மாருதி சுசுகியின் புதிய எக்ஸ்எல்5 கார் மீண்டும் இந்தியாவில் சோதனை ஓட்டம்...
மாருதி சுசுகியின் நெக்ஸா சேல்ஸ் நெட்வொர்க் மூலமாக விற்பனை செய்யப்படவுள்ள வேகன்ஆர் மாடலின் 'நெக்ஸா' வெர்சன் பல முறை சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதை பார்த்திருப்போம். இந்த நிலையில் தற்போது இந்த மாடலின் ப்ரீமியம் வெர்சனான எக்ஸ்எல்5 சாலை சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது.

குருக்ராம் பகுதியில் நடைபெற்றுள்ள இந்த சோதனை ஓட்டத்தில் கார் முழுவதுமாக மறைக்கப்பட்ட நிலையில் உள்ளது. இதன் காரணமாக மாருதி நிறுவனம் புதிய எக்ஸ்எல்5 காரில் கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்களை கண்டறிவது மிகவும் கடினமாக உள்ளது.

இருப்பினும் மொத்த தோற்ற அளவில் இந்த சோதனை கார் வேகன்ஆர் மாடலை ஒத்திருப்பதை கார்அண்ட்பைக் செய்தி தளம் வெளியிட்டுள்ள ஸ்பை படங்களின் மூலமாக அறிய முடிகிறது. குறிப்பாக காரின் பின்பகுதி கிட்டத்தட்ட வேகன்ஆரில் உள்ளதை போலவே காட்சியளிக்கிறது.

படத்தில் காரை சற்று உற்றுப்பார்த்தால் காரின் கேரக்டர் லைனை சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வரும் புதிய தலைமுறை வேகன்ஆர் மாடலில் பார்த்திருப்போம். மாருதி எக்ஸ்எல்6 காரில் உள்ளது போன்ற க்ளாடிங்குகள் எதுவும் இந்த சோதனை காரில் இல்லை.

இது புதிய எக்ஸ்எல்5 மாடல் ஆனது வேகன்ஆர் காரை காட்டிலும் சற்று மேம்படுத்தப்பட்ட வெர்சன் மட்டும் தான் என்பதை வெளிக்காட்டுகிறது. இந்த வகையில் இந்த சோதனை கார் முன்புறத்தில் வேகன்ஆர் மாடல் உடன் ஒப்பிடுகையில் சில கூடுதலான வளைவுகளுடன் வித்தியாசமான க்ரில் மற்றும் பம்பரை கொண்டுள்ளது.

இவற்றுடன் எல்இடி டிஆர்எல்களுடன் பிளவுப்பட்ட ஹெட்லேம்ப்கள் மற்றும் பம்பருக்கு வட்ட வடிவிலான ஹெட்லேம்ப்கள் உள்ளிட்டவையும் இந்த சோதனை காரில் உள்ளன. இதனால் எக்ஸ்எல்6 மாடலில் இருப்பதை போன்று டெயில்லேம்ப்களையும் எல்இடி தரத்தில் எதிர்பார்க்கலாம்.

இவை தவிர்த்து என்ஜின் அமைப்பில் புதிய எக்ஸ்எல்5 மாடல் வேகன்ஆர் காரை தான் பின் தொடரவுள்ளது. இதன்படி வேகன்ஆரின் இந்த ப்ரீமியம் வெர்சன் காரில் 77 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 1.2 லிட்டர், 4-சிலிண்டர் கே-சீரிஸ் பிஎஸ்6 என்ஜின் வழங்கப்படவுள்ளது.

என்ஜின் அமைப்பு மட்டுமின்றி ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளையும் எக்ஸ்எல்5 கார் வேகன்ஆரில் இருந்தே பெறவுள்ளது. தற்போதைய மாருதி வேகன்ஆர் ஹேட்ச்பேக் மாடலில் ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications








