புதிய ஸ்போர்ட்ஸ் வெர்சன் காரை ஐரோப்பிய வாடிக்கையாளர்களின் பார்வைக்கு கொண்டு வந்த புகாட்டி...

புகாட்டி நிறுவனம் புதிய தயாரிப்பான சிரோன் புர் மாடலின் ஸ்போர்ட்ஸ் வெர்சனை ஐரோப்பாவில் உள்ள தனது டீலர்ஷிப்களில் சில குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்காக காட்சிக்காக வைத்துள்ளது. இந்த புதிய புகாட்டி மாடலை பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

புதிய ஸ்போர்ட்ஸ் வெர்சன் காரை ஐரோப்பிய வாடிக்கையாளர்களின் பார்வைக்கு கொண்டு வந்த புகாட்டி...

கொரோனா வைரஸ் தீவிரம் அடைவதற்கு முன்பாக இருந்தே சிரோன் புர் மாடலின் இந்த புதிய வெர்சனின் தயாரிப்பு பணியில் புகாட்டி நிறுவனம் ஈடுப்பட்டு வந்தது. ஆனால் அதன்பின் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவ தொடங்கியதை அடுத்து வைரஸில் இருந்து மக்களை மீட்டும் முயற்சியில் இந்நிறுவனம் தன்னை ஈடுப்படுத்தி கொண்டது.

புதிய ஸ்போர்ட்ஸ் வெர்சன் காரை ஐரோப்பிய வாடிக்கையாளர்களின் பார்வைக்கு கொண்டு வந்த புகாட்டி...

ஆனால் தற்போது பெரும்பான்மையான நாடுகளில் ஊரடங்கில் தளர்வு கொண்டுவரப்பட்டுள்ளதால் புதிய சிரோன் புர் வெர்சனின் தயாரிப்பு பணிகளை முழுவதுமாக நிறைவு செய்து தற்போது ஐரோப்பில் காட்சிக்காக இந்நிறுவனம் வைத்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்களை புகாட்டி நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

MOST READ: பருவமழை தொடங்க போகுது... மழை நீரில் இருந்து வாகனங்களை பாதுகாக்க எளிமையான வழி என்னென்ன..?

புதிய ஸ்போர்ட்ஸ் வெர்சன் காரை ஐரோப்பிய வாடிக்கையாளர்களின் பார்வைக்கு கொண்டு வந்த புகாட்டி...

இதன் மூலம் இந்த கார் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டிருப்பது உறுதிப்படுத்த படுகிறது. வழக்கமான சிரோன் புர் மாடலின் புதிய ஸ்போர்ட்ஸ் வெர்சனான இதில் இந்நிறுவனம் அதே கட்ட்டமைப்பையும், உடல் டிசைனையும், என்ஜின் அமைப்பையும் தான் வழங்கியுள்ளது.

புதிய ஸ்போர்ட்ஸ் வெர்சன் காரை ஐரோப்பிய வாடிக்கையாளர்களின் பார்வைக்கு கொண்டு வந்த புகாட்டி...

இருப்பினும் இந்த ஸ்போர்ட்ஸ் வெர்சன் சந்தையில் விற்பனையில் உள்ள சிரோன் புர் மாடலை காட்டிலும் 50 கிலோ எடையை குறைவாக கொண்டு உள்ளது. ஸ்போர்ட்ஸ் பயன்பாட்டிற்காக இந்த காரில் மாங்கனீசம் சக்கரங்கள், 3டி பிரிண்டிங்கில் டைட்டானியம் எக்ஸாஸ்ட் முனை, குறைவான எடையில் ப்ரேக் டிஸ்க் மற்றும் ஹைட்ராலிக் சிஸ்டம் இல்லாத, நிலையான பின்புற இறக்கைகள் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன.

MOST READ: வெடிக்குண்டு வைத்தாலும் இந்த காரை தகர்க்க முடியாது போலருக்கே... பாதுகாப்பு அம்சங்களுடன் 2020 ஆடி ஏ8

புதிய ஸ்போர்ட்ஸ் வெர்சன் காரை ஐரோப்பிய வாடிக்கையாளர்களின் பார்வைக்கு கொண்டு வந்த புகாட்டி...

இவற்றுடன் புகாட்டி நிறுவனத்தின் பொறியியலாளர்கள் காரின் சஸ்பென்ஷன் அமைப்பையும் திருத்தி அமைத்துள்ளனர். இதன் காரணமாக இந்த காரில் சஸ்பென்ஷன் செட்அப் ஆனது மறுவேலை செய்யப்பட்ட டேம்பர்கள், விறைபான ஸ்ப்ரிங்குகள் மற்றும் நெகட்டிவ் கேம்பர் உள்ளிட்டவற்றுடன் உள்ளது.

புதிய ஸ்போர்ட்ஸ் வெர்சன் காரை ஐரோப்பிய வாடிக்கையாளர்களின் பார்வைக்கு கொண்டு வந்த புகாட்டி...

இருப்பினும் இந்த அமைப்பு தற்போதைய மாடலின் சஸ்பென்ஷனின் நிகரான எடையிலேயே வழங்கப்பட்டுள்ளது. இவை மட்டுமில்லாமல் காரில் டயர்களும் புதியதாக

மிச்செலின் நிறுவனத்தின் பைலட் ஸ்போர்ட் கப் 2 பிரிவில் இருந்து பெறப்பட்டுள்ளன.

MOST READ: மகன் கீழே விழுந்தது கூட தெரியாமல் பைக் பயணம்... தந்தையை கழுவி ஊற்றும் தமிழக மக்கள்... ஏன் தெரியுமா?

புதிய ஸ்போர்ட்ஸ் வெர்சன் காரை ஐரோப்பிய வாடிக்கையாளர்களின் பார்வைக்கு கொண்டு வந்த புகாட்டி...

சிரோன் புர் மாடலின் இந்த ஸ்போர்ட்ஸ் வெர்சனிலும் வழக்கமான 8.0 லிட்டர் டபிள்யூ16 என்ஜின் அமைப்பு தான் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 1479 பிஎச்பி பவரையும், 1600 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

புதிய ஸ்போர்ட்ஸ் வெர்சன் காரை ஐரோப்பிய வாடிக்கையாளர்களின் பார்வைக்கு கொண்டு வந்த புகாட்டி...

ஆனால் இந்த என்ஜின் சிரோன் புர் மாடலின் டாப் வேரியண்ட்களில் 200 ஆர்பிஎம் அதிகமாக 6,900 ஆர்பிஎம் வரையில் புதுப்பிக்க அனுமதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு பொருத்தப்படுகிறது. இதன் புதிய ஸ்போர்ட்ஸ் வெர்சனில் கியர்பாக்ஸ் உடன் 80 சதவீத பாகங்களை புதியதாக பொருத்தியுள்ளதாக புகாட்டி நிறுவனம் கூறியுள்ளது.

MOST READ: சும்மா கெத்து காட்றாங்க... மீண்டும் பட்டைய கௌப்ப தொடங்கிய மாருதி சுஸுகி... மேட்டர் என்னனு தெரியுமா?

புதிய ஸ்போர்ட்ஸ் வெர்சன் காரை ஐரோப்பிய வாடிக்கையாளர்களின் பார்வைக்கு கொண்டு வந்த புகாட்டி...

ஆனால் காரின் ஏரோ ட்ராக் அதிகரிக்கப்பட்டுள்ளதால் இந்த புதிய ஸ்போர்ட்ஸ் வெர்சனின் அதிகப்பட்ச வேகம் 350kmph ஆக குறைந்துள்ளது. வழக்கமான சிரோன் புர் மாடல் 420kmph வரையில் அதிகப்பட்சமாக இயங்கும் திறன் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #புகாட்டி #bugatti
English summary
Bugatti Chiron Pur Sport Showcased In Europe
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more