ரூ.24 கோடி மதிப்பில் புகாட்டி வெளியிட்ட ரொம்பவே ஸ்பெஷலான சிரோன் கார்!

தனித்துவமான அம்சங்களுடன் ஸ்பெஷலான சிரோன் கார் மாடலை புகாட்டி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த லிமிடேட் எடிசன் மாடல் குறித்த பல முக்கியத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரூ.24 கோடி மதிப்பில் புகாட்டி வெளியிட்ட ரொம்ப ஸ்பெஷல் சிரோன் கார்!

அதிவேக கார்களை தயாரிப்பதில் புகாட்டி நிறுவனம் உலக அளவில் பிரபலமானது. தற்போது இந்த நிறுவனம் விற்பனை செய்து வரும் சிரோன் கார் உலகின் பெரும் கோடீஸ்வரர்களின் கராஜை அலங்கரிக்கும் முக்கிய மால்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

ரூ.24 கோடி மதிப்பில் புகாட்டி வெளியிட்ட ரொம்ப ஸ்பெஷல் சிரோன் கார்!

அதிவேகம், தொழில்நுட்பம் என அனைத்து அம்சங்களிலும் இந்த கார் வாடிக்கையாளர்களின் அந்தஸ்தை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ளது. அதேபோன்றே, இதன் ஓட்டுதல் அனுபவமும் பலருக்கு கனவாக இருந்து வருகிறது.

ரூ.24 கோடி மதிப்பில் புகாட்டி வெளியிட்ட ரொம்ப ஸ்பெஷல் சிரோன் கார்!

இந்த நிலையில், சிரோன் காரின் புதிய லிமிடேட் எடிசன் மாடலை புகாட்டி நிறுவனம் வெளியிட்டுள்ளது. புகாட்டி சிரோன் ஸ்போர்ட் லெஸ் லெஜென்ட்ஸ் டூ சியல் என்ற பெயரில் இந்த மாடல் வந்துள்ளது. கடந்த 20ம் நூற்றாண்டு காலத்தில் விமானத் தயாரிப்பு மற்றும் பந்தய களங்களில் தனது வெற்றியை கொண்டாடும் விதமாக இந்த லிமிடேட் எடிசன் மாடலை புகாட்டி வெளியிட்டுள்ளது.

ரூ.24 கோடி மதிப்பில் புகாட்டி வெளியிட்ட ரொம்ப ஸ்பெஷல் சிரோன் கார்!

இந்த ஸ்பெஷல் புகாட்டி சிரோன் கார்களுக்கு க்ரிஸ் செல்பென்ட் என்ற சாம்பல் வண்ண மேட் ஃபினிஷ் செய்யப்பட்டு தனித்துவமாக மாற்றப்பட்டுள்ளது. பானட், கூரை மற்றும் பின்புறம் வரை வெள்ளை வண்ணத்தில் கோடு அலங்காரம், பக்கவாட்டில் பிரான்ஸ் நாட்டின் தேசியக் கொடியின் வண்ணங்களுடன் கூடிய ஸ்டிக்கர் அலங்காரம் தனித்துவமாக தெரிகிறது.

ரூ.24 கோடி மதிப்பில் புகாட்டி வெளியிட்ட ரொம்ப ஸ்பெஷல் சிரோன் கார்!

க்ளாஸ் பிளாக் ஃபினிஷ் எனப்படும் விசேஷ கருப்பு வண்ணம் தீட்டப்பட்ட க்ரில் அமைப்பு, விமானத்தின் புரோப்பல்லருடன் கூடிய எஞ்சின் போன்ற ஸ்டிக்கர் அலங்காரம், புகைப்போக்கியில் முப்பரிமாண ஸ்டிக்கர் ஆகியவற்றுடன் கவர்ந்து இழுக்கிறது. உட்புறத்தில் சீட் ஹெட்ரெஸ்ட் அமைப்பிலும் சிறப்பு பதிப்புக்கான பேட்ஜ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ரூ.24 கோடி மதிப்பில் புகாட்டி வெளியிட்ட ரொம்ப ஸ்பெஷல் சிரோன் கார்!

புதிய புகாட்டி சிரோன் ஸ்பெஷல் எடிசன் மாடலின் கதவுகளை திறக்கும்போது ஸ்பெஷல் சின்னம் ஒன்று தரையில் தெரியும் வகையிலான படூல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. உட்புறத்தில் கதவுகளின் பேனல்களில் புகாட்டியின் நியோபோர்ட் 17 விமானம் மற்றும் புகாட்டி டைப் 13 காரின் வரைபட அமைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.24 கோடி மதிப்பில் புகாட்டி வெளியிட்ட ரொம்ப ஸ்பெஷல் சிரோன் கார்!

இந்த காருக்கு விசேஷ வகை இருக்கைகளும், இரண்டு பிரிவாக வடிவமைக்கப்பட்டுள்ள சன்ரூஃப் அமைப்பு ஆகியவற்றை வாடிக்கையாளர்கள் கூடுதல் தேர்வாக பெற முடியும்.

ரூ.24 கோடி மதிப்பில் புகாட்டி வெளியிட்ட ரொம்ப ஸ்பெஷல் சிரோன் கார்!

மொத்தமாக 20 யூனிட்டுகள் மட்டுமே உற்பத்தி செய்து விற்பனை செய்யப்பட உள்ளன. ஒவ்வொரு காரும் 3.42 மில்லியன் டாலர்கள் விலை மதிப்பு கொண்டது. அதாவது, இந்திய மதிப்பில் ரூ.24.2 கோடி மதிப்பு கொண்டதாக இருக்கிறது.

Most Read Articles
மேலும்... #புகாட்டி #bugatti
English summary
French car maker, Bugatti has revealed Chiron Sport Les Légendes du Ciel limited edition model tribute to aviation history.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X