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து எச்2எக்ஸ் மைக்ரோ எஸ்யூவி அறிமுகமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 12, 2020, 17:14 [IST]
English summary
BS6 Mahindra KUV 100 Petrol Prices Revealed. Top spec K8 get maximum price of Rs.7.12 lakh
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+