மின்சார வாகனங்களுக்கான அசத்தலான 'பிளேடு' பேட்டரி: பிஒய்டி அறிமுகம்!

அதீத பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய மின்சார வாகனங்களுக்கான பிளேடு பேட்டரியை பிஒய்டி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

மின்சார வாகனங்களுக்கான அசத்தலான 'பிளேடு' பேட்டரி: பிஒய்டி அறிமுகம்!

சீனாவை சேர்ந்த பிஒய்டி நிறுவனம் மின்சார வாகனத் தயாரிப்பில் உலக அளவில் பிரபலமாக விளங்குகிறது. இந்தியாவிலும் பிஒய்டி நிறுவனம் மின்சார பேருந்து விற்பனை சந்தையில் முக்கிய நிறுவனமாக உள்ளது. இந்த நிலையில், மின்சார வாகனங்களுக்கான அதிசிறந்த பேட்டரியை உருவாக்கி இருக்கிறது.

மின்சார வாகனங்களுக்கான அசத்தலான 'பிளேடு' பேட்டரி: பிஒய்டி அறிமுகம்!

பிளேடு பேட்டரி என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த மின்சார வாகன மின்கலன் தொகுப்பானது புதுமையான கட்டமைப்பு முறை மற்றும் தொழில்நுட்பங்களை பெற்றிருக்கிறது. இதனால், சாதாரண லித்தியம் அயான் பேட்டரியை விட அதிக பயண தூரத்தையும், அதீத பாதுகாப்பையும் வழங்கும்.

மின்சார வாகனங்களுக்கான அசத்தலான 'பிளேடு' பேட்டரி: பிஒய்டி அறிமுகம்!

இதன் கட்டமைப்பு முறையால் அதிக பேட்டரி செல்களை தொகுப்பில் வைக்க முடியும். இதனால், அதிக பயண தூரத்தை வழங்கும் வாய்ப்பையும் இந்த பேட்டரி வழங்குவதுடன், அளவிலும் குறிப்பிடத்தக்க அளவு குறைவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்களுக்கான அசத்தலான 'பிளேடு' பேட்டரி: பிஒய்டி அறிமுகம்!

மின்சார வாகனங்கள் விபத்தில் சிக்கும்போது பேட்டரியில் பாதிப்பு ஏற்பட்டால் தீப்பிடிக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இந்த பேட்டரியின் கட்டமைப்பும், தொழில்நுட்பமும் எளிதில் தீப்பிடிக்காத வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக பிஒய்டி தெரிவிக்கிறது.

மின்சார வாகனங்களுக்கான அசத்தலான 'பிளேடு' பேட்டரி: பிஒய்டி அறிமுகம்!

விபத்தில் சிக்கும்போது பேட்டரி நசுங்கும்போது அல்லது வேறு பொருட்களுடன் சேர்ந்து தீப்பிடிக்கும் வாய்ப்பும் உள்ளது. ஆனால், இந்த பேட்டரி நசுங்கினாலும், வளைந்து போனாலும் தீப்பிடிக்காது என்று தெரிவித்துள்ளது.

மின்சார வாகனங்களுக்கான அசத்தலான 'பிளேடு' பேட்டரி: பிஒய்டி அறிமுகம்!

அதேபோன்று, இந்த பேட்டரியை 300 டிகிரி வெப்ப நிலையில் கூட தீப்பிடிக்காத வகையில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த பேட்டரியை சோதனைகளின்போது 260 சதவீதம் வரை அதிக சார்ஜ் செய்தாலும் தீ மற்றும் வெடித்து சிதறும் வாய்ப்பு இல்லை என்று பிஒய்டி நிறுவனம் தெரிவிக்கிறது.

சாதாரண லித்தியம் அயான் பாஸ்பேட் பேட்டரியும் சிறந்த பாதுகாப்பு தன்மைகளுடன் உருவாக்கப்படுகின்றன. ஆனால், அதனை விட பன்மடங்கு அதிக பாதுகாப்பை இந்த பிளேடு பேட்டரி வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த புதிய பிளேடு பேட்டரியானது முதலாவதாக பிஒய்டி நிறுவனத்தின் தி ஹன் என்ற மின்சார செடான் காரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த காரில் இடம்பெறும் பிளேடு பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 605 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்குமாம். 0 - 100 கிமீ வேகத்தை 3.9 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமையையும் இந்த பேட்டரி வழங்கும் என்று பிஒய்டி தெரிவிக்கிறது.

English summary
Chinese EV manufacturer BYD has announced the launch of the Blade Battery, a development set to mitigate concerns about battery safety in electric vehicles.
Story first published: Friday, April 3, 2020, 11:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X