உலகின் மிக மிக விலையுயர்ந்த நம்பர் பிளேட்... எவ்ளோனு தெரிஞ்சா இன்னைக்கு நைட் தூங்கவே மாட்டீங்க..!

உலகின் மிக மிக விலையுயர்ந்த காரின் நம்பர் பிளேட் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

உலகின் மிக மிக விலையுயர்ந்த நம்பர் பிளேட்... எவ்ளோனு தெரிஞ்சா இன்னைக்கு நைட் தூங்கவே மாட்டீங்க..!

புகாட்டி சிரோன், உலகின் மிகவும் ஆடம்பரமான மற்றும் விலையுயர்ந்த காராக இருந்து வருகின்றது. இந்த காரை புகாட்டி நிறுவனம் மிகக் குறைந்த எண்ணிக்கையில் தயாரித்து வருவதால் அதனை ஒரு சில செல்வந்தர்கள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். எனவேதான் இக்காரை சாலையில் காண்பது அரிதினும் அரிதாக உள்ளது.

உலகின் மிக மிக விலையுயர்ந்த நம்பர் பிளேட்... எவ்ளோனு தெரிஞ்சா இன்னைக்கு நைட் தூங்கவே மாட்டீங்க..!

குறிப்பிட்டு கூற வேண்டுமானால் இந்தியாவில் மிக மிக குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே இக்கார் காட்சியளிக்கின்றது. ஆனால் வெளிநாடுகளில், குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம் போன்ற பணக்கார நாடுகளில் இக்காரை ஏராளமாக காண முடிகின்றது.

உலகின் மிக மிக விலையுயர்ந்த நம்பர் பிளேட்... எவ்ளோனு தெரிஞ்சா இன்னைக்கு நைட் தூங்கவே மாட்டீங்க..!

அவ்வாறு, துபாயில் காணப்பட்ட ஓர் அரிய வகை புகாட்டி சிரோன் கார்குறித்த சுவாரஷ்ய தகவலே தற்போது வெளியாகியுள்ளது. அக்கார், அதன் விலையைக் காட்டிலும் பல மடங்கு உயர்ந்த விலையைக் கொண்ட நம்பர் பிளேட்டைக் கொண்டிருப்பதாக அத்தகவல் தெரிவிக்கின்றது. இதுகுறித்த வீடியோவை மோ வ்லோக்ஸ் எனும் யுட்யூப் சேனல் வெளியிட்டுள்ளது.

உலகின் மிக மிக விலையுயர்ந்த நம்பர் பிளேட்... எவ்ளோனு தெரிஞ்சா இன்னைக்கு நைட் தூங்கவே மாட்டீங்க..!

புகாட்டி சிரோன் கார் துபாயில் ரூ. 25 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்பட்டு வருகின்றது. இதில் கூடுதல் சிறப்பு வசதி சேர்க்கப்படுமானால் இன்னும் ஒரு சில கோடிகள் அதில் ஒட்டிக்கொள்ளும். இத்தகைய உச்சபட்ச விலையையே மிஞ்சும் வகையில் அக்காரின் துபாய் 9 (DUBAI 9) என்ற பதிவெண் உள்ளது.

உலகின் மிக மிக விலையுயர்ந்த நம்பர் பிளேட்... எவ்ளோனு தெரிஞ்சா இன்னைக்கு நைட் தூங்கவே மாட்டீங்க..!

இந்த பதிவெண்ணுக்காக புகாட்டி சிரோன் உரிமையாளர் $7,000,000 செலவு செய்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இது இந்திய மதிப்பில் தோரயமாக ரூ. 52 கோடிகள் ஆகும். இந்த தொகையில், அதே புகாட்டி சிரோன் காரின் இரு யூனிட்டுகளை கூடுதலாக வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

உலகின் மிக மிக விலையுயர்ந்த நம்பர் பிளேட்... எவ்ளோனு தெரிஞ்சா இன்னைக்கு நைட் தூங்கவே மாட்டீங்க..!

இத்தகைய உச்சபட்ச தொகையையே அக்காரின் உரிமையாளர் நம்பர் பிளேட்டிற்காக செலவு செய்துள்ளார். இதுபோன்ற செயல் துபாய் போன்ற வளர்ந்த நாடுகளில் அரங்கேறுவது மிக சாதாரணமான ஒன்றாக இருக்கின்றது. இந்தியாவிலும்கூட பல லட்சங்கள் செலவில் பேன்சி பதிவெண்ணை வாங்கி பயன்படுத்துபவர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

உலகின் மிக மிக விலையுயர்ந்த நம்பர் பிளேட்... எவ்ளோனு தெரிஞ்சா இன்னைக்கு நைட் தூங்கவே மாட்டீங்க..!

புகாட்டி சிரோன் காருக்கு வழங்கப்பட்டிருக்கும் பதிவெண் ஒற்றை இலக்க எண் என்பதானாலயே மிக மிக விலையுயர்ந்த ஒன்றாக இருக்கின்றது. இதுபோன்ற எண்களை ஒரு சிலர் லாபத்தை ஈட்ட வேண்டும் என்பதற்காகவே பல கோடிகள் செலவில் வாங்குவதாக கூறப்படுகின்றது.

உலகின் மிக மிக விலையுயர்ந்த நம்பர் பிளேட்... எவ்ளோனு தெரிஞ்சா இன்னைக்கு நைட் தூங்கவே மாட்டீங்க..!

ஆம், இதுபோன்ற பேன்சி எண்களின் மதிப்பானது முக்கிய நகரத்தில் வாங்கிபோட்ட நிலத்தைப் போன்றது. காலம் செல்ல செல்ல அதன் மதிப்பும், விலையும் கூடிக் கொண்டே செல்லும். எனவேதான், பலர் தற்போதைய பெரும் செலவைப் பொருட்படுத்தாமல், அதிக விலைக் கொடுத்து வாங்குகின்றனர்.

உலகின் மிக மிக விலையுயர்ந்த நம்பர் பிளேட்... எவ்ளோனு தெரிஞ்சா இன்னைக்கு நைட் தூங்கவே மாட்டீங்க..!

மேலும், ரூ. 52 கோடியில் பதிவெண்ணை வாங்கியதைப் போலவே இங்கிலாந்து நாட்டிலும் ஓர் சம்பவம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரங்கேறியது. அந்த சம்பவத்தில் எஃப்1 (F1) என்ற பதிவெண்ணிற்காக ரூ. 132 கோடியை அதன் உரிமையாளர் வாரி வழங்கியிருந்தார். இந்த உச்சபட்ச விலையுடைய பதிவெண் புகாட்டியின் வெரோன் மாடலில் பொருத்தப்பட்டன.

உலகின் மிக மிக விலையுயர்ந்த நம்பர் பிளேட்... எவ்ளோனு தெரிஞ்சா இன்னைக்கு நைட் தூங்கவே மாட்டீங்க..!

இந்தியர் ஒருவரும்கூட அண்மையில் ரூ. 60 கோடி செலவில் ஒரே பதிவெண்ணை தனது விலையுயர்ந்த கார்களுக்காக வாங்கியிருந்தார். அவர், தற்போது அரபு நாட்டில் வசித்து வருகின்றார். தனது ரால்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட சில கார்களுக்காகவே ரூ. 60 கோடி செலவில் பேன்சி எண்களை ஏலத்தில் எடுத்திருந்தார்.

உலகின் மிக மிக விலையுயர்ந்த நம்பர் பிளேட்... எவ்ளோனு தெரிஞ்சா இன்னைக்கு நைட் தூங்கவே மாட்டீங்க..!

இந்த நிலையிலேயே புகாட்டி சிரோன் பதிவெண் சம்பவம் துபாயில் தற்போது அரங்கேறியிருக்கின்றது. இக்கார், அதன் விலையைப் போலவே மிக மிக அதிக திறன் கொண்ட வாகனம் என கூறப்படுகின்றது. அதாவது, புகாட்டி நிறுவம் இதுவரை தயாரித்த வாகனங்களிலேயே சிரோன் மட்டுமே அதிக திறன் வாய்ந்த ஸ்போர்ட்ஸ் கார் என கூறப்படுகின்றது.

இந்த காரில் 8.0 லிட்டர் டபிள்யூ12 குவாட் டர்போ சார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 1,479 பிஎச்பி பவரை வெளியேற்றும். இதன் திறனானது, வெறும் 2.4 செகண்டிலேயே காரை மணிக்கு நூறு கிலோமீட்டர் வேகத்தில் செலுத்த உதவும். மேலும், இக்கார் மணிக்கு 420 கிமீ வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bugatti Chiron Gets Rs.52 Crore Worthable NumberPlate. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X