Just In
- 30 min ago
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- 2 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 4 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 5 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
Don't Miss!
- News
ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை உறுதி -வழக்கறிஞருக்கு முறைப்படி கடிதம் அனுப்பிய சிறை நிர்வாகம்..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புல்லட் ப்ரூஃப் கண்ணாடியும், மஹிந்திரா தயாரிப்புகளும்... எது வலுவானது? வாருங்கள் வீடியோவில் பார்க்கலாம்...
மிஸ்டர் இந்தியன் ஹேக்கர் முற்றிலும் சோதனை பற்றிய வீடியோவை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ மற்றும் தகவலை இப்பதிவில் காணலாம்.

வேலைக்கு சம்பாதித்த காலம் எல்லாம் மாறிடுச்சி. இப்போ எல்லாம் ஒரு சில இளைஞர்கள் பணம் சம்பாதிக்க புது வழியைத் தேர்வு செய்ய தொடங்கிட்டாங்க. லாக்டவுண் வந்த காலத்திலேயே உங்களால் அதை உணர்ந்திருக்க முடியும். மிக முக்கியமான செல்போன் ஆப்-களில் ஒன்றான யுட்யூபை திறந்தால்போது எங்க சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க, எங்க சேனல ஃபாலோவ் பண்ணுங்க இப்படினு ஒவ்வொருத்தரும் வீடியோவைப் போட்டு கண்ண கட்ட வச்சிர்றாங்க.

இதுமட்டுமின்றி விநோத வீடியோக்களைப் போட்டு பார்வையாளர்களைக் கவரும் முயற்சியிலும் ஈடுபடுறாங்க. அந்தவகையில், புல்லட் ப்ரூஃப் கண்ணாடி மீது மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ மற்றும் டிராக்டர்களை ஏற்றி விநோத வீடியோ ஒன்றை எடுத்து ஓர் யுட்யூப் சேனல் வெளியிட்டுள்ளது.

10.5 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்ட மிஸ்டர் இந்தியன் ஹேக்கர் (MR. INDIAN HACKER) எனும் யுட்யூப் சேனலே இவ்வீடியோவை வெளியிட்டிருக்கின்றது. புல்லட் ஃப்ரூஃப் கண்ணாடியின் திறனைக் கண்டறியும் நோக்கில் இந்த விநோத பல பரீட்சை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

இதற்காக 50 மிமீ அளவுள்ள புல்லட் ப்ரூஃப் கண்ணாடியே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. எத்தனை லேயர்கள் கொண்ட கண்ணாடி பயன்படுத்தப்பட்டது என யுட்யூப் தளம் குறிப்பிடவில்லை. இருப்பினும், மஹிந்திரா பொலிரோ மற்றும் டிராக்டர்களை இதன் மீது ஏற்றும்போது திடமாக இருந்த கண்ணாடி டொயோட்டா ஃபார்ச்சுனர் காரின் முன் வீல் ஏறிய உடன் பட்டென உடைந்தது.

ஆமாங்க, மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்பு மட்டுமே டொயோட்டா நிறுவனத்தின் ஃபார்ச்சூனர் காரும் இந்த விநோத பரிசோதனை வீடியோவில் பயன்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில், பொலிரோ காரின் எடையைத் தாங்கிய கண்ணாடி, இரண்டாவதாக ஏறிய டிராக்டரின் பின் வீலுக்கு லேசாக இறையாகியது (உடைந்தது). பின்னர், உடனடியாக ஃபார்ச்சூனர் காரின் முன் வீல் பதம் பார்த்ததில் புல்லட் ஃப்ரூப் கண்ணாடி ஒட்டுமொத்தமாக நொறுங்கியது.

பார்ப்பதற்கு மிகவும் பிரம்மாண்டமாய் காட்சியளிக்கும் டிராக்டர் ஒட்டுமொத்தமாகவே 1,800 கிலோ எடைக் கொண்டதாகும். இது பொலிரோவைக் காட்டிலும் 200 கிலோ அதிகம் ஆகும். எனவேதான் பொலிரோ கடக்கும்போது சிறு கீரலைக் கூட சந்திக்காத கண்ணாடிகள் டிராக்டர் ஏறிய உடன் விரிசலடையத் தொடங்கின. தொடர்ந்து, சுமார் 2,200 கிலோ எடைக் கொண்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் ஏறியதும், உடனடியாக நொறுங்கியது.

அப்படியானால் புல்லட் ஃப்ரூப் அவ்வளவு தரமற்றதா என எண்ணி விட வேண்டாம். புல்லட் ப்ரூஃப் கண்ணாடி என்பது பல லேயர் கண்ணாடி அடுக்குகளைக் கொண்டதாகும். இதை நொறுக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், அவ்வளவு எளிதில் நொறுக்கிவிட முடியாது. இதற்கு சான்றே மிஸ்டர் இந்தியன் ஹேக்கர் வெளியிட்ட வீடியோ.
புல்லட் ப்ரூஃப் கண்ணாடியின் லேயர்களுக்கு இடையில் தெர்மோபிளாஸ்டிக் நிரப்பட்டுள்ளது. இதுவே துப்பாக்கியின் புல்லட் நுழைவைத் தடுக்க உதவுகின்றது. குறிப்பாக கண்ணாடி நொறுங்கினாலும் அவ்வளவு எளிதில் தோட்ட நுழைவிற்கு அனுமதிக்காது. எனவேதான் இது பாதுகாப்பானது என கூறப்படுகின்றது. இந்த கண்ணாடிகளும் பன்முக தரத்தில் விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது.