மாருதி சுசுகி செலிரியோ பிஎஸ்6 இந்திய சந்தையில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.4.41 லட்சம்...

மாருதி சுசுகி நிறுவனம் பிஎஸ்6-க்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்ட செலிரியோ மாடலை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய பிஎஸ்6 ஹேட்ச்பேக்கின் விலை ரூ.4.41 லட்சத்தில் இருந்து ரூ.5.67 லட்சமாக இந்திய எக்ஸ்ஷோரூமில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாருதி சுசுகி செலிரியோ பிஎஸ்6 இந்திய சந்தையில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.4.41 லட்சம்...

புதிய செலிரியோ பிஎஸ்6 காரின் ஒவ்வொரு வேரியண்ட்டும் ட்ரீம்மை பொறுத்து ரூ.15,000லிருந்து ரூ.24,000 வரை விலை அதிகரிப்பை பெற்றுள்ளன. இந்த விலை அதிகரிப்பு மொத்தமும் என்ஜின் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்டதற்கு தான்.

மாருதி சுசுகி செலிரியோ பிஎஸ்6 இந்திய சந்தையில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.4.41 லட்சம்...

ஏனெனில், மற்றப்படி இந்த புதிய காரில் உட்புற மற்றும் வெளிப்புற காஸ்மெட்டிக்களில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. இதனால் அதே இரு ஹெட்லைட்கள் வரை நீண்டுள்ள க்ரில் மற்றும் கூர்மையான பம்பர் போன்றவை அப்படியே தொடர்ந்துள்ளன.

மாருதி சுசுகி செலிரியோ பிஎஸ்6 இந்திய சந்தையில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.4.41 லட்சம்...

வெளிப்புற உடல் நிறத்தில் கதவுகளின் ஹேண்டில்கள் மற்றும் பம்பர்கள், டர்ன் இண்டிகேட்டர்களுடன் உள்ள ஓஆர்விஎம்கள், எலக்ட்ரானிக் பவர் ஸ்டேரிங், 60:40 என்ற விகிதத்தில் பிரிக்கப்பட்ட பின்புற இருக்கைகள், ஆடியோ கண்ட்ரோல்களை கொண்ட ஸ்டேரிங், சாவியில்லாமல் காரின் உள்ளே நுழையும் வசதி மற்றும் ஓட்டுனருக்கு மட்டும் தானாக கீழ் இறங்கும் ஜன்னல் பவர் கண்ணாடிகள் உள்ளிட்டவற்றை மாருதி செலிரியோ பிஎஸ்6 மாடல் கொண்டுள்ளது.

மாருதி சுசுகி செலிரியோ பிஎஸ்6 இந்திய சந்தையில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.4.41 லட்சம்...

பாதுகாப்பு அம்சங்களாக காற்றுப்பைகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம், சீட்-பெல்ட்டை நினைவூட்டும் வசதி, குழந்தைகளால் எளிதில் திறக்க முடியாத வகையில் பின்புற கதவுகள், பின்புறத்தில் உயரமாக பொருத்தப்பட்ட ஸ்டாப் விளக்கு, பின்புற கண்ணாடிக்கும் வைபர் மற்றும் வாஷ்ஷர் மற்றும் என்ஜின் இம்பொளிசர் உள்ளிட்டவை இந்த பிஎஸ்6 காருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

மாருதி சுசுகி செலிரியோ பிஎஸ்6 இந்திய சந்தையில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.4.41 லட்சம்...

இந்த மாருதி சுசுகி செலிரியோ காரில் 35 லிட்டர் எரிபொருள் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. ஏஆர்ஐ சான்றிதழ் பெற்ற எரிபொருள் திறனை பெற்றுள்ள இந்த பிஎஸ்6 கார், ஒரு லிட்டரில் 23.10 கிலோமீட்டர் வரை இயங்கும் ஆற்றல் கொண்டதாக உள்ளது.

மாருதி சுசுகி செலிரியோ பிஎஸ்6 இந்திய சந்தையில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.4.41 லட்சம்...

மற்றப்படி இதன் என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. அதே 998சிசி, மூன்று-சிலிண்டர் பெட்ரோல் என்ஜினை தான் பிஎஸ்6 தரத்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 68 பிஎச்பி பவர் மற்றும் 90 என்எம் டார்க் திறனை காருக்கு வழங்குகிறது. ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்கள் உள்ளன.

மாருதி சுசுகி செலிரியோ பிஎஸ்6 இந்திய சந்தையில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.4.41 லட்சம்...

ப்ளாசிங் ரெட், சில்கி சில்வர், ஜொலிக்கின்ற க்ரே, ஆர்டிக் வெள்ளை, டார்க் ப்ளூ மற்றும் டாங்கோ ஆரஞ்ச் என்ற 6 நிறத்தேர்வுகளை தான் இந்த புதிய செலிரியோ பிஎஸ்6 மாடலும் கொண்டுள்ளது. அதேபோல் இந்த மாடலுக்கு போட்டி மாடல்களாக ஹூண்டாய் சாண்ட்ரோ, மாருதி சுசுகி வேகன்ஆர், டட்சன் கோ மற்றும் டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட் உள்ளிட்டவை தொடரவுள்ளன.

மாருதி சுசுகி செலிரியோ பிஎஸ்6 இந்திய சந்தையில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.4.41 லட்சம்...

ஏற்கனவே கூறியதுபோல், இந்த புதிய மாடலின் விலை, முந்தைய மாடலை விட ரூ.15,000லிருந்து ரூ.24,000 வரை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விலை அதிகரிப்பை ஈடுக்கட்டும் விதமாக என்ஜினின் தரம் மட்டுமே பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்டுள்ளதே தவிர்த்து, என்ஜினின் திறனில் எந்த மாற்றமும் கொண்டுவரப்ப்படவில்லை.

மாருதி சுசுகி செலிரியோ பிஎஸ்6 இந்திய சந்தையில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.4.41 லட்சம்...

மாருதி சுசுகி நிறுவனம் தனது பெரும்பாலான மாடல்கள் அனைத்தையும் பிஎஸ்6-க்கு இணக்கமாக அப்டேட் செய்ய திவிரமாக பணியாற்றி வருகிறது. இந்நிறுவனத்தில் இருந்து விரைவில் செலிரியோ எக்ஸ், இக்னிஸ் மற்றும் ஆல்டோ கே10 மாடல்களின் பிஎஸ்6 வெர்சனை எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 21, 2020, 11:39 [IST]
English summary
Maruti Suzuki Celerio BS6 Models Launched In India Starting At Rs 4.41 Lakh
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+